மனம் போல்தான் வாழ்வு

அறிவின் ஆற்றலை வளர்த்துக் கொள்வதுடன் ஆரோக்கியமான மனநிலையையும் வளர்த்துக் கொள்ளுங்கள். மனம் போல்தான் வாழ்வு அமையும் என்பார்கள். 

மனம் செம்மையானால் எண்ணங்கள் தெளிவாகும். எண்ணங்கள் தெளிவானால் செயல்கள் வலுவாகவும், நேர்மையாகவும் இருக்கும். நேர்மையான செயல்கள் மகிழ்ச்சியை உண்டாக்கும். ஆம்!  வாழ்வின் நோக்கமே மகிழ்ச்சியான வாழ்வதுதான்.

மற்றவர்களை, குறிப்பாக உங்களுடன் பணிபுரிவோரைப்பற்றி என்ன நினைக்கின்றீர்கள் என்பதைச் சற்று சிந்தித்துப் பாருங்கள்.  

அவர்களையும் உங்களைப் போலவே சமமாக நினைக்கின்றீர்களா?  அல்லது தாழ்வாகவோ, உயர்வாகவோ நினைக்கின்றீர்களா? என சிந்தித்துப் பாருங்கள். 

மற்றவர்களையும் உங்களைப் போலவே சமமாக அதாவது மனிதத் தன்மைமிக்கவர்களாக நினைப்பீர்கள் என்றால் ஆரோக்கியமான மனநிலையை கொண்டிருக்கின்றீர்கள் என்று பொருள். 

அவ்வாறில்லாமல், உங்களைவிட உயர்வாக அதாவது மற்றவர்கள் எல்லாம் சிறந்தவர்கள் நீங்கள்தான் தாழ்ந்தவர்கள் என்று எண்ணினால் உங்களுக்கு தாழ்வு மனப்பான்மை உண்டாகிறது.  

மாறாக, மற்றவர்களை எல்லாம் தாழ்வாகவும் உங்களை உயர்வாகவும் நினைத்தால் உயர்வு மனப்பான்மை (Supperiority Complex) உண்டாகிறது.

ஒருவருக்கு தாழ்வு மனப்பான்மை இருந்தாலும், உயர்வு மனப்பான்மை இருந்தாலும் அது அவருடைய முன்னேற்றத்தையும், வளர்ச்சியையும் வெகுவாகப் பாதிக்கின்றது.  

எப்படியென்றால் உங்களுக்கு தாழ்வு மனப்பான்மை இருந்தால் மற்றவர்களிடமிருந்து தன்னிச்சையாக நீங்களே விலகிக்கொள்வதுடன், அச்ச உணர்வையும், தோல்வி மனப்பான்மையையும் நெஞ்சில் சுமக்கின்றீர்கள். 

அதே நேரத்தில் உயர்வு மனப்பான்மை இருக்குமென்றால், மற்றவர்களையெல்லாம் தாழ்வாக நினைத்து அவர்களை ஒதுக்கி வைத்து விடுகின்றீர்கள். 

ஆகவே இந்த இரு மனநிலைகளும் உங்களுடைய வெற்றிக்கும், மகிழ்ச்சியான தொழில் வாழ்க்கைக்கும் தடைகளாகும் மற்றவர்களையும் சமமாக மதித்து உள்ளன்போடு பழகும் மனப்பாங்கே சிறந்ததாகும்.

By சக்தி

✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.