ஓய்வு நேரத்தை பயன்படுத்தல் மற்றும் விளையாட்டு தொடர்பான தேர்ச்சிகளின் நடைமுறைகளும்,தற்காலத்தில் காணப்படும் விதம்.

இருளில் இருந்து வெளிச்சத்தை நோக்கி பயணிப்பது கல்வி " இவ்வாறான கல்வியானது மிகவும் முக்கியமான ஒன்றாக காணப்படுகின்றது. அந்த வகையில் பார்க்கப் போனால் தேர்வுகள் நம்மை தேற்றி அடைய வைப்பதாக இருக்க வேண்டும் வாழ்வின் முயற்சியை தருவதாகவும் அனைத்து குழந்தைகளுக்கும் கல்வியை பூரணமாக வழங்குவதற்கு தேர்ச்சி இன்றியமையாததாக காணப்படுகின்றது. ஒவ்வொரு வகுப்பிற்கு ஏற்றவாறு கல்வியை வழங்க வேண்டும் அப்போதுதான் மாணவர்களுக்கு உரிய கற்பித்தலில் தேர்ச்சி அடையப்படும்.

" ஏட்டுச் சுரக்காய் கறிக்கு உதவாதது போல " வெறும் ஏட்டுக்கல்வி மட்டும் போதாது அனுபவ ரீதியான கல்வியாக அமைய வேண்டும் ஒவ்வொரு தேடல்களுக்கு ஊடாகவும் பல்வேறு தேர்ச்சிகள் திறமைகள் அளிக்கப்படுகின்றது. எனவே தேர்ச்சி என்பது மாணவன் ஒருவன் கற்றல் கற்பித்தல் மூலம் வளர்த்துக் கொள்ளும் அறிவு உட்பட அனைத்து திறன்களும் உலக இயக்கத் திறன்களும் மற்றும் மனவழுச்சி பண்புகளும் இதில் உள்ளடங்கப்படுகின்றது. 

எனவே ஒரு குறிப்பிட்ட இலக்கை அடைவதற்கான அறிவுத்திறன் மனப்பாங்கு என்பனவாகும்.இதனை ஜே. குலகன் என்பவர் குறிப்பிடுகையில் கல்வி செயல்களில் செயல் ரீதியில் ஈடுபட்டு விருத்தி செய்து கொள்ளும் அனுபவங்கள் நடத்தை மாற்றங்கள் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்ட பொது ஆற்றல் என்று குறிப்பிடுகின்றார்.

மேலும் குறிப்பிடுகையில் இலங்கையின் கல்வி வரலாறு மிக நீண்ட வரலாற்றுத் தன்மை கொண்டது கல்வி முறைகளும் அதன் கலைத்திட்ட முறைகளும் காலத்துக்கு காலம் மாற்றமடைந்து வருகின்றது இதன் அடிப்படையில் கல்வி இலக்குகளில் பிற்காலத்தில் திறன், மனப்பாங்கு, விழுமியம், தொழில்நுட்பக் கல்வி போன்ற உள்ளடங்கப்படுகின்றன.

அவ்வாறான வினைத்திறன் மிக்க விடயங்களை விரித்து செய்யும் வகையில் தேசிய கல்வி ஆணை குழுவினால் 1992ல் வெளியிடப்பட்ட அறிக்கையில் இலங்கையின் கல்விக்கான இலக்குகள் குறித்து 2003இல் கல்வி இலக்குகளை அடைவதற்கு ஆளுமை தொடர்பான தேர்ச்சி, தொடர்பாடல் தேர்ச்சிகள்,சூழல் தொடர்பான தேர்ச்சிகள், வேலை உலகுக்கு தயாராகுதல் தொடர்பான தேர்ச்சிகள், ஓய்வு நேரத்தில் பயன்படுத்த விளையாட்டு தொடர்பான தேர்ச்சிகள், சமயமும் ஒழுகலாலும் தொடர்பான தேர்ச்சிகள், கற்றலுக்கு கற்றல் தொடர்பான தேர்ச்சிகள் போன்ற ஏழு வகையான அடிப்படைத் தேர்ச்சிகள் பாடசாலையில் அடையப்படுகின்றது.

