நீண்ட நேரம் ஒரே இடத்தில் அமர்ந்து வேலை பார்ப்பவரா நீங்கள்? உண்டாகும் ஆபத்துகள் என்னென்ன?

வளர்ந்து வரும் களங்களில் நீண்ட நேரம் ஒரே இடத்தில் அமர்ந்திருந்து கணினியில் வேலை பார்ப்பது அதிகரித்துவிட்டது.

Corporate, IT வேலைகளில் நீண்ட நேரம் உட்கார்ந்திருப்பது அவசியமாகும், இருக்கையில் ஒழுங்கான முறையில் அமர்ந்திருக்காவிட்டால் உடலுக்கு பல பின்விளைவுகள் ஏற்படும்.

நீண்ட நேரம் ஒரே இடத்தில் அமர்ந்திருப்பதால் ஏற்படும் மோசமான பின்விளைவுகளை பற்றி பார்க்கலாம். 

ஏற்படும் பின்விளைவுகள்

குறைந்தபட்சம் 45 நிமிடங்களுக்கு மேல் ஒரே இடத்தில் அசையாமல் அமர்ந்திருப்பது, முதுகில் பாதிப்பை உண்டாக்கும்.

இதனால் முதுகின் கீழ்ப்பகுதியில் தேய்மானத்தை அதிகரிக்கும், எனவே 45 நிமிடங்களுக்கு ஒருமுறை நடப்பது மற்றும் கை, கால்களை அசைக்க வேண்டும். 

ஒரே இடத்தில் நீண்ட நேரம் அமர்ந்திருந்தால் கால் மற்றும் தொடைப் பகுதி தசைகள் பாதிப்படையும்.

✅முதுகு வலி

நீண்ட நேரம் சாய்ந்தபடி அமர்ந்திருந்தால், முதுகில் கூனல் விழுந்துவிடும் வாய்ப்புள்ளது. இதனால் கடுமையான முதுகு வலியும், நேராக படுத்து தூங்குவதில் சிரமம் ஏற்படும்.

இதனால் முதுகு தண்டில் பாதிப்பு உண்டாக்கவும் மேலும் ஒழுங்கற்ற அல்லது சாய்ந்தபடி உட்காரும் பெண்களுக்கு நெஞ்செரிச்சல் ஏற்படும் வாய்ப்புள்ளது. 

கால்கள் தரையில் படாமல் காற்றில் ஆடுமாறு உட்கார்ந்திருப்பது முதுகில் கடுமையான வலி உண்டாக்கும். குறிப்பாக அமர்ந்திருக்கும் போது கால்கள் தரையில் நன்றாக ஊன்றியிருப்பது அவசியமாகும்.

இருக்கையில் அமர்ந்திருக்கும் போது குனிந்து கீழாக மொபைல் போனை வைத்து பயன்படுத்தினால் கடுமையான கழுத்து வலி உண்டாகும்.

✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.