மாற்றம் ஒன்று தான் மாறாதது.

1996 ஆம் ஆண்டு உலகை வியக்க வைத்த குளோனிங் முறையில் ''டாலி என்ற செம்மறி ஆடு'' உருவாக்கப்பட்டது,,

அந்த சமயத்தில் இரத்த புற்றுநோயால் அவதிப்பட்டு வந்த ஒருவரின் மகள் இறந்து விட்டாள்..

மகளின் நினைவால் வாடுவதாகவும்,தன் மகளின் செல்லை எடுத்து மீண்டும் தன் மகளை உருவாக்கித் தருமாறு டாலியை உருவாக்கிய வில்நட்டிற்கு கடிதம் எழுதினார்.

அதற்கு டாலியை உருவாக்கக் காரணமாக இருந்த வில்நட் இவ்வாறு எழுதினார்..

ஐயா.,உங்களின் வேதனை எனக்கு நன்கு புரிகிறது..எனது ஆழ்ந்த வருத்தங்களை உங்களுக்குத் தெரிவித்து கொள்கிறேன்.

ஆனால்,உங்கள் மகளின் செல்லில் இருந்து வேறு ஒரு மனுசியை உருவாக்கினால் அவர் தனிப்பட்டவராகத் தான் இருப்பார்.

அவரிடம் உங்கள் மகளின் எண்ணங்களும், சிந்தனைகளும் இருக்க இயலாது.

எனவே,மகளின் இறப்பைத் தாங்கிக் கொண்டு அமைதி அடையுங்கள்..என்று பதில் எழுதினார்.

ஆம்.,நண்பர்களே..

எதார்த்தத்தை ஏற்றுக் கொள்ள வேண்டும்.ஒரு மனிதனைப் போல மற்றொரு மனிதரின் சாயலில் உருவாக்கினாலும்,

ஒரு மனிதரின் உணர்வுகளை மற்றவரிடம் கொண்டு வர இயலாது என்பது தான் இன்றைய ஆராய்ச்சிகள் சொல்லுகின்றன..

ஆனால்.,

நாளைய ஆராய்ச்சிகள் இதற்குத் தீர்வு காணலாம்..

ஆம்.,மாற்றம் ஒன்று தான் மாறாதது..

✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.