இலங்கையும் இரண்டாம் நிலைக் கல்வியும்

இலங்கை 2500 வருடங்களுக்கு முன் நாகரீகம் அடைந்ததிலிருந்து கல்விக்கு முக்கியத்துவம் அளித்து வருகின்றது.

இலங்கை வரலாற்றில் விஜயன் வருகையினை தொடர்ந்து பிராமணர்கள் வருவிக்கப்பட்டு குருகுல கல்விமுறை உருவாக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து சிற்பம்,செதுக்கல், சித்திரம் வரைதல், நெசவு நெய்தல் முதலியனவும் கற்றல் மூலம் மக்கள் பழகிக் கொண்டனர். அத்துடன் குருவின் இல்லம் சென்று குருவிற்கு பணிவிடை செய்து கற்றலில் ஈடுபடுகின்ற முறையாகவும் காணப்பட்டது. கால ஒழுங்கின்படி இலங்கைக்கு மகிந்த தேரரால் பௌத்த மதம் பரப்பப்பட்டதனை தொடர்ந்து அரசு சார்புடன் பிரிவினாக் கல்வி முறை உருவானது. 

கிராமங்கள் தோறும் பன்சாலைகள் அமைக்கப்பட்டதுடன் விகாரைகளிலும் கற்றல் போதிக்கப்பட்டது. *உதாரணமாக* மகா விகாரை, ஜேதவன ராமய, தூபராம போன்றனவாகும். இதன் பின்னணியில் 155இல் போர்த்துக்கேயரின் ஆட்சி காலப்பகுதியில் பரீஸ் பாடசாலை, ஆரம்ப பாடசாலை, கல்லூரிகள், இயேசு கல்லூரிகள், அனாதை பாடசாலைகள் அமைக்கப்பட்டு கல்வி வழங்கப்பட்டன.

 பின் 1658ல் ஒல்லாந்தர் ஆட்சி காலத்தில் கட்டாய கல்வி, வளர்ந்தோர் கல்வி முறைகளும் ஒல்லாந்தர் பாடசாலைகளில் அமைக்கப்பட்டு வழங்கப்பட்டது. இங்கு பரீஸ்பாடசாலைகள், மிஷனரிகள், நோமல் கல்வி, சிஸ்கமீர் அறநெறி பாடசாலையும் முதன்மை பெற்றது. பின்னர் 1796-1948 வரை பிரித்தானிய ஆட்சி காலத்தில் மிசினரி கல்வி வழங்கப்பட்டது. *உதாரணமாக* லண்டன் மிஷனரி, வெஸ்லியன் மிஷனரி, கிறிஸ்தவ திருச்சபை, அமெரிக்க மிஷனரி இவ்வாறு ஆரம்ப காலம் இருந்து இலங்கையில் கல்வி வழங்கப்பட்டது. 

இவ்வாறான கல்வி செயற்பாட்டின் மூலம் இலங்கையில் மத்திய தர வகுப்பினரும் உருவாகினர். இவர்களது அர்ப்பணிப்புடன் இலங்கை 1948 சுதந்திர நாடானது. இதன்பின்னர் இலங்கையில் காணப்படும் கல்வி முறையானது முறைமைக் கல்வி, முறை சாரா கல்வி, முறையில் கல்வி என மூன்று வகையாக பிரிக்கப்பட்டு முறையில் கல்வியானது 1997 புதிய கல்விச் சீர்திருத்தத்தின்படி மூன்று வகையாக பிரிக்கப்பட்டது.

இவ்வகையில் இரண்டாம் நிலைக்கல்வியினுள் 6-13 வரையான வகுப்பக்கள் உள்ளடங்கப்படுகின்றன. இதனுள் இளநிலை இரண்டாம் நிலை உள்ளது. இதனை நடுத்தர வகுப்பு எனவும் அழைப்பர். இது 6-9 வரையான வகுப்புகளைக் கொண்டிருக்கும். 

அதனைத் தொடர்ந்து மூத்த இரண்டாம் நிலையில் 10-11 வரையான வகுப்புக்கள் இம்மட்டத்தில் உண்டு. GCE சாதாரண நிலை (O/L) இலங்கை சட்ட திட்டத்தின்படி அனைத்து பிள்ளைகளும் ஒன்பதாம் வகுப்பு வரை கல்வியினை தொடர்வது அவசியமாகும். இருப்பினும் மாணவர்கள் தொழிலுக்கு செல்லும் நிலையும் உண்டு. இதனால் இலங்கை கல்வி அமைச்சு குறைந்தபட்சம் GCE வரை படிப்பினை தொடர வேண்டும் என அறிவித்துள்ளது. மேலும் இரண்டாம் நிலை கல்வியில் 12-13 வரையான வகுப்புகளும் உள்ளடங்கப்படுகின்றன. இதனை பின்பருமாறு நோக்கலாம்.

