சமூகமயமாக்கலில் குடும்பத்தின் செல்வாக்கு

சமூகமயமாக்கல் என்பது தனியாள் ஒருவர் தான் சார்ந்துள்ள சமூகத்தின் நடத்தைகள்,பெறுமானங்கள்,மற்றும் சமூகத்தின் சிந்தனைகளை கற்கும் செயன்முறையாகும்.இவற்றினை கற்பதன் மூலம் சமூகத்தின் உறுப்பினர் என்ற வகையில் தமது 

கடமைகளை நிறைவேற்ற முடிகின்றது.இவற்றோடு குறிப்பிட்ட சமூகத்தில் தான் யார் அச்சமூகத்தில் தனக்குரிய இடம் என்பன பற்றிய புரிந்துணர்வு உண்டாகிறது.அந்த வகையில் சமூகமயமாக்கலை 

சிறப்பாக செய்வதற்கு பல்வேறு காரணிகள் உறுதுணையாக அமைகின்றது.

தனியாள் ,முழு அல்லது ஓர் அமைப்பு ஒருவருடைய நடத்தையை,தான் பற்றிய உணர்வினை, வெகுமதி அல்லது தண்டனையின் மூலம் சமூக வகிபங்குகள் பற்றி அறிவுறுத்தல் மூலம் செல்வாக்குச் செலுத்த முடியுமாயின் அதனை “சமூகமயமாக்கல் முகவர்”எனலாம். இத்தகைய 

நோக்கில்குடும்பம்,பாடசாலை,சகபாடிக்குழு,சமய நிறுவனங்கள்,பொதுசன ஊடகங்கள் சமூகமயமாக்கல் நிறறுவனங்களாகும். இவற்றுள் முதன்மை பெறுவது “குடும்பம்”ஆகும்.

குடும்பம் என்பது தனிநபர் ஒருவர் முதன்முதலில் அங்கத்துவம் பெறும் சமூக நிறுவனமாகும். குடும்பம் ஒன்றிலேயே பிள்ளை உருவாவதும் பேணி வளர்க்கப்படுவதும் 

இடம்பெறுகிறது. குடும்பமானது அமைப்பிலும் இயல் பினும் வேறுபடினும் பிள்ளைகள் சமூக உரித்தாக்கம் பெறும் முதல் நிறுவனம் என்ற வகையில் குடும்பம் சமூகத்தின் முதன்மையான 

அலகாகவும் விளங்குகிறது. பாடசாலை செல்வதற்கு முன்னர் ஒரு பிள்ளை தனது முழுநாளையும் குடும்பச்சூழலிலேயே கழிக்கின்றது. இக்காலப்பகுதியில் பிள்ளையானது குடும்ப அங்கத்தவர்களுடன்

கொள்கின்ற உறவுத்தொடர்பின் அடிப்படையில் இணக்கம் பெறுகிறது. குடும்பம் என்பது பரந்த சமூக அமைப்பின் சிறிய அலகாகும். குடும்பத்தின் ஊடாக நிகழ்த்தப்படும் சமூகமயமாக்கலில் குடும்ப அமைப்பானது செல்வாக்கு செலுத்துகிறது. குடும்பம் ஒன்றின் இயல்பு குடும்பத்தின் கட்டமைப்பு பொறுப்புக்களை பொறுத்து அமையும். குடும்ப அங்கத் தவர்களிடையே நிலவும் அந்நியோன்ய 

உறவுகள் பல்வகைத் தொழிற்பாடுகள் எனவும் குடும்ப அமைப்பைத் தீர்மானிக்கும். குடும்ப அங்கத்தவர்களின் கட்டமைப்படி இருவகைப்படும். 

கருக்குடும்பம்,விரிகுடும்பம் ஆகும் . சமமூகமயமாக்கல் செயன்முறையில் ஆரம்ப சமூக நிறுவனம் குடும்பம் ஆகும். ஒரு பிள்ளைக்கு வீடுதான் முதல் பாடசாலை ,பெற்றோர்தான்

முதல் ஆசிரியர்கள் எனலாம். தனியாள் சமூகமயமாக்கலில் குடும்பத்தின் வகிபங்கு மிகவும் முக்கியமானது. குறிப்பாக ஆரம்ப பிள்ளைப் பருவத்தில் குடும்பத்தின் செல்வாக்கு அளப்பரியது. பெற்றோர்,நண்பர்,அயலவர் நடத்தைகளை கற்றுக் கொள்ளும் சந்தர்ப்பங்கள் உருவாதலால்,போலச்செய்தலில் ஈடுபடுகின்றனர்.

 உளப்பகுப்பாய்வாளரான”பிராய்ட்”ஒரு மனிதன் தனது குடும்பத்திலிருந்து கற்றுக் கொண்டவற்றையே சமூகத்தில் பிரதிபலிக்கின்றான். கூறுகின்றார். குடும்பத்தின் அடிப்படை  தொழிற்பாடு பிள்ளைகளின் சமூகமயமாக்கமாகும். குடும்ப பருமன்,பிள்ளைகளை வளர்க்கும் பாங்கு 

குடும்ப உறுப்பினரிடையே நிலவும் உறவுகள்,குடும்ப அமைப்பில் ஏற்பட்டு வரும் மாற்றங்கள்,அண்மைக்காலச் சமூக மாற்றங்கள்,குடும்பத்தில் ஏற்படுத்தும் பாதிப்புக்கள் சமூகமயமாக்கத்தில் செல்வாக்கு செலுத்துகின்றன.


