நரைமுடி கருப்பாக மாற இந்த ஒரு செடியின் இலை போதும்: இப்படி பயன்படுத்துங்கள்.

ஆண், பெண் என இருவருக்கும் முடி உதிர்தல், வலுவிழந்த முடி, வறண்ட முடி, பொடுகு மற்றும் நரை முடி போன்ற பிரச்சனைகள் இருக்கிறது.

இன்றைய நாளில் பெரும்பலான இளைஞர்கள் சந்திக்கும் முக்கிய பிரச்சனை நரை முடி.

இயற்கை முறையில் நரை முடியை கருப்பாக மாற்ற மருதாணி இலைகளை பயன்படுத்தலாம். 

மருதாணி முடி இளநர மறையவும் கருமையான கூந்தலுக்காகவும் பயன்படுத்தப்படுகிறது.

கூந்தலுக்கு ஊட்டச்சத்து மற்றும் முடி வளர்ச்சியை அதிகரிப்பது உள்ளிட்ட பல நன்மைகளை மருதாணி வழங்குகிறது.

கூந்தலுக்கு மருதாணி மட்டும் பயன்படுத்துவது கூந்தலில் சிவப்பு மற்றூம் பழுப்பு நிற கறைகளை உண்டாக்கிவிடும். எனினும் ரசாயனங்கள் கலந்த கலவைக்கு பதிலாக மருதாணி பயன்படுத்துவது சிறந்தது. 

கூந்தலுக்கு மருதாணி விலைமதிப்பற்ற இயற்கை பொருள், இதை சரியான முறையில் பயன்படுத்துவதன் மூலம் மென்மையான கருமையான கூந்தலை பெறலாம்.

அடர்ந்த காடுபோல் முடி வளர வேண்டுமா? இந்த 6 விஷயங்களை மட்டும் செய்யுங்கள்

அடர்ந்த காடுபோல் முடி வளர வேண்டுமா? இந்த 6 விஷயங்களை மட்டும் செய்யுங்கள்

பயன்படுத்தும் முறை

மருதாணி இலை அரைத்து அதன் விழுதை ஒரு கப்பில் எடுத்து வைத்துக் கொள்ளவும்.

அத்துடன் எலுமிச்சம்பழச்சாறு, தேங்காய் எண்ணெய் மற்றும் நெல்லி முல்லி பொடி மற்றும் தயிர் சேர்த்து கலந்து கொள்ளவும்.

இந்த கலவையை இரவு முழுவதும் ஒரு பாத்திரத்தில் மூடி வைத்துவிட வேண்டும்.

பின்னர், இதனை காலையில் எழுந்து தலை முடியில் தேய்த்துக் கொள்ள வேண்டும்.

சுமார் ஒன்று முதல் ஒன்றரை மணி நேரம் வரை காய வைத்துவிட்டு, பின்னர் சீயக்காய் தேய்த்து குளிக்க வேண்டும்.  

✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.