இளநிலை இரண்டாம் நிலை

தரம் 6 - 10 -11 வயது 

தரம் 11 - 11-12 வயது

தரம் 8 - 12-13 வயது

தரம் 9 - 13-14 வயது

மூத்த இரண்டாம் நிலை

தரம் 10 - 14-15 வயது

தரம் 11 - 15-16 வயது

GCE நிலைத்தேர்வு 

தரம் 12 - 16-17 வயது

தரம் 13- 17-18 வயது

இலங்கையில் 1951 ஆம் ஆண்டின் 5 ஆம் இலக்க கல்வி சட்டத்தின் படி இரண்டாம் நிலைக்கல்விக்கான பல சீர்திருத்தங்கள் முன்வைக்கப்பட்டன. எனினும் காலத்தின் தேவை கருதி மாற்றம் அடைந்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது. 

இளநிலையினை நோக்கினால், இங்கு மொழி, கணிதம், உடல் நல பயிற்சியும் உள்ளடங்கப்படுகின்றன. சமயம், மொழி, ஆங்கிலம், இரண்டாம் மொழி, கணிதம், வரலாறு, விஞ்ஞானம், வாழ்க்கை தேர்ச்சி, பிரயோகத் தொழில்நுட்பம், சித்திரம், சங்கீதம், நடனம் ,நாடகம், புவியியல், முதலிய பாடங்கள் இங்கு கற்பிக்கப் படுகின்றன.

 1956இல் 43ஆம் கல்வி சுற்றறிக்கையின்படி 6-9 வகுப்புகள் வரை உடலியல், அழகியல் முயற்சிகளும் அமைப்பியல் முயற்சிகளும், சூழலியல் முயற்சிகளும் பாடத்திட்டத்தில் கருவாக இணைக்கப்பட்டன. இவற்றினை மாணவர்களுக்கு சென்றடையும் வண்ணம் ஆசிரியர் செயற்பட வேண்டும். அதற்காக ஆசிரியர் வழிகாட்டி என்னும் கையேடும் உருவாக்கப்பட்டது.

1957 ஆம் ஆண்டிற்கான விஞ்ஞான பாடம் மாணவர்களின் கற்றலில் முதன்மையாக்கப்பட்டது. ஆங்கிலம் இரண்டாம் மொழியாகவும் கற்பிக்கப்பட்டு பின் கட்டாயமாக்கப்பட்டது. இதனை அடிப்படையாகக் கொண்ட ஒவ்வொரு கற்பித்தலும் ஒவ்வொரு பாடத்திட்டத்திற்கும் மாணவர்களின் அடைவு மட்டும் தீர்மானிக்கும் நிலை உருவானது.

அதனை வளர்க்கும் வண்ணம் கலைத்திட்ட உருவாக்கம், சீர்திருத்தம், பாடசாலை கணிப்பீட்டு முறைகள் அனைத்தும் உருவாக்கப்பட்டன. இளநிலை இரண்டாம் நிலையின் இறுதிக்கட்டமாக ஒரு வருடத்தில் முதலாம் தவணை, இரண்டாம் தவணை, மூன்றாம் தவணை பரீட்சைகளும் இடம் பெறும். இவற்றில் ஒன்பதாம் தரத்தில் இறுதி பரிட்சை இளநிலை இரண்டாம் நிலையினை பூர்த்தி செய்வதாக அமையும். 

அதனைத் தொடர்ந்து மூத்த இரண்டாம் நிலையினை நோக்கினால் இங்கு தரம் 10-11 வரையான வகுப்புக்குள் உள்ளடங்கப்படுகின்றன. இங்கு கட்டாய பாடங்களாக சமயம் (பௌத்தம், சைவம், கத்தோலிக்கம், கிறிஸ்தவம், இஸ்லாம்) மொழியும் இலக்கியமும் (சிங்கள மொழி, தமிழ் மொழி) கணிதம், வரலாறு, ஆங்கிலம், விஞ்ஞானம் என்பனவும், தெரிவிப் பாடங்களாக முதலாம் பாட தொகுதியில் வணிகம், புவியியல், குடியுரிமை கல்வி, இரண்டாம் மொழி (சிங்களம், தமிழ்) முயற்சியான்மை என்பனவும், இரண்டாம் பாடத் தொகுதி சங்கீதம், நடனம், பரதம், இலக்கிய நயம், (தமிழ், சிங்களம்) நாடகம் அரங்கியலும் போன்றனவும், மூன்றாம் பாடத் தொகுதியில் தகவல் தொடர்பாடல் தொழில்நுட்பம், விவசாயமும் உணவு தொழில்நுட்பவியலும், நுண்கலைகளும், மணிப் பொருளியல், ஊடகக்கற்கை என்பனவும் அமைகின்றன. இதில் கட்டாயப் பாடம் ஆறும் அத்துடன் தொகுதி பாடங்கள் பல மூன்று பாடங்களும் மொத்தமாக ஒன்பது பாட கற்கையாக தற்பொழுது கல்வித் திட்டத்தினால் நடாத்தப்படுகின்றது.

மூத்த இரண்டாம் நிலையில் 10 தொடக்கம் 11 வரை தொடர்ச்சியான கல்வியாக அமைகின்றது. இங்கு இறுதி கட்டமாக GCE பரீட்சையினை வெற்றி கரமாக முடித்தல் வேண்டும். அதனை கருத்திற்கொண்டு உயர்தர பரிட்சையில் இணைய முடியும்.

