அதிகம் சாப்பிட்டால் உடலுக்கு ஆபத்தாகும் காய்கறிகள் என்னென்ன தெரியுமா?

உடல் எடை குறைக்கவும், உடல் ஆரோக்கியத்திற்கும், காய்கறிகளே பெரும்பாலும் பரிந்துரைக்கின்றன.

ஆனால் சில காய்கறிகளை அதிகம் சாப்பிட்டால் உடலுக்கு சில பிரச்சனைகளை உண்டாக்கும். ஆபத்தை ஏற்படுத்தும் சில காய்கறிகளை பற்றி பார்ப்போம்.

குடைமிளகாய் குடைமிளகாயை அதிகமாக சாப்பிடும் போது இதய நோய், புற்றுநோய், நீரிழிவு நோய் ஆகியவை வருவதற்கு அதிக வாய்ப்புள்ளது. மேலும் இது அலர்ஜியை உருவாக்கும் காய்கறிகளாகும்.

📌குடைமிளகாய்

ப்ரோகோலி ப்ரோகோலியை அதிகமாக சாப்பிடுவதால் வயிறு உப்பசம் ஏற்படும் ஆபத்து அதிகமுள்ளது.

📌ப்ரோகோலி

பிரஸ்ஸல் ஸ்ப்ரொட்ஸ் ப்ரோகோலியை போல் இந்த பிரஸ்ஸல் ஸ்ப்ரொட்ஸ் காய்கறியும் வாயுவை உண்டாக்க கூடியது.

📌பிரஸ்ஸல் ஸ்ப்ரொட்ஸ்

பாட்டிலில் அடைத்து விற்கப்படும் காய்கறிகள் இந்தக் காய்கறிகளில் அதிகளவு உப்பு இருப்பதால், உங்கள் செரிமானத்திற்கு இடையூறு விளைவிப்பதோடு வயிற்றுப் பிரச்சனைகளையும் உண்டாக்கும்.

செலரி இதில் எந்தவித ஊட்டச்சத்துகளும் கிடையாது. மேலும் இதில் 68 வகையான பூச்சிக்கொல்லிகளின் எச்சம் இருப்பதாக ஆய்வுகள் கூறுகிறது.

📌செலரி

சோளம் பலரும் விரும்பி சாப்பிடும் சோளத்தில் மரபணு மாற்றம் செய்யபட்டதன் காரணமாக, அதை சாப்பிடும்போது நம் உடலுக்கு அறிமுகமில்லாத புரதம் கிடைக்கிறது. இது பலருக்கும் ஒவ்வாமையை ஏற்படுத்தும்.

📌சோளம்

கத்தரிக்காய் கத்தரிக்காயில் இருக்கும் சுவை நம் உடலில் கொழுப்பு, கலோரி மற்றும் சோடியம் அளவை அதிகரிக்கிறது.

📌கத்தரிக்காய்

உருளைக் கிழங்கு உருளைக் கிழங்கை தோலை சீவி, உப்பு சேர்த்து வறுத்து சாப்பிடுவதால் இதிலுள்ள சத்துக்கள் எல்லாம் நமக்கு கிடைப்பதில்லை.

📌உருளைக் கிழங்கு

கீரைகள் செயற்கை முறையில் விளைவிக்கப்பட்ட கீரைகளை உண்ணும் போது அதில் 50-க்கும் மேற்பட்ட பூச்சிக்கொல்லி மருந்துகளின் எச்சம் இருக்கும்.       

✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.