நம்பிக்கையே வாழ்வின் மூலதனம்.

உங்கள் வாழ்க்கைக் கனவின் மீது எப்போதும் ஒரு கண் வைத்துக் கொண்டிருங்கள். அதேவேளையில்  அவற்றைச் சிறுகுறிக்கோள்களாக பிரித்துக் கையாளுங்கள்..

இதன் மூலம் சிறந்த முறையில் உங்கள் வாழ்க்கையின் பயணம் தேக்கமின்றி நடக்கும். ஒவ்வொரு நாட்களையும் நீங்கள் கணக்கில் கொள்ள வேண்டும்.

மற்றவர்களை முறையாகக் கையாளுவது எப்படி என்பதை அறிந்து வைத்துக் கொள்ளுங்கள். உறவுகளில் சிக்கல்களைத் தீர்த்து அவை சண்டையாக மாறாத வண்ணம் பார்த்துக் கொள்ளுங்கள்.

மற்றவர்களுடன் உள்ள கருத்து வேறுபாடுகளை சொற்பூசல்களைக் களைந்து நல்ல பழக்கங்களை ஏற்படுத்திக் கொள்ள முயலுங்கள். இதன் மூலம் உறவுகள் நீடிக்கும்.

உங்கள் பயணத்தின் ஒரே துணை நீங்கள் தான். உடன் பயணிப்பவர்கள் அனைவரும் துணை செய்தாலும், செய்யாவிட்டாலும், பயணம் உங்களுடையது.

அவரை மலை போல் நம்பினேன், எமது நம்பிக்கையைக் களைந்து விட்டார். இவரை முழுமையாக  எதிர்பார்த்தேன் ஏமாற்றி விட்டார் என்ற வெற்றுப் புலம்பல்கள், தன்னிரக்கத்தைத் தவிர எதையும் கொடுக்காது.

உங்கள் பாதையில் உதவியவர்களுக்கு, மிகுந்த நன்றியுடன் இருங்கள். ஆனால் உதவி புரியாதவர்கள் பற்றிய வெறுப்பை வளர்த்துக் கொள்ளாதீர்கள்...!

உங்கள் முயற்சிகள் மற்றும் உங்கள் பணிகளில் நீங்கள் காட்டும் பணிவு அல்லது அடக்கம் உங்களின் வெற்றிகளைப் பார்த்து மற்றவர்களை மேலும் மேலும் உங்களைப் பற்றிப் பேச வைக்கும்..

அதிகம் கவனியுங்கள் குறைவாகப் பேசுங்கள், குறைவாக நீங்கள் பேசுவதால், தவறான கருத்துக்களை நீங்கள் தவிர்க்க முடியும்.

அது உங்களை ஒரு நல்ல திறமை வாய்ந்த மனிதராக மாற்றும். நீங்கள் என்ன உரையாடப் போகிறீர்கள் என மற்றவர்கள் எதிர்பார்க்கும் வண்ணம் உங்களது சொல்லாட்சி நிலையாக இருக்க வேண்டும்.

உங்களுக்கு மற்றவர்கள் உதவினால் மகிழ்ச்சி. இல்லையென்றாலும் முயற்சி எனத் தொடர்ந்தால் வளர்ச்சி.

இயன்ற உயரங்களை எட்ட முயல்வதே திறமை. அதற்கு வேண்டியது மலையளவு மன உறுதி.

வாழ்க்கை முன் வைக்கும் ஒவ்வொரு பேராட்டங்களும், உங்களை முன்பை விட, இன்னும் வலிமையாய் செதுக்கித் தரும்.

ஆம் நண்பர்களே...!

பேராட்டங்களை விரும்பி எதிர்கொள்ளுங்கள். அவை இனிமையானவை...!

மற்றவர்கள் செய்ய இயலாத அல்லது செய்திராத செயலைச் செய்யவும் முயற்சி செய்யுங்கள்...

இந்த உலகம் இதுவரை கண்டிராத ஒன்றை நீங்கள் காட்சிப்படுத்த அல்லது செயல்பட முயற்சியுங்கள்...

இதன் மூலம் நீங்கள் ஒரு உண்மையான நாயகனாக வலம் வரலாம்.

✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.