புரோபலின் குழந்தை பூங்காவும் இன்றைய நிலையும்

புரோபலின் "குழந்தை பூங்கா" இலட்சிய வாதத்தின் முக்கியமான பகுதியாகக் காணப்படுகின்றது. இலட்சியவாதம் என்பது மனிதன் எப்படியும் வாழலாம் என்பதன்றி, இப்படித்தான் வாழ வேண்டும் என்று வாழும்போதுதான் வாழ்வாங்கு வாழ்தல் அமையும். எனவே வாழ்வாங்கு வாழ இலட்சியம் அவசியம். அந்த வகையில் இலட்சிய வாதம் தொடர்பான புரோபலின் குழந்தை பூங்காவில் இலட்சியவாத ஆசிரியர் ஒருவரின் செயற்பாட்டினைக் காணலாம்.

இங்கு புரோபல் பாடசாலையைப் பூந்தோட்டமாகவும், ஆசிரியரை தோட்டக்காரர் ஆகவும் காட்டுகிறார். தோட்டக்காரர் சிறிய செடிகளை பெரிய மரங்களாக வளர்த்தெடுக்க அனைத்தையும் கவனமாக செய்கிறார். அதுபோல ஒவ்வொரு ஆசிரியரும் குழந்தைகள் முழு வளர்ச்சியும் பெறுவதற்கு அவர்களை ஒழுங்காக இலட்சியத்தோடு வழிநடத்த வேண்டும் என்கிறார். 

பாடசாலை என்பது மாணவர்களுக்கு இன்னும் ஒரு குடும்பச் சூழலை உருவாக்குகின்றது. குடும்பத்துடன் பிள்ளைகள் செலவழிக்கும் காலங்களை விட பாடசாலையில் மாணவர்கள் நேரத்தினை பயனுள்ள முறையில் கழிப்பதனைக் காணலாம்.ஒவ்வொரு பிள்ளையும் சிறந்த பிரஜையாக உருவாக்குவதில் பாடசாலையின் சேவை என்பது மிகப்பெரியதாகவே காணப்படுகின்றது. 

பாடசாலையில் மாணவர்களுக்கு வழங்கப்படும் கல்வியானது முறை சார்ந்த திட்டமிட்ட வகையில் வழங்கப்படுகின்றது. இதனால் குறித்த இலக்குகளை உரிய நேரத்தில் அடைவதற்கு இத்திட்டமிடல் முறையானது, பாரிய பங்களிப்பினைச் செய்கிறது. ஆகவே புரோபலின் குழந்தை பூங்காவின் கருத்துப்படி பாடசாலையானது பிள்ளைகளின் இலக்குகளை உரிய முறையில் அடையும் பூந்தோட்டமாக காணப்படுகின்றது.

ஆசிரியர்கள் எனப்படுபவர்கள், பிள்ளைக்கு இன்னுமோர் பெற்றோராக காணப்படுகின்றனர். பிள்ளையைத் தனது  இலக்கினை நோக்கி செல்வதற்கு ஆசிரியர்கள் வழிகாட்டுகின்றனர்.  பிள்ளைகள் பாடசாலைக்கு வரும்பொழுது குடும்பத்தில் கற்றுக்கொண்ட சில விடயங்களும், முன் பள்ளியில் கற்றுக்கொண்ட சில விடயங்களில் இருந்து பெற்றுக் கொண்ட  குறுகிய அறிவினை மாத்திரம் வைத்து சிறிய செடிகளாக உள்வரும் பிள்ளைகளைப், பெரிய மரங்களாக எதிர்காலத்தில் சிறந்த பிரஜையாக விளங்கவும், வேலை உலகிற்கும் தயார்படுத்துகின்றனர்.

சிறிய செடிகளாக இருக்கும் பிள்ளைகளின் திறனை வெளிப்படுத்த வழியினைச் செய்து பெரிய மரங்களாக வேறூன்றி நிற்கும் அளவுக்கு அவர்களின் இலட்சியங்களை அடையச் செய்யும் தோட்டக்காரராக காணப்படுகின்றனர்.

ஒவ்வொரு பிள்ளையும் தனது இலக்குகளை சிறிய வயதிலிருந்தே சரியாக இனங்கண்டு அதற்கு ஏற்ப பயிற்சிகள் வழங்கப்படும் பொழுது, உரியவகையில் உரிய இலக்கினை சரியான திட்டமிடங்களுடன் மேற்கொள்ளலாம். 

சில பிள்ளைகளுடைய இலக்குகளை அவர்கள் தீர்மானிப்பதில் பல சிக்கல்களும் ஏற்படும்,  அப்பொழுது தோட்டக்காரர்களாக இருக்கும் ஆசிரியர்களும் அவர்களுடைய திறனை வெளிப்படுத்தும் களமாக, அடையாளத்தினை உறுதி செய்து கொள்ளும் களமாக பூந்தோட்டமாகிய பாடசாலை காணப்படுகின்றது.

