சமூகமயமாக்கலில் பாடசாலையின் பங்கு

ஒவ்வொரு மனிதனதும் இரண்டாவது இல்லமே பாடசாலைகளாகும். வீட்டில் உலாவித் திரிந்த, தன் பெற்றோரின் கரங்களைப் பற்றிக் கொண்டிருந்த மனிதன் மாணவன் என்ற பட்டத்தைச் சூடிக் கொண்டு பாடசாலை என்ற அறைகளுக்குள்ளே, ஆசிரியர் என்ற புதிய தாய், தந்தையின் கரங்களைப் பற்றிக் கொள்கிறான் என்பதுவே ஒரு புதுமையான நிலைமாற்றம் எனலாம். ஆசிரியருடன் இணைந்த வாழ்வியலுடன் தொடர்பு பட்ட மனிதனின் வாழ்வு சீர்மியம் நிறைந்தே காணப்படுவதும், சமூகமயமான போக்கைக் கொண்டிருப்பதும் இயல்பாகும்.

பாடசாலை ஒரு பரந்த பணியைச் செய்யும் நிறுவனமாகும். அங்கே கலைத் திட்டம், இணைக் கலைத் திட்டம், மறைக் கலைத் திட்டம் எனப் பல்வேறு நடவடிக்கைகளும் நடந்து வருவதைக் காணலாம். கலைத் திட்டம் தவிர ஏனையவை மாணவனின் சமூகமயமாதல் பற்றிய செயற்பாடுகளை மேம்படுத்தும் திட்டங்களாகும்.

மாணவனுக்கு வாழ்வதற்கான வழியை இணை, மறை கலைத் திட்டமே சொல்லிக் கொடுக்கின்றன. எல்லா செயற்பாடுகளுக்கும் ஆசிரியர்களே பொறுப்பாக உள்ளனர். 

ஒவ்வொரு மாணவனும் அவன் வாழும் சமூகத்தை வழி நடாத்தும் அறிவுப் பலமும், நடத்தைப் பலமும் கொண்ட பூரண ஆளுமைகளாகப் பாடசாலையை விட்டு வெளியேறியவெளியே வர வேண்டும் என்ற முனைப்புடன் பயிற்றுவிக்கப்படுகிறான்.

ஒரு மனிதனை சமூகமயமாக்குவதில் கல்வி நிறுவனங்களின் பங்களிப்பானது மிக முக்கியமானதாகும். அந்த வகையிலே பாடசாலையில் பிள்ளைகளுக்கு வழங்கப்படும் கல்வியல் செயற்பாடுகள் அவனது வாழ்வை வளமடைய செய்கின்றதுக்ஷ

பாடசாலையின் பிரதான பணி கல்வியை வழங்குவதாயினும், பாடாலைகள் கல்வியின் மூலம் சமூகப் பயிற்சியை ஏற்படுத்துவதற்கு முயல்கிறது எனலாம்.

இதனையே டர்கயிம் என்பவர் "கல்வி நிறுவனமொன்றின் முக்கிய நோக்கமாக இருக்க வேண்டியது எதிர்காலப் பொறுப்புகளை ஏற்கக் கூடிய விதத்தில் சிறுவர்களை சமூகமயமாக்குவதாகும்" எனக் கூறினார்.

பாடசாலை கல்வி பெறும் ஒரு நிலையம் மட்டுமன்றி சமூகத்தின் ஒரு சிறு மாதிரி உருவம் என்பது ஜோன் டூவியின் அபிப்பிராயமாகும்.

பாடசாலைகளின் ஊடாக மேற்கொள்ளப்படும் சமூகமயமாக்க செயல் முறையை நாம் வெவ்வேறு கோணங்களில் ஆய்வு செய்து பார்க்க முடியும். இதன் ஆரம்ப அடிப்படை பாடசாலைக்கு முதன்முதலாக அடி எடுத்து வைக்கும் ஒரு குழந்தைக்கு சமூகத்தை அறிமுகப்படுத்துவது ஆகும். 

ஒரு குழந்தை பிறந்து முதல் 5 வருடங்கள் குடும்பத்துடன் மாத்திரமே தொடர்புகளைப் பேணுகின்றது. அதனால் அக்குழந்தை குடும்பத்துடன் தொடர்பான அனுபவங்களை மாத்திரமே பெற்றுக் கொள்கிறது. 

