ஆண்களை விட சோகமாக இருக்கும் பெண்கள்... காரணமும் தீர்வும் என்ன?

பொதுவாகவே சோகம் என்ற ஒன்று அனைவருக்கும் பொதுவானது தான். ஆனால் ஆண்களை விடவும் பெண்கள் தான் அதிகம் சோகத்தில் இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

அதிக வேலைப்பளு, பணத் தேடல், இழப்பு, பாலியல் தொல்லை, சமூகத்தின் பார்வை போன்ற பிரச்சினைகளால் ஆணும் பெண்ணும் சோகத்தில் மூழ்கி விடுகிறார்கள்.

அதிலும், ஆண்களை விட பெண்கள் தான் அதிக பொறுப்புகள் கொண்டிருக்கிறார்கள் என்றும் அதனால் அவர்கள் பல சோகங்களை தன்னுள் வைத்திருக்கிறார்கள் என்றும் ஆய்வு சொல்கிறது. 

நாட்டில் பெரும்பலான பெண்கள் குடும்பத்தை பார்த்துக் கொள்வது, குழந்தைகளை பார்த்துக் கொள்வது, வயதானவர்களை பார்த்துக் கொள்வது, வீட்டு வேலை, அலுவலக வேலை போன்ற பொறுப்புக்களை தலையில் வைத்து சுற்றிக் கொண்டிருக்கிறார்கள்.

அதுமட்டுமல்லாது பாலியல் தொல்லை, மற்றவர்கள் நம்மை நடத்து விதம் போன்றவற்றால் அதிக மன உளைச்சலுக்கு உள்ளாகி இன்னும் அதிகம் சோகமாகிறார்கள்.

இவர்கள் இந்த சோகத்தில் இருந்து எவ்வாறு வெளியில் வந்து சந்தோசத்துடன் வாழ வேண்டும் எதில் அதிக கவனம் செலுத்த வேண்டும் என்பது பற்றி இந்த காணொளியில் தெளிவாக தெரிந்துக் கொள்ளலாம்.

✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.