சமூக மாற்றத்தில் கல்வியின் பங்கு

கல்வி என்பது பிள்ளையின் உள்ளே இருக்கு ஆற்றல்களை வெளிக்கொணரும் மாபெரும் மூலமாகும். எனவே இந்த கல்வி மூலமே அறிவு சார்ந்த சமூகம் எனவே சிறந்த சமூக உருவாக்கத்திற்கும் உயர்ந்த மாற்றத்திற்கும் கல்வியின் பங்கு இன்றியமையாத ஒன்றாகும்.

அந்த வகையில் ஒரு சமூகத்தின் முன்னேற்றம் சமூகத்தின் நகர்வு சமூக வளர்ச்சி எழுச்சி மற்றும் அபிவிருத்தி என்பவற்றினை தீர்மானிக்கும் சக்தியாக கல்வியே காணப்படுகின்றது. இன்றைய நவீன மாற்றங்களுக்கு ஏற்ப கல்வி என்பது அனைவருடைய வாழ்விலும் பின்னிப்பிணைந்த ஒரு விடயமாக காணப்படுகின்றது.

 நமது  சுதந்திரம் சமத்துவம் சகோதரத்துவம் போன்ற முக் கூட்டமைப்பை ஒழுங்குபடுத்துவதே கல்விதான்  ஏனெனில் சமூகத்தில் ஒரு மனிதனை சமூகக் கட்டுக்கோப்பிற்கு உரியவராக மாற்றுகின்ற பணியை மேற்கொள்வதே இங்கு கல்வி என்றால் அது மறுக்க  முடியாத ஒரு விடயமாகும்.

சமூக மாற்றம் என்பது சமூகத்தின் அனைத்து விடயங்களிலும் ஏற்படக்கூடிய ஒரு பொதுவான விடயம் தான் ஆனால் இந்த சமூக மாற்றத்தை சிறப்பான ஒன்றாக மாற்ற சிறந்த ஆயுதம் இந்த கல்வியே ஆகும் அன்று நாட்டுக்கு ஒருவர் கல்வி கற்று நாட்டை வளப்படுத்தினர் இன்று வீட்டுக்கு ஒருவர் என அனைவரும் கல்வி கற்று சமூகத்தை ஒரு உயர்ந்த நிலைக்கு இட்டுச் செல்கின்றனர்.

இன்றைய சமூகம் கற்றோருக்கு உயர்ந்த இடத்தை  வழங்கி கௌரவிக்கின்றது எனவே கல்வி கற்ற ஒருவனால் தனது சமூகத்தினை ஓர் உயர்ந்த நிலைக்கு கொண்டு செல்ல முடியும் என்பது நிரூபிக்கப்பட்டதொரு உண்மையாகும்.

" மன்னனுக்கு தன்னாட்டில் மட்டும்தான் சிறப்பு கற்றோனுக்கு சென்ற இடமெல்லாம் சிறப்பு "

 எனவே இக்கருத்தின்படி கல்வி கற்ற ஒருவன் தான் செல்லும் இடமெல்லாம் சிறப்பு பெற்று அவ்விடங்களையும் சிறப்பாக உயரச் செய்யலாம் எனவே ஒரு சமூக மாற்றத்திற்கு கல்வி என்பது அன்று தொட்டு இன்று வரை சிறப்பு பெற்ற ஒன்றாகவே காணப்படுகின்றது.

 சமூக மாற்றம் ஒரு சமூக செயல்முறையாகவோ அல்லது ஒரு சமூக போக்காகவோ அல்லது ஓர் கட்டமைப்பு ரீதியான மாற்றமாகவோ தோன்றலாம் இவ்வாறான மாற்றங்கள் ஒரே அடியாக நிகழ்வதில்லை  அவை ஓர் முறையான ஒழுங்கின் அடிப்படையில் ஏற்படுகின்றன.

ஒரு நாடு அபிவிருத்தி அடைந்து எழுச்சி பெறுவதிலும் அதே நாடு பலவீனமடைந்து வீழ்ச்சி பெறுவதிலும் கூட ஓர் பரிணாமம் உண்டு எனவே அதனைப் போல இந்த சமூக மாற்றமும் ஒரு படி முறையைக் கொண்டு அமைந்ததாகவே காணப்படுகின்றது.

 ஒரு சமூகத்தில் நடைபெறுகின்ற மாற்றங்கள் நீண்ட மாற்றங்கள் ஆகவோ நடுத்தர மாற்றங்களாகவோ குறுகிய மாற்றங்கள் ஆகவோ காணப்படலாம் ஒரு சமூகத்தில் படிப்படியாகத்தான் மாற்றங்களை எதிர்கொள்ள முடியும் .

பிளேட்டோவின் கருத்துப்படி கல்வியால் நல்ல மனிதர்கள் உருவாவது  மட்டுமல்லாது அவர்கள் நல்ல முறையில் செயலாற்றவும் மனிதன் பழக்கப்பட்டு கொள்கிறான். உதாரணமாக இன்றைய நவீன நவநாகரிக உலகிலே போதைப் பொருள் பாவனை என்பது மலிந்து போன சமூகப் பிரச்சினையாகும்.

எனவே இதன் காரணமாக இன மதம் பாராது அனைத்து சமூகங்களும் இன்று சீரழிந்து கொண்டு வருவதனை நாம் கண்ணூடாக அவதானிக்கின்றோம் எனவே இந்த பிரச்சினையை நீக்கி சமூகத்தில் மாபெரும் மாற்றத்தினை உருவாக்க முறைசாரா கல்வி முறையில் கல்வி முறைசார் கல்வி என்பன பெரும் பங்கினை வகிக்கின்றன.

