தற்கால கல்வி அடைவை நோக்கியதா அலகை நோக்கியதா

மனிதனானவன் தாயின் கருவறையில் உருவாகிய காலத்தில் இருந்தே கற்கும் பாதையில் கால்தடம் பதித்து விடுகின்றான் என்கிறது உளவியல். அனுபவம் மூலம் கல்வி கிடைக்க பெற வேண்டும் என  இன்னோர் கோணத்தில் கல்விக்கு தத்துவம் சார்ந்து கருத்து வழங்குகிற தத்துவவியல் ஒரு திசையில். இவ்வாறு கல்வி என்பதற்கான வரையறைகளும் கருத்தியல் -களும் எண்ணில் அடங்காது பரந்து கிடக்கின்றன.

அந்தவகையில் இன்றய பாடசாலை கல்வி முறையானது பலவாறான கல்விக் கொள்கையினால் பிரகாசித்து வருகின்றது. ஆரம்பக் கல்வி ,இடைநிலைகல்வி, உயர்நிலை கல்வி எனும் 03 வகை, பிரிவுகள் சார்ந்த கல்வி நடைமுறைகள் இலங்கையில் காணப்படுகின்றன. 

இவ் கல்வி கொள்கைகள் அனைத்தும் அதாவது பாடசாலை ரீதிமான கல்வி அமைப்பினை நாம் அவதானித்தோம் ஆனால் அவை பெரும்பாலும் தற்காலத்தில் அடைவை நோக்கியாக காணப்படுவதை கண்டு கொள்ளலாம். 

தரம் 5 புலமை பரீட்சை சித்தி தொடங்கி தவணை பரீட்சைசை அடைத் தொடர்ந்து உயர்தர பரீட்சை சித்திவரை அடைவை மைய படுத்தியதாகவே இன்றய பாடசாலை இல்வி முறை காணப்படுவதை அவதானிக்கலாம். 

இதனாலேயே மாணவர்களின் கல்வி தேர்ச்சி சார்ந்த முழுமை ஒன்றை தற்காலத்தில் அடைய முடியாது  உள்ளது எனலாம். பிரதானமாக ஆளுமை தேர்ச்சி விடயத்தை கூறலாம்.

கல்வியில் அடைவு எனும் விடயம் முக்கியப் படுத்தப்படும் போது அலகு எனும் விடயம் அங்கே துணையாக வேண்டி உள்ளது. அடைவை நோக்கி நகரும் ஒவ்வொரு மாணவருக்கும் ஆசிரியருக்கும் கற்பிக்கும் அலகும் கறக்கபடும் அளவும் அவசியம் ஆகின்றது.

 புரோபல் இன் குழந்தை பூங்காவும், ரூசோ சொன்ன இயற்கை வாதமும் தற் கால கல்வியில் அலகும் அடைவும் சேர்ந்தோடும் போது சற்று மௌனித்து நிற்கத்தான் செய்கின்றது. 

கல்வியின் முன்னேற்றதிற்கு அலகும் அடைவும் நிச்சயம் தேவை அளவு கடக்காத வரை…..

இராசேஸ்வரன் டர்ஷனா

2ம் வருட 1ம் அரையாண்டு

கல்வியியல் மற்றும் பிள்ளை நலத்துறை , சிறப்புக் கற்கை மாணவி

கலை கலாசார பீடம் 

கிழக்கு பல்கலைகழகம்

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.