"கல்வி என்பது கடல் அதை கற்றுக் கொடுப்பது தொழிலல்ல தவம் நம்பிக்கையை கைவிட்டாலும் நீ கற்ற கல்வி என்றும் உன்னை கைவிடாது"அவ்வாறு கல்வியானது முக்கியமான அம்சமாக காணப்படுகின்றது. அதனடிப்படையில் கல்வி தேர்ச்சிகளில் ஒன்றாகிய ஓய்வின் இடத்தை பயன்படுத்தல் மற்றும் விளையாட்டு தொடர்பான பேச்சுகள் பாடசாலையில் எவ்வாறு காணப்படுகின்றது என்பது பற்றி பார்த்தோமானால் ஓய்வு நேரம் என்பது எந்த நேரமும் பாடத்தை படித்துக் கொண்டிருக்காமல் மூளைக்கும் மனதிற்கும் ஓய்வினை வழங்குவதற்காக பல்வேறு செயற்பாடுகளை மேற்கொள்வதாகும்.

அதாவது பாடசாலையில் மாணவர்களுக்கு விளையாட்டு மூலம் கற்றல் கற்பித்தலை மேற்கொள்ளல் விளையாட்டு என்பது அனைத்து வயது பிரிவு மாணவர்களுக்கு மிகவும் விருப்பமான விடயமாகும் அதாவது ஆரம்ப பிரிவு மாணவர்களுக்கு விளையாட்டு மூலம் எண்களை எண்ணுவதற்கும் கற்றுக் கொடுத்தல் உதாரணமாக கற்கள் மற்றும் புலியும் விதைகள் மூலம் எண்களை எண்ணுவதற்கு கற்றுக் கொடுப்பதால் அது அவர்களுக்கு விளையாட்டாகவும் காணப்படுகின்றது இதனால் இலகுவாக எண்ணுவதற்கு பழக்கப்படுகின்றனர் மேலும் மாணவர்களால் இலகுவாக புரிந்து கொள்வதாகவும், இது காணப்படுகின்றது.

எல்லாவிதமான போட்டிகளையும் மாணவர்களுக்கு வழங்குதல் அதாவது மெய்வளுடர் விளையாட்டுப் போட்டி ஆங்கிலதின போட்டி தேசிய ரீதியான போட்டிகள் தமிழ் தின போட்டிகள் இல்ல விளையாட்டு போட்டிகள் போன்ற சகல விதமான போட்டிகளையும் அனைத்து மாணவர்களுக்கும் வாய்ப்புகள் தற்காலத்தில் வழங்கப்படுகின்றது. இந்த போட்டிக்கு இந்த மாணவர் தான் தகுதி அவ்வாறு பாரபட்சம் பார்க்காமல் அனைத்து மாணவர்களுக்கும் அவர்களுக்குரிய திறமைகளை வெளிக்காட்டுவதற்காக எல்லாவிதமான போட்டிகளையும் மாணவர்களுக்கு வழங்கப்படுகின்றது.

மேலும் பாடசாலையில் ஓய்வு நேரத்தில் பயன்படுத்துவதற்கும் விளையாட்டு தொடர்பான தேர்ச்சி தொடர்பாக கற்றலில் ஊக்கல் செயற்பாடுகளை மேற்கொள்ளுதல் அதாவது எந்த நேரமும் பாடங்களில் சொல்லிக் கொடுப்பதனால் மாணவர்களுக்கு கற்கும் பாடங்களின் மேலும் மற்றும் பாடம் கற்பிக்கும் ஆசிரியர் மேல் வெறுப்பு ஏற்படும் இதனால் மூளைக்கு ஓய்வு கொடுப்பதற்காக இடைக்கிடையே விளையாட்டுகளை சொல்லிக் கொடுத்தல். 

உதாரணமாக நாடகமும் அரங்கியல் என்னும் பாடத்தில் அதிகளவான அரங்கு விளையாட்டுக்கள் காணப்படுகின்றது ஆடு புலி,கோழி கொட்டான் குளம் கரை போன்ற விளையாட்டுகளை இடைக்கிடையே சொல்லிக் கொடுத்தல். இதனால் பாடசாலைக்கு மாணவர்கள் வருகை தரும் வீதமும் பாடத்தின் மேல் ஆர்வமும் ஏற்படும். மேலும் இதன் மூலம் மாணவர் இடைவிலகல் குறைவடையும்.