 இங்கு மாணவர்களின் சித்து வீதம் A,B,C,S,Wஎன நோக்கப்படுகின்றது. இலங்கையில் 1962 ஆம் ஆண்டின் ஒன்பதாம் இலக்கச் சட்டத்தின் படி மூத்த இரண்டாம் நிலைக்கான ஏற்பாடுகள் சீராக இடம் பெற்றன.

 அதனைத் தொடர்ந்து இரண்டாம் நிலை கல்வியின் இறுதிக்கட்டமாக கல்லூரி படிப்பு கட்டத்தினை நோக்கினால் இங்கு தரம் 12 தொடக்கம் 13 வரையான காலப்பகுதி உள்ளடங்கப்படும். இது க.பொ.த உயர்தர என அழைக்கப்படும். இது பிரித்தானிய சாதாரண தரவு உயர் படிநிலையினை கொண்டு அமைந்துள்ளது. கல்வி பொது தராதரப் பரிட்சையில் தேறிய மானவர்கள் கட்டாயமற்ற இரண்டு வருடங்களின் பின் (பாடசாலை மூலமற்ற மாணவர்களும் உள்ளடங்கும்) இப்பரீட்சையினை எழுத முடியும். பாடசாலையினை விட்டவர்கள் தனியாகவும் இதனை நிறைவு செய்ய முடியும். இப்பரீட்சை தமிழ், சிங்களம், ஆங்கிலம் என 03 மொழிகளிலும் இடம்பெறும்.

1940 காலப்பகுதியில் உயர்நிலை கல்வியானது பல்கலை வாய்ப்பினைப் பெற்றுக் கொள்வதனை நோக்காக கொண்டு காணப்பட்டது. இதனை அடிப்படையாக கொண்டு 1940களின் பின்பு பாடசாலைகளில் 12-13 தரங்கள் இணைப்பதற்கான நடவடிக்கைகள் முன்வைக்கப்பட்டன. 1966 காலப்பகுதியில் உயர்தரத்திற்கான பாடங்களின் தொகை 4 ஆக காணப்பட்டது. சிங்களம், தமிழ், ஆங்கிலம், பாளி, சங்கீதம், இலங்கை வரலாறு, இந்திய வரலாறு, புவியியல், ஆட்சியியல், பௌதீக நாகரிகம், அளவையியல், ஒழுக்கவியல், பௌதிகம், தாவரவியல் போன்ற பாடங்கள் காணப்பட்டன.

தற்காலத்தில் இவை மாற்றியமைக்கப்பட்டுள்ளன. தற்போது 5 முதன்மை கற்கை நெறிகள் இடம்பெறுகின்றன. பௌதிக விஞ்ஞானம் (இணைந்த கணிதம், பௌதீகம் மற்றும் வேதியல்) உயிரியல் விஞ்ஞானம் (உயிரியல், தாவரவியல் மற்றும் விலங்கியல், இணைந்த பகுதிகள் மற்றும் வேதியல்) வர்த்தகம் மற்றும் கணக்கியல், கலை, தொழில்நுட்பம் என்பன ஆகும். இலங்கையில் உள்ள பாடசாலைகளில் 20.3% உயர்தர வகுப்புகளை கொண்ட பாடசாலைகளாகும். 12-13 வரையான வகுப்புகளில் 2 இலட்சம் மாணவர்கள் கற்கின்றனர்.

உயர்தரக் கல்வியில் மாணவர்கள் தெரிவு செய்யும் 03 பாடங்களின் சித்தி வீதத்தினை A,B,C,W என தீர்மானிக்ககின்றனர். இவற்றின் படி மாணவர்களின் பெறுபேற்றிற்கான வெட்டுப் புள்ளிகளையும் கருத்திற்கொண்டு பல்கலைக்கழகத் தேர்வுக்கான சந்தர்ப்பங்கள் உருவாக்கிக் கொள்ளப்படுகின்றன.

உயர் தரத்தில் மாணவர்கள் தெரிவு செய்யும் பாடப்பிரிவுடன் கட்டாயமாக பொது ஆங்கிலம் உள்ளது. அத்துடன் பொது அறிவும் அமைகின்றது. பொது அறிவில் பல்கலைக்கழக தேர்வில் மாணவர்கள் 30 இற்கும் அதிகமான புள்ளிகளை பெறுவது கட்டாயமாகும். அத்துடன் மாணவர்களுக்கு கட்டாய பாடமாக தகவல் தொழிநுட்பமும் அமைந்துள்ளது. இதற்கான பரீட்சையானது உயர்தர பரீட்சையுடன் இடம்பெறாது.

மகாலிங்கம் ரிலக்சனா

2ம் வருட 1ம் அரையாண்டு கல்வியியல் சிறப்பு கற்கை மாணவி,

கல்வி மற்றும் பிள்ளைநலத்துறை கலைகலாசார பீடம்,

கிழக்கு பல்கலைக்கழகம்.

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.