குடும்பத்தைத் தாண்டி பாடசாலைக்குள் காலடி எடுத்து வைக்கும் போது அக்குழந்தை முதன்முதலாக ஒரு புதிய சூழலுக்குள் உள்வாங்கப்படுகிறது. தன்னைப் போலவே ஓர் ஆயிரம் உறுப்பினர்களை இனங்கான ஆரம்பிக்கிறது. 

தனது விருப்பு வெறுப்புகளுக்கு ஒத்துப் போகக் கூடியவர்கள் மற்றும் ஒத்துப்போகாதவர்கள் என பலதரப்பட்டவர்களையும் இனங்கான ஆரம்பிக்கிறது. ஒவ்வொரு தனி மனிதர்களுடனும் எவ்வாறு பேசிப் பழக வேண்டும் என்பதை அக்குழந்தை பாடசாலையில் இருந்தே கற்றுக் கொள்ள ஆரம்பிக்கின்றது. 

இங்கிருந்தே ஒவ்வொரு தனி மனிதனும் சமூகமயமாக்கத்திற்கான அடிப்படையை பெற்றுக் கொள்கின்றது. பாடசாலைகள் இதற்கான சிறந்த அடித்தளத்தை அமைத்துக் கொடுக்கும் போதே எதிர்காலத்தில் சிறந்த சமூகத் தொடர்புகளைப் பேணக்கூடிய நற்பிரஜைகள் உருவாகுவர்.

இன்றைய கல்வி முறை வெறுமனே அறிவை மாத்திரம் பெறுகின்ற மரபு ரீதியான பழைய கல்வி முறைமைக்கு முற்றிலும் மாற்றமானது.நவீன கல்வித் தத்துவங்களில் மிகப் பிரதானமாக வாழக் கற்றல், மற்றவர்களோடு சேர்ந்து வாழக் கற்றல் என்பன முக்கியமாக இடம் பெறுகின்றன.

அந்தவகையில் கல்விக்கு வரைவிலக்கணம் கூறும் நவீன சமூகவியலாளர்கள் 'வாழ்க்கையே கல்வி, மனிதப் பண்பு வளர்ச்சியே கல்வி' என்கின்றனர் மேலும் இதற்கான பயிற்சி பாடசாலைகளில் வழங்கப்படுகிறது.

சமூக நன்மை கருதி செயல்படும் சிறந்த ஆளுமையை தனியாட்களிடம் உருவாக்குவதற்கு பாடசாலை முக்கியமான சில கடமைகளை நிறைவேற்றுகிறது.

பாடசாலை கலைத்திட்டத்தில் சமூக செயற்பாடுகளுக்கான பயிற்சியும், குழுமுறைக் கற்பித்தல் மற்றும் இணைப்பாடவிதான செயற்பாடுகள் போன்ற செயற்பாடுகளின் மூலம் சமூகத்தோடு பரஸ்பரம் தொடர்வு ஏற்படுத்திக் கொள்ளவும் குழுக்களாகச் செயற்படவும் வாய்ப்பு அளிக்கப்படுகின்றது.மூலமே வழங்கப்படுகிறது எனலாம். இணைப்பாடவிதான இணைப்பாடவிதான இணைப்பாடவிதான செயற்பாடுகள் மூலம் 

சமூகமயமாக்கல் இது ஒரு தொடர்ச்சியான மற்றும் படிப்படியான செயல்முறையாகும். குழந்தை கல்வி கற்கும்போது, அவர் சமூகமயமாக்கப்படுகிறார். எனவேதான் பாடசாலை  இது ஒரு முக்கிய சமூகமயமாக்கல் முகவர்களில் ஒன்றாகும், ஏனெனில் அதில் குழந்தை ஒரு வயது வந்தவராக சமூகத்தில் ஒருங்கிணைக்க தொடர்ச்சியான விதிமுறைகள் ,மற்றும் மதிப்புகள் பெறுகின்றது.

அந்தவகையில் பாடசாலைகளில் நடைமுறைப்படுத்தப்படும் இணைப்பாடவிதான செயற்பாடுகளாக விளையாட்டுப் போட்டி கலைவிழா பரிசளிப்பு விழா தமிழ்தினப் போட்டி வாழ்க்கைத்திறன் நிகழ்ச்சி கண்காட்சி சமயம் சார்ந்த விழாக்கள் நூல் வெளியீடு சஞ்சிகை வெளியீடு கல்விச் சுற்றுலாக்கள் வெளிக்கள ஆய்வுகள் மரநடுகை போன்றவற்றைக் குறிப்பிடலாம். 

