வாழைப்பழத்தை உட்கொள்வதால் இத்தனை நன்மைகளா?

உடல் எடையை ஏற்றுவதற்கும் புரதச்சத்தை அதிகரிப்பதற்கும் வாழைப்பழத்தினை எடுத்துக்கொள்வதுண்டு.

உடல் பலவீனத்துடன் இருப்பவர்கள் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்க முயற்சி செய்பவர்களும் வாழைப்பழத்தினை சாப்பிடுவர்.

பசியை தணிக்க பயணத்தின் போது அளவாக சாப்பிட என வாழைப்பழம் பல வகை உணவாக பயன்படுகிறது. இது பல தரப்பினருக்கும் ஏற்ற அற்புதமான பழமாகும்.  

📌செரிமானத்திற்கு உதவும்

வாழைப்பழங்கள் உடலில் நல்ல செரிமானத்திற்கு உதவும். இதில் பெக்டின் என்ற ட்யட்டரி ஃபைபர் உள்ளது.

இது வழக்கமான குடம் இயக்கம் ஒழுங்காக இயங்குவதற்கு உதவும்.

வாழைப்பழம் சாப்பிடுபவர்கள் மலச்சிக்கல் பிரச்சனைகளில் இருந்து விடுபடுவதாக சில மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.

உடலை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ளவும் உதவுகிறது.

📌இதயத்திற்கு நல்லது

வாழைப்பழங்களில் பொட்டாசியம் சத்து அதிகமாக காணப்பட்கிறது.

வாழைப்பழம் எடுத்துக்கொள்பவர்கள் அதிக ரத்த அழுத்தத்தில் இருந்து தப்பிப்பதாக ஒரு மருத்துவ ஆராய்ச்சியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இதயம் தொடர்புடைய பிரச்சனைகளை கட்டுப்படுத்தவும் வாழைப்பழம் உதவுகிறதாம்.

பக்கவாதம் தொடர்பான நோய் பாதிப்புகளையும் வாழைப்பழம் கணிசமாக குறைப்பதாக மருத்துவர்கள் கூறுகின்றனர். 

📌சருமத்திற்கு நல்லது

வாழைப்பழத்தில் வைட்டமின் சி மற்றும் ஆன்டி ஆக்ஸிடண்ட்ஸ்கள் இருக்கின்றன.

இது சருமத்தை மேன்மையாக வைத்துக்கொள்ள உதவுகிறது.

சரும சுருக்கங்கள் வாழைப்பழம் சாப்பிடுவதால் சருமத்தில் விழும் கோடுகள், சருமத்தில் வயதான தோற்றம் போன்ற பலவகையான பாதிப்புகளில் இருந்து தப்பிக்கலாம். 

📌இயற்கை ஸ்வீட்

நம்மில் பலர் இனிப்பு பிரியர்களாக இருப்போம்.

ஆனால் உடல் எடை அதிகரித்து விடுமோ, உடலில் சர்க்கரை அளவு அதிகரித்து விடுமோ போன்ற பயத்தினால் இனிப்பு பண்டங்களை தவிர்ப்போம்.

இதற்கு மாற்றாக வாழைப்பழங்களை எடுத்துக்கொள்ளலாம்.

டயட்டிற்காக எடுத்துக்கொள்ளும் ஸ்மூத்தீஸ் வகை உணவுகள், ஓட்மீல் வகை உணவுகள் அல்லது பேக்கிங் செய்யப்பட்ட உணவுகளில் சர்க்கரை கலப்பதற்கு பதில் வாழைப்பழத்தை சேர்த்துக்கொள்ளலாம். இது இனிப்பு சுவையை தரும். 

✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.