வாழ்க்கையின் முதல் ஐந்து வருடங்களுமே எதிர்கால வாழ்க்கையின் வெற்றியும் தோல்வியும் நிர்ணயிக்கப்படும் காலம் என உளவியலாளர் கருதுகின்றனர். வேறு எந்த சமூக நிறுவனங்களை விடவும் குடும்பத்தில் நிலவும் உறவானது அந்நியோன்யமானதும் நெருக்கமானதும் ஆகும். ஒரு 

பிள்ளைக்கு குடும்பத் திலிருந்து கிடைக்கும் செல்வம் மொழியாகும். கருத்துப் பரிமாற்றலுக்கும்,தொடர்புகளை ஏற்படுத்திக் கொள்வதற்கும் மொழி உதவுகிறது.பிள்ளை ஒரு மொழியைக் கற்கும்போது அதற்கான அடிப்படை வழிகாட்டல் பெற்றோர்களினால் வழங்கப்படுகிறது. 

குழந்தையுடன் அடிக்கடி பேசுதல் கதைப்பதற்கு குழந்தையை தூண்டுதல்,பிழையின்றி வசனங்களை உச்சரிக்கச் செய்தல்,குழந்தைகளின் அனுபவங்களுக்கு அமைவாக பேசப்பழகுதல் என்பன பெரும்பாலும் பெற்றோர்களினால் செய்யப்படுகிறது. அதேபோல் குடும்பத்தின் ஏனைய அங்கத்தவர்களுக்கிடையில் நிலவும் சம்பாசனைகள் ஆகியனவும் குழந்தையின் மொழி வளர்ச்சிக்கு தூண்டுகோலால் அமையும். 

சிறுவயதிலேயே சிறந்த பழக்கவழக்கங்கள்,மற்றும் குணங்களை அறிமுகப்படுத்தவும் அதற்    கேற்ப பழகுவதும் குடும்பத்தால் நிறைவேற்றப்படுகிறது. அன்பு,கருணை,நம்பிக்கை,பொறுமை,தியாக மனப்பாங்கு,பரஸ்பர ஒத்துழைப்பு,ஒழுக்க விழுமிய பண்புகள்,சமய ஒழுகலாறு போன்ற பண்புகளையும் குடும்பம் கற்றுக் கொடுக்கின்றது. வாழ்வு சிறப்புற்று சீர்மையடைய குடும்பத்தின் பங்கு அவசியமாகின்றது.

மேலும்தாய்,தந்தை,பிள்ளைகள் தொடர்புடனும் உறவுடன் ஒரே கூரையின் கீழ் வாழ்தல் வேண்டும்.இவர்களில் ஒருவர் ஏதேனும் காரணத் திற்காக பிரிந்து சென்றாலும் அவருக்கு தாம் 

அனைவரும் ஒரே குடும்பத்தைச் சார்ந்தவர்கள் எனினும் உணர்வு இருக்கும் போது குடும்ப அமைப்பு முழுமை பெறுகிறது. குடும்பமானது தனது உறுப்பினர்களை திருமணம்,பிறப்பு,தத்தெடுத்தல் என்பதன் 

மூலம் பெற்றுக் கொள்வது அதிகரித்துக் கொள்வதாகவும் உள்ளது. இதே போன்று இறப்பு,விவாகரத்து என்பவற்றின் மூலம் தமது எண்ணிக்கையை இழக்கின்றது.குடும்பத்தின் பருமன் 

அதிகரிக்கும் போது அதன் உறுப்பினர்களிடம் நிலவும் தொடர்புகள் வேறுபடுகின்றன. அத்தோடு இடைத்தாக்கத்தின் அளவு உறவின் இறுக்கம்,நேரடித் தொடர்பு என்பன குறைவடையும்.மேலும்

உறுப்பினர்களது வேலைப்பளுவும் பணிகளும் இன்னும் அதிகரிக்கும் சிக்கல்கள்,பிணக்குகள் வருவதற்கான வாய்ப்புக்களும் அதிகரித்த வண்ணம் காணப்படும். சமுதாயங்களுக்கிடையே குடும்ப கட்டமைப்பிலும் பணி நிறைவு செய்வதிலும் வேறுபாடுகள் இருந்தாலும் குடும்பங்களின் பிரதான பணியில் உலகலாவிய பண்பு வெளிப்படுவதனை அடையாளம் காணலாம்.

மேற்குறறிப்பிட்ட விடயங்களை நோக்கும் போது சமூகத்தின் அடித்தளமே குடும்பம் ஆகும். குடும்பத்தை சார்ந்த ஒரு தனிமனிதனே பின்னர் சமூக பிரஜையாக உள்வாங்கப்படுகின்றான்.

யேதீபா பிரபாகரன் 

B.Ed Student 4th year

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.