இவ்வகையான இணைப்பாடவிதான செயற்பாடுகளின் மூலமாக சமூகமயமாக்கமானது எவ்வாறு நடைபெறுகின்றது என்பதனை பின்வருமாறு நோக்கலாம்.

இணைபாடச்செயற்பாடு என்ற வரையறைக்குள் பாடசாலைக்கலைத்திட்டத்தில் கற்றல், கற்பித்தல் செயற்பாடுகளைத் தவிர்ந்த அனைத்துச் செயற்பாடுகளும் உள்ளடங்குகின்றது. அதாவது இல்ல விளையாட்டுப்போட்டி, கோட்ட, வலய, மாகாண, தேசிய பாடசாலைகளுக்கிடையிலான விளையாட்டுப்போட்டி, தமிழ்த்தினப்போட்டிகள், ஆங்கில, விஞ்ஞான, கணித வினாடிவினாப் போட்டிகள், வாணிவிழா, மீலாத்விழா ,ஒளிவிழா, ஆசிரியர்தினம், பாடசாலைத்தினம், அறிஞர்களின் நினைவுதினம், கல்விச் சுற்றுலா, சாரணர் நிகழ்வுகள், மாணவர் தலைவர் சின்னம் சூட்டும் நிகழ்வுகள், பாடசாலைக் கண்காட்சிகலைவிழா,வெளிக்களச்செயற்பாடுகள்  இசை நாடக நடன சித்திர போட்டிகள் என  அனைத்துச் செயற்பாடுகளும் இணைப்பாட விதானச் செயற்பாடுகளில் அடங்கும். 

இவ்வாறான இணைப்பாடச் செயற்பாடுகளில் பாடசாலை மாணவர்கள் விரும்பியோ, விரும்பாமலோ கலந்து கொள்ள வேண்டிய கட்டாயம் உள்ளது. இதனால் பிள்ளை தானாகவே சமூகமயமாக்கலுக்கு இட்டுச் செல்லப்படுகின்றது.

இல்ல விளையாட்டுப்போட்டி

“விளையாட்டுப் பிள்ளையிடம் நற்பண்புகளை வளர்ப்பதுடன், விட்டுக்கொடுப்பு, வெற்றி தோல்விகளை சமமாக ஏற்றுக் கொள்ளல், தலைமைக்கு கட்டுப்படும் பண்பு விதிகளைக் கடைபிடித்தல், சட்டதிட்டங்களை மீறாமை, உடலைக் கட்டாகப் பேணுதல், வெற்றிக்காகப் போராடும் முயற்சியை வளர்த்தல் போன்ற சமூகமயமாக்கல் பண்புகள் வளர்க்கப்படுகின்றன. 

இதனால் எதிர்காலத்தில் வாழ்க்கையில் வரும் தோல்விகளை தாங்கிக் கொள்வதற்கும், தற்கொலை போன்ற விடயங்களில் ஈடுபடாமல் இருப்பதற்கும்  மேலும் குற்றச் செயல்களான கொலை, மதுப்பாவனை போன்றவற்றில் ஈடுபடாமல் இருப்பதற்கும் விளையாட்டுச் செயற்பாடுகள் உதவுகின்றன. 

கோட்ட, வலய, மாகாண, தேசிய ரீதியில் விளையாட்டுப் போட்டியில் ஈடுபடும் போது “கிணற்றுத் தவளையாக இல்லாமல்” சமூக விழிப்பு ஏற்பட்டு சமூகமயமாக்கல் தோற்றம் பெறுகின்றது அத்துடன் பிறரின் திறமைகளுடன் ஒப்பிடும்; போது “தான் எந்த நிலையில் உள்ளேன் என்பதையும்” இன்னும் எவற்றை வளர்க்க வேண்டும் என்றும் அறிவதுடன் மத, இன, சாதி, பேதங்களை மதிக்கும் தன்மையும், நட்புறவுடன் செயற்படும் ஆற்றலும் வளர்த்தெடுக்கப்படுகின்றது.

பாடசாலைத் தமிழ்த்தினப் போட்டி, ஆங்கில தினப் போட்டி

மாணவர்களின் அறிவு மேம்படுவதுடன், போட்டி போட்டு செயற்படும் விதத்தை அறிந்து கொள்ளல்,  சமூகத்தில் பிற மாணவர்களுடன் சேர்ந்து பழகும் வாய்ப்பு, நட்புறவுகளை வளர்த்துக் கொள்ளல், தோல்வியை ஏற்றுக் கொண்டு வெற்றி பெற்றவர்களைப் பாராட்டும் பண்பு என சமூகமயமாக்கல் பண்புகள் வளர்க்கப்படுகின்றன.