ஓய்வு நேரத்தை பயன்படுத்துவதற்காக கணணி அறையையும் மற்றும் நூலகத்தையும் பயன்படுத்தல பாடசாலையில் குறித்த பாடத்திற்குரிய பாடங்கள் நடைபெறாமல் அல்லது பாடத்திற்குரிய ஆசிரியர் வராவிட்டால் மாணவர்கள் தமது ஓய்வு நேரத்தில் பயன்படுத்த இவ்வாறான செயற்பாடுகளில் ஈடுபடுவதன் ஈடுபடுகின்றனர் இதனால் மாணவர்களுக்கு இடையே வாசிப்பு திறன் மற்றும் கணினி அறைகளுக்கு செல்வதனால் சித்திரம் கீறுதல் , பாடல்கள் கேட்டல் போன்ற செயற்பாடுகளில் ஈடுபடுதல். மேலும் பூந்தோட்டம் அமைத்தல் மற்றும் இலக்கியம் கட்டுரை சிறுகதை நாவல் போன்றவற்றை எழுதுதல் மேலும் இணைப்பாட விதான  செயற்பாடுகளில் ஈடுபடுவனாலும் ஓய்வு நேரத்தை மாணவர்கள் கழிக்கின்றனர் இதன் மூலம் பாடசாலைகளில் மாணவர்களுக்கு இடையே தேர்ச்சிகள் வளர்த்துக் கொள்ளப்படுகின்றது.

ஆக்கபூர்வமான உணர்வுகள் வெளிப்படுதல் அந்த வகையில் பார்த்தோமானால் ஒவ்வொரு நாளும் பாடசாலைக்கு வரும்போது மாணவர்களில் ஒரு சிலர் ஏதாவது ஒரு மன அழுத்தத்திற்கு உள்ளாகி வருகின்றன அவர்களுக்கு பாடங்களை சொல்லிக் கொடுத்தால் அவர்களுக்கு பாடங்கள் மீது வெறுப்பு ஏற்படும் எனவே நாடகம் இசை நடனம் சித்திரம் ஆகிய களிபாடங்களின் மீது தமது பங்குபெற்றலை மேற்கொள்வதன் மூலம் அவர்களுக்கு இடையே பல வகையான ஆக்கபூர்வமான உணர்வுகள் வெளிப்பட்டு மன அழுத்தம் குறைவடைகின்றது இதன் மூலம் மாணவர்களுக்கு இடையே இன்பமான உணர்வு ஏற்படுகின்றது மேலும் சுற்றுலா செல்வதில் மூலம் அனுப்பரீதியான கற்றல் உணர்வுகள் அவர்களுக்கு ஏற்படுகின்றது. சூழலில் பல்வேறு பல்வேறு விடயங்கள் காணப்படும் இதனால் மாணவர்களுக்கு இடையே அனுபவ ரீதியான உணர்வுகள் வெளிப்படுகின்றது இவ்வாறு பாடசாலையில் நடைமுறைப்படுத்தப்பட்டாலும் தற்காலத்தில் பல்வேறு சவால்களுக்கு முகம் கொடுக்கக் கூடியதாக உள்ளது.

அதாவது போதிய அளவு வளங்கள் கிராம புற பாடசாலையில் இல்லை விளையாட்டுக்குரிய விளையாட்டு உபகரணம் மற்றும் விளையாட்டு மைதானம் என்பன காணப்படாமை மேலும் கணினி அறை பயன்படுத்துவதற்காக பொதுஅளவு தொழில்நுட்பக் வசதிகள் இன்மை, ஆசிரியர்கள் கை நூல்களே தங்கிரித்தல் அதாவது ஆசிரிய மையக் கல்வியை வழங்கப்படுகின்றது. 

மேலும் தற்கால நவீன உலகத்தில் நவீன தொழில்நுட்பம் காரணமாக இப்பிரச்சனைகளுக்கான தீர்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது எப்படி கற்றுக் கொள்வது என்பது வாழ்க்கையில் மிக முக்கியமான திறமை எனவே கல்வியில் நோக்கம் வெட்டு மனதை திறந்த மனதாக மாற்றுவதாகும் எனவே பாடசாலை ஒவ்வொரு தேச்சிகளும் முற்று முழுதாக அடைய வழி வகுத்தல் ஒவ்வொரு ஆசிரியரின் மாணவரின் கடமை ஆகும்.

பிரசன்னா பிரதாஜினி

இரண்டாம் வருட முதலாம் அரையாண்டு

கல்வி மற்றும் பிள்ளைநலத்துறை

சிறப்பு கற்கை மாணவி

கிழக்கு பல்கலைக்கழகம்

கலைகலாசாரபீடம்

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.