பாடலைக்கும் சமூகத்திற்கும் இடையிலான தொடர்புகள்

சமூகத்தின் தேவைகளை நிறைவேற்றும் ஓர் அலகு பாடசாலை என்ற வகையில் எந்த ஒரு சமூகத்தினரும் பண்பாடுகளை முறைசார் ரீதியில் இளம் சந்ததியினருக்கு கையளிக்கும் நிறுவனம் பாடசாலை ஆகும். சமூக இயல்பாக்கக் காரணியாக பாடசாலை ஒரு முக்கிய இடத்தை வகிக்கின்றது. பாடசாலை ஒரு சமூக முறைமை ஆகும். 

பாடசாலையானது அதனை சூழவுள்ள பரந்த சமூகத்தினுள் விசேட குறிக்கோள்கள் பணிகள் பாரம்பரியங்கள் பொறுப்புக்கள் அதிகாரங்கள் மற்றும் சமூக அங்கீகாரமுடைய சிறியதொரு சமூகமாகும். கல்வியலாளர்களின் கருத்துப்படி அது கல்விப் பணிகளை ஆற்றுவதோடு வெவ்வேறு வயது பிரிவுகள் ஒவ்வொரு நுண்மதி மட்டங்களை பிரதிநிதித்துவப்படுத்துவோருடன் ஒத்துழைப்புடன்  சகவாழ்வு வாழும் அங்கத்தவர் ஒழுங்கமைத்த ஓர் அலகாகும் அவ்வலகுகள் கிராமிய நகர்ப்புறம் என்றவாறு மக்கள் கட்டமைப்புக்கு அமைவாகவும் இனம் மற்றும் சமயங்களுக்கு ஏற்பவும் அதிகார ரீதியில் வெவ்வேறுபட்டதாகும். எனினும் இவ்வெல்லா அலகுகளையும் தனித்தனி சமூகத் தொகுதிகளாக கருத முடியுமாயினும் அவற்றுக்கு தனியே போசிப்பு பெற முடியாது.

பாடசாலையானது சமூகத்தின் தேவைகளை நிறைவேற்றம் செய்தல் வேண்டும். சமூகத்தின் தேவைகள் மாற்றமடையும் போது பாடசாலையும் கலைத்திட்டமும் கற்றல்- கற்பித்தல் முறைகளும் மதிப்பீடு பாடசாலையின் ஒட்டுமொத்த செயல்முறையும் மாற்றமடைதல் வேண்டும். மேலும் பாடசாலையின் மாற்றங்கள் சமூகத்துள் ஊடு கடத்தப்படல் வேண்டும். எனவே பாடசாலைக்கும் சமூகத்திற்கும் இடையே பரஸ்பர தொடர்பு பேணுவது அவசியமானதாகும்.

பாடசாலைக்கும் சமூகத்திற்கும் இடையிலான தொடர்பின் தன்மையை நோக்குகையில் இனங்காண வேண்டிய முக்கியமான மற்றோர் எண்ணக்கரு உள்ளது. சமுதாயம் என்ற எண்ணக்கருவே அதுவாகும். 

1. தமது குடும்பம் -குடும்பம் 

2. தான் பணியாற்றும் இடம் (தொழில் நிலையம்இ அலுவலகம்இ வேலைத்தளம் )

3. தம்முடன் அதே பிரதேசத்தில் வாழ்வோர் - (கிராமியச் சமுதாயம்இ நகர்புற சமுதாயம்)

பாடசாலைக்கும் சமூகத்திற்கு இடையிலான தொடர்பின் இன்றியமையாமை பற்றி பின்வருமாறு நோக்கலாம். 

பாடசாலை ஒரு சமூக நிறுவனம் சமூக உறுப்பினர்களால் குறிக்கப்பட்ட இடத்தில் உரிய கால நேரத்தில் ஏற்ற சூழ்நிலையில் வகுக்கப்பட்ட வழிகளுக்கு அமைய கல்வி அளிப்பதற்காக ஏற்படுத்தப்பட்ட இடம் தான் பாடசாலை.

மற்றவர்களோடு எவ்விதம் நடந்து கொள்ள வேண்டும் என்பதற்கான இலக்கணம் வகுத்துக் கொடுக்கும் இடம் பாடசாலை.

