வாழ்நாள் நீடித்த கல்வி.

 

மனித இனம் தோன்றி இற்றைக்கு பல்லாயிரக் கணக்கான வருடங்கள் ஆகின்றன. உலகம் அன்று இருந்த நிலைமைக்கும் இன்று இருக்கும் நிலைமைக்கும் பல வேறுபாடுகள் உண்டு. இதற்கான காரணத்தை என்றாவது நாம் ஆராய்ததுண்டா? தாயிலிருந்து சேய் தோன்றியது போல கல்லில் இருந்து கணினி தோன்றிய இருபத்தியோராம் காற்றாண்டிலே வாழ்ந்து கொண்டிருக்கும் நாம் அறிய வேண்டிய விடயங்கள் பல உள்ளன.

 அவற்றுள் முக்கியமானது வாழ்நாள் நீடித்த கல்வி ஆகும். அனைத்திற்கும் ஆதாரமாய் திகழும் கல்வி, ஒருவன் பிறக்க முன்பிலிருந்து அவன் இறக்கும் வரை அவனுடன் தொடர்புறுகிறது. இதனையே வாழ்நாள் நீடித்த கல்வி என்பார்கள். அதாவது ஒருவனின் வாழ்நாள் முழுவதும் நீடிக்கும் கல்வியே இதன் சாராம்சம் ஆகும்.

கல்வி என்றவுடன் அனைவரும் கூறுவது முன்பள்ளியில் இருந்து உயர்தல்வி வரை இடம்பெறும் செயற்பாடு என்றுதான். ஆனால் பாடசாலையோ அல்லது உயர்கல்வி நிறுவனங்களோ வெறுமனே கல்வி புகட்டும் நிலையங்கள் மாத்திரமே. கல்வி அதனுடன் நின்று விடுவதில்லை.கரு உருவாகி ஒரு குழந்தை எப்போது பிறக்கின்றதோ அப்போதே கல்வியும் பிறக்கின்றது.இந்த வாழ்நாள் நீடித்த கல்வி பற்றி பல அறிஞர்கள் கூறுகின்றனர். உதாரணமாக நைதலிம் கொள்கை கூட இவ் வாழ்நாள் நீடிந்த கல்வி பற்றி கூறுவதை காணலாம். 

அது மட்டுமல்ல பௌத்த தத்துவம் கூட இது பற்றி கூறுகின்றது. பிலிப்ஸ் கூம்ஸ், எட்கர்பொரட் போன்றோரும் இதன் அவசியத்தை வலியுறுத்தியுள்ளனர்.கல்வி செயற்பாட்டில் இவ் வாழ்நாள் நீடித்த கல்வியின் பங்களிப்பு இன்றியமையாததாகும்.

உலகமானது பல மாற்றங்களுக்கு உள்ளாகி வருகின்றது. அதற்கு தகுந்தாற் போல ஆசிரியர்களும் மாணவர்களும் தொடர் மாற்றத்திற்கு உட்பட வேண்டும். இதற்கு வாழ்நாள் நீடிந்த கல்வி அவர்களுக்கு அவசியம். நவீன யுகத்தில் வாழம் நாம் அதன் நடைமுறைகளை கற்க வேண்டியது அவசியம்.

 ஒரு ஆசிரியர் தான் கற்ற காலத்தில் காணப்பட்ட கல்வி முறைக்கு ஏற்ப கல்வியை வழங்கினால் அதனை மாணவர்களால் ஏற்றுக்கொள்ள முடியாது. ஆகவே கால ஓட்டத்திற்கு ஏற்ப தன்னை மாற்றிக் கொண்டு ஒரு ஆசிரியர் வாழ்க்கை முழுவதும் கற்றுக் கொண்டே இருக்க வேண்டும். இதனையே ஒளவையார் “கற்றது மண்ணளவு, கல்லாதது உலகளவு” என்கிறார்.

ஒருவன் சமூகத்தில் சிறந்து விளங்க பாடசாலைக் கல்வியை தாண்டி வாழ்நாள் நீடித்த கல்வியும் முக்கியம். அக் கல்வியில் விழுமியம், அன்பு, மரியாதை என பல விடயங்கள் அடங்கியிருக்கும். தற்கால உலகமானது தொழிநுட்ப வளர்ச்சியுடன் மாத்திரம் நின்றுவிடவில்லை, வேலைக்கான போட்டி தண்மையையும் உருவாக்கியுள்ளது. இப் போட்டித்தன்மை தற்றலை வேண்டி நிற்கின்றது.