எதிர்காலத்தில் வாழ்க்கையில் வரும் தோல்விகளை தாங்கிக் கொள்வதற்கும், தற்கொலை போன்ற விடயங்களில் ஈடுபடாமல் இருப்பதற்கும்  மேலும் குற்றச் செயல்களான கொலை, மதுப்பாவனை போன்றவற்றில் ஈடுபடாமல் இருப்பதற்கும் விளையாட்டுச் செயற்பாடுகளே உதவுகின்றன.

மாணவர் தலைவர் பதவிகள் மற்றும் பயிற்சிப் பாசறைகள்

தலைமைத்துவப்பண்பு வளர்க்கப்படுவதுடன் வாழ்வில் ஒரு செயலை பொறுப்பெடுத்து சரியாகத் திட்டமிட்டு நடாத்துதல், அதன் போது வரும் முரண்பாடுகளைத் தீர்த்தல், எந்த விடயத்தையும் துணிந்து செய்ய முற்படல், பிறரை தன் கட்டுப்பாட்டின் கீழ் வைத்திருத்தல், சமூக சேவைகளில் ஈடுபடல் போன்ற சமூகமயமாக்கல் பண்புகள் வளர்க்கப்படுகின்றன.

 வாணிவிழா, மீலாத்விழா, ஒளிவிழா 

மதங்களை மதித்து நடப்பதற்கு இது உறுதுணை புரிகின்றது. மற்றும் சமூகத்தில் இன, மத, ஒற்றுமைக்கும் இது வழி சமைக்கின்றது.இனக்கலவரங்கள் குறைவடைவதற்கும் இதுவே காரணமாகும்.

சுற்றுலா, களப்பயணம் மேற்கொள்ளல்

 பாடசாலை மாணவர்களை ஈடுபடுத்தும் பொது பல்வேறு சமூக கலாச்சாரங்களை உணரவும், சூழலுக்கு ஏற்ப இசைவாக்கம் அடைவது எப்படி என அறிந்து கொள்ளவும் முடிகிறது. 

குழுச் செயற்பாடுகள போன்றவை மூலம் உளவிருத்தி, தன்னம்பிக்கைதலைமைதாங்கும் பண்பு என்பன வளர்க்கப்பட்டு பின்காலத்தில் சமூகத்தில் செல்லும் பிள்ளைக்கு அவை சமூகத்தில் முன்மாதிரியாக வாழ, சமூகமயமாக்கலுக்கு வித்திடுகின்றது. மேலும் இவ்வாறான செயற்பாடுகள் மூலம் பயந்து பிறருடன் பேசாமல் ஒதுங்கி இருக்கும் பிள்ளை துணிந்து பிறருடன் சகஜமாக பேச முற்படுகின்றது. 

இணைப்பாடச் செயற்பாடுகள் மாணவனை சமூக மயமாக்கலுக்கு உட்படுத்துவது மட்டுமன்றி பாடசாலை வரவையும் அதிகரித்து கற்றலின் சலிப்புத்தன்மையை குறைக்கின்றது.

இதனால் பிள்ளைக்கு நல்லது எவை தீயது  எவை என பகுத்துத் தெரிந்து கொள்ளும் “அறிவு” வளர்க்கப்படும். 

இவ்வாறே நேரடியாகவும் மறைமுகமாவும் இணைப்பாடவிதானச் செயற்பாடுகள் சமூக மயமாக்கலை ஏற்படுத்துகின்றது. 

பாடசாலையில் ஆசிரியர்களும் அதிபரும் கற்றல் கற்பித்தல் செயற்பாடுகளுக்கு அளிக்கும் முக்கியத்துவத்தை இணைப்பாடச் செயற்படுகளுக்கும் அளிப்பதன் மூலம் பிள்ளைகளிடத்தில் சமூக மயமாக்கலை ஏற்படுத்தி சமூகத்தில்  நாட்டில் நற்பிரஜைகளை உருவாக்கும் தேசிய  இலக்கை அடைய முடியும்.

அ.லக்சனா

இரண்டாம் வருட கல்வியல் சிறப்பு கற்கை

கல்வி மற்றும் பிள்ளைநலத்துதுறை  ,

கிழக்குபல்கலைக்கழககம்

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.