சமூகத்தின் ஒவ்வொரு அசைவிற்கும் அதன் வளர்ச்சிக்கும் கல்வியே காரணியாக இருப்பதால் கல்வி தொடர்பான மனோபாவமும் சிந்தனைகளும் காலத்திற்கு காலம் மாறிக்கொண்டே இருக்கின்றன.

பிள்ளை பருவத்தில் இருந்து கல்வி வாய்ப்பிற்கான ஏற்பாடுகள் தனிச்சிறப்பு வாய்ந்த தேசிய முயற்சியாக கருதப்பட்டு தொடர்ந்து வழங்கப்பட்டு வருகின்றது.

சிக்கலான சமுதாய   அமைப்பின் நடுவில் வாழும் ஒவ்வொரு மனிதனும் சமூகத்திற்கு ஆற்ற வேண்டிய காலக் கடமைப் பொறுப்புக்கள் உள்ளன. சமுதாயத்திற்கான தேவைகளை நிறைவேற்றும் கடப்பாடு தனி மனிதனுக்கும் உள்ளது.  

பாடசாலை ஒரு சமூக முறமையாகும். மாணவர்களின் அறிவு விருத்திஇ ஆளுமை விருத்தி சமூக திறன்கள் என்பவற்றை உருவாக்கி அவர்களை தான் வாழுகின்ற வாழ்க்கைக்கும் தனது நாட்டிற்கும் சர்வதேசத்திற்கும் தகுதியானவர்களாக ஒப்படைப்பது மிகப் பிரதான பங்கு வகிக்கும் ஓர் அமைப்பாகும். 

பாடசாலை பரந்த சமூகத்தில் செயல்படுகின்ற சமூகத்திற்கே உரித்தான கட்டமைப்பு ஆதலால் சமூக பாதுகாப்பிற்கும் சமூகத் தேவைகளை நிறைவு செய்வதற்கும் உரிய ஓர் அங்கமாக விளங்குகின்றது.

இளம்தலைமுறை ஒழுக்கம் பண்பாடு கலாசாரம் என்பவற்றிற்கு இட்டுச் செல்வதோடு அவர்களை வேலை உலகிற்கு இட்டுச் செல்கின்ற முக்கியமான பொறுப்பும் பாடசாலைக்கு உண்டு. பாடசாலைகள் இளம்பிள்ளைகளை பாரிய சமூக நிறுவனங்கள் என்பவற்றிற்கு அறிமுகம் செய்கின்றன. எனவே ஒரு சமூகத்தில் பாடசாலையில் பங்களிப்பு தனித்துவமான ஒன்றாகும்.

பாடசாலைகள் சமூகத்தின் ஒரு உறுப்பாக இன்றும் வளர்ச்சி அடைந்து நிலைத்து நிற்பதற்கு காரணம் பாடசாலைகளில் இருந்து சமூகம் எவற்றையோ எதிர்பார்க்கின்றன என்பதனாலாகும். பாடசாலைகள் சமூகத்தின் பல்வேறு எதிர்பார்க்கைகளை நிறைவேற்ற வேண்டிய நிலையில் உள்ளன. கல்வி மூலம் சமூகத்துக்கு பொருத்தமானவன் உருவாக்கப்பட வேண்டும் என்றால் இந்நோக்கம் முழுமையாக நிறைவேற்றப்படுவதற்கு பாடசாலைகள் சமூக எதிர்பார்க்கைகளை நிறைவு செய்யத் தவறும் போது பாடசாலைகள் சமூகத்தினால் நிராகரிக்கப்படுவதுடன் பாடசாலைகள் அற்ற சமூகம் ஒன்று உருவாக வேண்டிய கட்டாய நிலை எதிர்காலத்தில் உருவாவது தவிர்க்க முடியாததொன்றாகிவிடும். 

இன்று வீட்டுக்கு வீடுஇ சந்திக்கு சந்திஇ தெருவுக்குத் தெரு பாலர் தொடக்கம் பல்கலைக்கழகம் வரையான தனியார் வகுப்புகள்  காணப்படுகின்ற நிலையிலும் பாடசாலைகள் சமூகத்தில் நிலைத்திருக்கின்றன என்றால் பாடசாலைகளிடம் இருந்து சமூகம் எவற்றையோ எதிர்பார்க்கின்றன அவ் எதிர்பார்ப்புகளை அவை நிறைவேற்றிக் கொண்டிருக்கின்றன என்பது மறுக்க முடியாத உண்மையாகும். 