பாடசாலைகள் என்பது மிகச் சிறந்த முறையில் திட்டமிடலுக்கு உட்பட்டாலும் பல நேர்மாறான காரணிகளால் பாடசாலையில் ஒரு ஸ்தம்பிதமற்ற செயற்பாட்டினை காண முடியும். அதில் முக்கியமாக வளப் பற்றாக்குறை, போதைப்பொருள் பாவனை, நூலகங்களில் நூல்கள் பயன்படுத்தப்படாமை, ஆசிரியர் பற்றாக்குறை , மாணவர்கள் இடைவிலகல், பாடசாலை செயல்பாடுகளின் அபிவிருத்திகள் தடைப்படல்  போன்ற காரணிகளால் பாடசாலையானது உரிய இலக்குகளை அடைய முடியாமல் காணப்படுகின்றது. இவ்வாறான செயற்பாடுகளால் பாரிய வீழ்ச்சியினை சில பாடசாலைகள் எதிர் நோக்கிக் கொண்டிருக்கின்றன.

மேலும் மாணவர்கள் இடைவிலகல் என்பது ஒரு சாதாரண விடயமாகிவிட்டது. இது வறுமை போன்ற சில காரணங்களால் உருவாகியிருந்தாலும், இன்றைய காலகட்டத்தில் முறைசாராக் கல்வியில் காணப்படும் பல சலுகைகளின் காரணமாக பாடசாலைக் கல்வியிலிருந்து இடைவிலகல் மேற்கொள்ளப்படுகின்றது. இதனால் பாடசாலையின் அபிவிருத்தி தடைப்படுவதுடன், உரிய வகையில் இலக்குகளையும் அடைய முடியாமல் போகின்றது. 

இன்று மாணவர்கள் தங்களுக்கு தேவையான விடயங்களை சமூகவலைத்தளங்களான  Facebook,Twitter, youtube,Instra,Google போன்றவற்றிலிருந்து எடுத்துக் கொள்வதனால் பெரும்பாலும், ஆசிரியரை நாடும் தேவை என்பது குறைவாகவே காணப்படுகின்றது. இதனால் ஆசிரியருடைய  பெறுமதி என்பது சில சமயங்களில் குறைவாகவே மதிப்பிடப்படுகின்றது.

இன்று பல ஆசிரியர்கள் தமது கடமைகளைச் சரியாக செய்வதில்லை, என்று குறைபாடுகள் காணப்படுகின்றது. ஒரு ஆசிரியர் என்பவர் அனைத்து பிள்ளைகளுக்கும் முன்மாதிரியாக செயல்படுபவர். ஆதலால் தம் கடமைகளை சரிவர செய்து முடிப்பதன் மூலமே மாணவர்களை செதுக்க முடியும்.  அவர்களது லட்சியங்களை இலகுவாக அடையவும் வழி  வகுக்க முடியும்.

ஆசிரியர்கள் எனப்படுபவர்கள் அன்பு, கருணை, இரக்கம் என்பவற்றினைக் கொண்டிருக்க வேண்டும். மாணவர்களை ஒரு முழு மனிதனாக உருவாக்க வேண்டும். மாணவர்களின் பிரச்சனைகளை இனங்கண்டு அவற்றுக்கு தீர்வினை வழங்கும் பணியினை மேற்கொள்ள வேண்டும். பிள்ளைகள் தமக்கு ஏதாவது பிரச்சனை ஏற்படுமாயின், அவர்களிடம் தயக்கம் இன்றி கூறும் அளவிற்கு ஆசிரியர்கள் செயற்பட வேண்டும்.

ஒரு பாடப்பரப்பினை மாணவர்களுக்கு கற்பிக்கும் முன் அதைப் பற்றிய பூரண அறுவினை, ஆசிரியர்  பெற்றிருக்க வேண்டும். அப்போதுதான் சிறிய செடிகளாக இருக்கும் பிள்ளைகளை பாடசாலை எனும் பூந்தோட்டத்தின் ஊடாக பெரிய மரங்களாக வளர்த்தெடுக்க அனைத்தையும் கவனமாகச் செய்து, ஒவ்வொரு ஆசிரியரும் குழந்தைகள் முழு வளர்ச்சியும் பெறுவதற்கு அவர்களை ஒழுங்காக இலட்சியத்தோடு வழி நடத்த முடியும்.

கயஸ் கமிக்கா,

இரண்டாம் வருட சிறப்பு கற்கை மாணவி,

கல்வி மற்றும்  பிள்ளை நலத்துறை,

கிழக்குப் பல்கலைக்கழகம், இலங்கை.

(2020/2021)

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.