 பாடசாலை மாணவர்களை இவ்விடயத்தில் விழிப்புணர்வு பெற வைத்து சமூகத்திற்கான விழுமியங்கள் ஒழுகலாறுகள் நல்லவை   தவிர்க்கப்பட வேண்டியவை அனைத்தையும் கல்வியின் மூலம் புகட்டுகின்ற சந்தர்ப்பத்தில் சிறப்பான போதையற்ற உலகினை கட்டி எழுப்ப முடியும்.

இன்றைய சமூகத்தில் ஒற்றுமையின்மை சாதி மத பிரிவினைகள் குற்ற செயல்கள் சகிப்புத்தன்மையற்ற நிலை என்பன அதிகரித்து காணப்படுகின்றது எனவே இதன் காரணமாக சமூகச் சமநிலையானது சீர்குலைந்தே காணப்படுகின்றது. இவ்வாறான பிரச்சனைகள் கல்வி அறிவு குறைவான சமூகத்திலேயே அதிக அளவில் காணப்படுகின்றது.

" எங்கோர் நூலகம் திறக்கப்படுகின்றதோ அங்கு ஆயிரம் சிறைச்சாலைகள் மூடப்படும்"

 எனவே கல்வி என்பது சக்தி வாய்ந்த ஒரு அணுகுண்டு இதன் தாக்கம் சமூகத்தை நல்ல நிலைக்கு உயர்த்துமே அன்றி வீழ்த்தி விடாது.

 பாடசாலையில் மாணவர்களுக்கு நற்பழக்க வழக்கங்கள் விழுமிய பண்புகள் நட்புணர்வான வாழ்வு சகிப்புத்தன்மை போன்றவற்றை உரமூட்டி வளர்க்கும் போது அந்த பயிரின் விளைச்சலை முழுமையாக பெற்று பயனடைய முடியும்.

எனவே ஒரு சமூகத்தை கட்டமைப்புக்குள் பலப்படுத்துவதில் கல்வியின் பங்கு அத்தியாவசியமான ஒன்றாகும். இந்த அறிவியல் யுகத்தில் பல கரடு முரடான பாதைகளும் வழிமாறிகளும் அதிகம் எனவே இவ்வாறான வழியிலிருந்து நீங்கி நேர்த்தியான பாதையில் முறையான பயணத்தை மேற்கொண்டு சமூகத்தில் பல மாற்றங்களை விதைத்திட கல்வி இன்றி அமையாது.

 கல்வி என்பது அனுபவங்களை ஒழுங்குபடுத்துவதும் மீள அமைப்பதுமாகும்  கற்றல் அனுபவம் என்பது வாழ்வின் மிகச்சிறந்த ஓர் அங்கமாகும் இந்த அனுபவமானது ஒரு மனிதனை சகல பிரிவுகளிலும் உள்ள ஆற்றல்களை உச்சவிருத்தி செய்ய உதவுகின்றது மாற்றத்தின் திறவுகோலாக கல்வி காணப்படுகின்றது.

இன்றைய சமூகத்தில் குழந்தை தொழிலாளர்கள் என்ற விடயமானது அனைவராலும் பேசப்படும் ஒரு விடயமாக காணப்படுகின்றது என் நிலை குடும்ப வறுமை காரணமாகவோ மற்றும் பெற்றோரின் கவனயீனம் போன்றவற்றினால் அதிகரித்து காணப்படுகின்றது இதன்படி பள்ளி செல்லாத எந்த குழந்தையும் குழந்தை தொழிலாளி தான் என்ற கருதுகோளின் அடிப்படையில் உள்வாங்கப்பட்டுள்ளது.

 அந்த வகையில் உலகிலேயே பல லட்சக்கணக்கான குழந்தைகள் தொழிலாளர்களாக காணப்படுகின்றனர் இதனால் இச்சமுகம் எந்தவித முன்னேற்றங்களும் இன்றி . சீரழிந்து போகின்ற நிலைமைக்கு தள்ளப்பட்டுள்ளது  எம்விஎஃப் இன் ஆராய்ச்சியின் முடிவுகளில்  கல்வி என்ற ஒரு கருப்பொருள் 4 லட்சம் குழந்தை தொழிலாளர்களை மாணவர்கள் ஆக்கியுள்ளது என்பதனை நிரூபித்துள்ளது எனவே கல்வி என்பது சிறப்பான ஒன்றாகும்.

 எனவே மேற்குறிப்பிட்ட விடயங்களின்படி கல்வி என்பது சமூக மாற்றத்திற்கான ஆற்றல்மிக்க கருவியாக பிற்படுத்தப்பட்ட  சமூக குழுக்களுக்கு சமவாய்ப்பு தரும் கருவியாகவும் மற்றும் சமூகத்தில் பல புரட்சிகளை முன்னெடுத்து சமூகத்தினை சிறப்பான பல மாற்றங்களுடன் வெற்றி நடை போட வைக்கும் மூன்றெழுத்து தாரக மந்திரமாகும் என்பது நிரூபிக்கப்பட்ட உண்மையாகும்.

ச.வாசுகன்

கிழக்குபல்கலைக்கழகம் கலை கலாச்சார பீடம்

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.