சமூக எதிர்ப்பார்க்கைகளை முழுமையாக நிறைவேற்ற பாடசாலையின் செயற்றிறன் மிக முக்கியம் பெறுகின்றன.

பாடசாலைகளின் செயற்றிறன் பாடசாலை எந்தளவுக்கு சமூகத்திற்குள் செல்கின்றன. சமூகம் எந்தளவிற்கு பாடசாலைக்குள் வருகின்றது என்பது குறித்து அமைகின்றன பாடசாலைச் செயற்பாடு சமூகத்துடன் இணைந்தும் சமூக இயக்கம் பாடசாலையுடன் இணைந்தும் இருக்கத் தவறும் போது பாடசாலையின் செயற்குழு அடைந்து செல்ல வேண்டிய கட்டாய நிலை உருவாகிறது. 

பாடசாலைகள் சமூகத்திற்கு திறந்து விடப்பட வேண்டும் என்றொரு கருத்து அண்மைக்காலமாக  வலியுறுத்தப்பட்டு வருகின்றது. இதற்கு பாடசாலையின் செயற்றிறன் அவசியம் என்பது மறுக்க முடியாததொன்றாக காணப்படுகின்றது எனலாம். 

உலகளாவிய ரீதியில் வெளிப்படத் தன்மை அதிகரிக்கவும் கல்வியில் எதிர்பார்க்கப்பட்ட விளைவுகளை அடையவும் சிறப்பாக பயன்படுத்தப்பட்ட ஒரு வழிமுறை பிரதானமாக பாடசாலை மட்டத்தில் கல்வி செயற்பாட்டில் பெற்றோரையும் சமுதாயத்தையும் ஈடுபடச் செய்வதாகும். 

Hoy Hoy 2006  ஆய்வின்படி பாடசாலை ஆசிரியர்கள் பெற்றோர்கள் மாணவர்கள் ஆகியோர் ஒன்றிணைந்து இயங்குவதன் ஊடாகவே மாணவர்கள் அதிசிறப்பாக கற்கின்றார்கள். பல்வகைப்பட்ட 96  பாடசாலைகள் பற்றியது. 

ஆய்வின்படி பிற காரணிகளை விட சமுதாய பங்கேற்பு காரணியே அதிக முக்கியத்துவம் வாய்ந்தது என்று குறிப்பிட்டுள்ளார். இதன் காரணமாக சமுதாய பங்கேற்பினூடாக பாடசாலைகளை மேம்படுத்துவதை சகல சர்வதேச நிறுவனங்களும் பரிந்துரைக்கின்றன. 

சமூக எதிர்பார்க்கைகளை நிறைவேற்ற சமூகத்தினால் ஆக்கப்பட்ட சமூக நிறுவனமாகிய பாடசாலைகள் சிறந்த தனியார் தொடர்புகளை கொண்டிருப்பதன் மூலமே அவை வினைத்திறன் மிக்க பாடசாலைகளாக மாறி சமூக எதிர்பார்க்கைகளை நிறைவேற்றுகின்ற அளவிற்கு குறித்தே பாடசாலைகளின் வினைத்திறன் நிர்ணயிக்கப்படுகின்றன. 

வினைத்திறன் கொண்ட பாடசாலைகளாக அமைவதற்கு அங்கு நிலவ வேண்டிய தனியார் தொடர்புகள் அவசியமாகின்றன. 

தகுந்த பொருத்தமான தனியாள் தொடர்புகளைப் பேணி சமூக எதிர்பார்க்கைகளை பாடசாலைகள் நிறைவேற்றாத நிலை தோன்றும் போது பாடசாலைகள் சமூகத்தில் இருந்த புறக்கணிக்கப்படுவது தவிர்க்க முடியாததாகிவிடும்.

வினாயகமூர்த்தி மேனிதா

நான்காம் வருட கல்வியியல் சிறப்புக்கற்கை மாணவி

கல்வி மற்றும் பிள்ளை நலத்துறை

கலை கலாசார பீடம்

கிழக்குப் பல்கலைக்கழகம்

வந்தாறுமூலை.

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.