அதாவது தொடர் உலக மாற்றங்களை தன்னுள் வாங்கி அதற்கேற்றார் போல செயலாற்றும். நபர்களே தற்கால உலகில் வெற்றி பெறுகின்றனர். ஆகவே இதற்கு வாழ்நாள் முழுவதும் கற்க வேண்டியது அவசியமாகின்றது.

ஒரு குழந்தை பிறந்த உடனே கற்க தொடங்குகிறது. இங்கு குழந்தை சுவாசிக்கவும், அழவும், பாலி குடிக்கவும், மலம், சிறுநீர் என்பன கழிப்பதற்கும் ஆசிரியராக இயற்கையே காணப்படுகின்றது. ரூசோவும் இதனையே கூறி நிற்கின்றார். ஆகவே ஒரு பிள்ளைக்கு இயற்தை மிக அவசியமாகும்.

இந்த வாழ்க்கை நீடிந்த கல்வியானது மனித வாழ்க்கையின் அனைத்து விடயங்களிலும் தாக்கம் செலுத்துகின்றது. ஒரு மனிதனின் தேவைகள் முன்பிருந்ததை விட தற்போது அதிகரித்துள்ளன. அனைத்து துறைகளும் தொடர் மாற்றங்களிற்கு உள்ளாகின்றன. இவை யாவும் இத் தொடர் கல்வியின் விளைவே.

 உதாரணமாக மருத்துவ துறையை எடுத்துக் கொண்டால் அக் காலத்தில் காணப்பட்ட மருத்து முறைகளை விட தற்கால மருத்துவ முறைகள் வெகுவாக வளர்ந்துள்ளன.இதற்கு காரணம் அதிகரித்துள்ள தொழிநுட்ப வளர்ச்சியே ஆகும். இதனை புரிந்து கொள்ள வாழ்க்கை நீடித்த கல்வி அவசியமாகின்றது.

இந்த வாழ்த்தை நீடித்த கல்வியினால் பல நன்மைகள் உலதில் இடம் பெறுகின்றன. இவற்றை அறிய வேண்டியது நமது தேவைப்பாடாகும். அவ்வாறு அறியும் போதே பிறருக்கு அதனை எடுத்துக்கூற முடியும். அவ்வகையில், இத் தொடர்ந்து தற்றல் மூலம் உலக மாற்றத்தையும், அதனை கையாளும் விதம் தொடர்பான கற்றலையும் வளர்க்க முடியும். மற்றும் வேலை வாய்ப்பை பெற்றுக் கொள்ளல், சமுதத்தில் நிலைத்திருத்தல், சமுக வளர்ச்சிக்கு பங்காற்றல், சிறந்த பிரஜைகளை உருவாக்குதல் போன்ற ஏராளமான நண்மைகளை பெற முடியும்.

இவ் வாழ்க்கை முழுவதும் கற்றல் மூலம் அறிவு, புதிய பரிணாமங்கள், திறன்கள், மதிப்புகள், அணுகுமுறைகள், விருப்பங்கள் என்பன வளர்ச்சி பெறுகின்றன.. இதனை ஆசிரியர்கள், மாஅவர்கள், பெற்றோர்கள் போன்றோர் சரியாக புரிந்து கொண்டு தற்கால சூழலுக்கேற்ப பிள்ளைகளை தயார்படுத்த வேண்டியது அவசியமாகும். இதற்கு தொடர் கல்வியே அவசியமாகின்றது.

இவ்வாறு மேலுள்ள மேலுள்ள காரணங்களை தொகுத்து நோக்கும் போது வாழ்த்தை நீடித்த கல்வி பற்றி அறிந்து தொள்ள முடிவதுடன், இக் கல்வி காலத்தின் கடப்பாடாக காணப்படுவதனையும் அவதானிக்கலாம்.

ஆகவே ஒருவன் தான் பிறந்தது முதல் கற்றுக் கொண்டே இருந்தாலன்றி வாழ்க்கையை வெல்ல முடியாது என்பது தெளிவாகிறது. அதனடிப்படையில் வாழ்நாள் முழுவதும் கல்வியை கையாண்டு சமுகத்தில் நற்பெயரை எய்துவோமாக!

யோ.புனிதராஜ்,

இரண்டாம் வருட முதலாம் அரையாண்டு,

கல்வியில் சிறப்பு கற்கை,

கல்வி மற்றும் பிள்ளை நலத்துறை,

கலை கலாசார பீடம்,

கிழக்கு பல்கலைக்கழகம், இலங்கை.

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.