பிறரை மதிக்கும் உயர்ந்தப் பண்பு.

இரும்புத் தொழிலில் மிகப்பெரிய மனிதராக விழங்கியவர் ஆன்ட்ரூ கார்னகி..

இவரது வெற்றிக்குப் பல காரணம் இருந்தாலும் அவற்றுள் பெரிதாகக் குறிப்பிடுவது,

அவர் எப்போதும் தன்னை விட அறிவில் உயர்ந்தவர்களைத் தன் ஆலோசராக,நண்பராகக் கொண்டு இருந்தார் என்பது தான்.

தன்னுடைய நண்பர்களைப் பலர் மத்தியில் புகழ்வதிலும், தனிப்பட்ட முறையில் வாழ்த்துவதிலும் முதல்வராகத் திகழ்ந்தார்..

அவரது மேற்சொன்ன செயலுக்குப் பெரிய சான்று அவரது கல்லறையில்,

தன்னை விடப் புத்திக்கூர்மையையும், திறமையும் கொண்டவர்களை எப்போதும் தன்னோடு வைத்துக் கொண்டு இருந்த மனிதர் இங்கே உறங்குகிறார்''.எனும் வாசகத்தை எழுதிக் கொடுத்துப் பொறிக்கு சொல்லி இருந்தார்..

ஆம்.,நண்பர்களே..,

நண்பர்கள், உறவினர்களை பழக்கத்திற்காக வேலைக்கு எடுக்காமல், திறமையானவர்களை வேலைக்கு எடுங்கள். திறமை தவிர்த்து உங்களுக்கு நம்பிக்கையானவர்களையும் வேலைக்கு எடுங்கள். 

ஒவ்வொரு மனிதருக்கு உள்ளேயும் ஒரு திறமைமிகு பொக்கிசம் இருக்கும் என்பதை மறந்து விடாதீர்கள்....

தனித்தன்மையுள்ள மனிதர்களைக் கண்டுயறிந்து அவர்களை ஊக்கம் ஊட்டுவதின் மூலம் அவர்களிடமிருந்து இவ்வுலகம் பல நல்ல செயல்களைப் பெற்று இருக்கிறது என்பதை நினைவில் கொள்ளுங்கள்..🌸🙏🏻🌷

ஆக்கம்.

உடுமலை. சு.தண்டபாணி.

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.