கல்வியும் சர்வதேச புரிந்துணர்வும்

"சொந்தக் காரியம் பொதுக் காரியம் எல்லாவற்றையும் நியாயமாயும் சாமர்த்தியமாயும் பெருந்தன்மையாயும் செய்யக் கற்றுக் கொடுப்பதே பரிபூரணமான கல்வியாகும்."

- மில்டன்

மனிதன் தன் வாழ்வின் ஒவ்வொரு நிலையிலும் முறைசார் முறை சாராத வழிகளில் ஏதோ ஒரு விடயத்தை கற்றுக் கொண்டே இருக்கிறான். ஆனால் தான் ஒரு குறுகிய வட்டத்தில் சிந்தித்து செயலாற்ற முடியாமல் முடங்கிப் போகும் அளவுக்கு கல்வியின் விஸ்திரம் அவனுக்கு விளக்கப்படாமல் மழுங்கடிக்கப்படுகிறது. 

மனிதன் சமூகமாக வாழ தொடங்கிய போது அரசு தோற்றம் பெற்றது. அவ்வாறே ஒவ்வொரு அரசுகளும் தனக்கென்று இறைமை அதிகாரம் பொருந்திய அரசியல் பொருளாதாரம் சமூக கல்வி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. 

நாடுகளுக்கு இடையிலான வெளியுறவு கொள்கைகள் மூலம் நாடு எத்தகைய விருத்தி அடைந்துள்ளது என்பதை புரிந்து கொள்ள முடியும். ஒரு நாட்டின் அபிவிருத்தியின் அளவுகோல்  பொருளாதாரத்தை ஏற்படுத்தும் கல்வியே ஆகும். ஒரு நாட்டின் எழுத்தறிவு  வீதத்தின் மூலம்  ஏனைய  துறைகள் அளக்கப்படுகின்றன. 

பொருளாதாரத் துறையில் அபிவிருத்தி பெற்ற நாடான சீனாவின் எழுத்தறிவு வீதம் 95.1%  ஆகும்.  இலங்கையின் எழுத்தறிவு வீதம் 97%  ஆக இருந்தாலும் கணினி அறிவு வீதம் 35% ஆகும். அந்த வகையில்  நவீனத்துவம் அடைந்ததற்காலத்தில் தொழில்நுட்ப ரீதியான அறிவு மிகஅவசியமானது என்பது புலனாகிறது.

 இலங்கையின் கல்வியில்  வெறுமனே எழுத்தறிவு, எண்ணறிவு   மாத்திரம் புகுத்தப்படாது  ஏனைய நாடுகளை  போல மாறிவரும் உலகில் மாற்றங்களுக்கேற்ப கல்வி முறையை மாற்றினால் மாத்திரமே சர்வதேச ரீதியான புரிந்துணர்வு எட்டப்படும்.

 சர்வதேச ரீதியான புரிந்துணர்வு நாடுகளுக்கு இடையிலான அபிவிருத்தியை துரிதப்படுத்துவதற்கும், கலாச்சார பரிமாற்றத்திற்கும், வினைத்திறன் மிக்க சமூக பொருளாதார அரசியல் சூழலுக்கும்  துணை புரிகிறது.

 இதற்கு சர்வதேச மொழியான ஆங்கில மொழியறிவு அத்தியாவசியமாகிறது. இலங்கை காலனித்துவத்திற்கு உட்பட்டதன்  விளைவாக அறிமுகப்படுத்தப்பட்ட ஆங்கில கல்வி  இன்று கட்டாயமாக பயில வேண்டிய ஒன்றாக காணப்படுகிறது.

 அதேபோல தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப அறிவு சர்வதேசங்களுக்கு இடையிலான தொடர்பு மேற்கொள்வதற்கு  அடிப்படையாக அமைகிறது. உள்ளங்கைக்குள் உள்ளடங்கிய உலகை  உடனுக்குடன் அறிந்து கொண்டு, அவற்றின் உண்மை தன்மையை புரிந்து,  சரியான துலங்களை வெளிக்காட்ட  இத்தொழில் நுட்ப அறிவு முக்கியமாகும்.

 உதாரணமாக: பூகோளமயமாக்கல் காரணமாக ஏற்படுத்தப்படும் சூழல் மாசடைதல் எல்லா நாடுகளிலும் எவ்வாறு கையாளப்படுகிறது என்பதனைப் புரிந்து கொண்டு, இயற்கை சூழலை பாதுகாப்பதற்கு நாட்டிலுள்ள ஒவ்வொரு பிரச்சனையும் எப்படியான உள்ளுணர்வை கொண்டு  செயல்படவேண்டும் என சர்வதேச புரிந்த உணர்வு மூலம் அறியப்படுகிறது.

 ஆதலால் கல்வி நடவடிக்கைகளானது சர்வதேச புரிந்துணர்வையும் தேசிய ஒற்றுமையையும் ஏற்படுத்தும் வண்ணம் அமைய வேண்டும்.

 பாடசாலை கலைத்திட்டத்தில் சர்வதேச புரிந்துணர்வை ஏற்படுத்தும் பாடங்களான சமூகவியல் பாடங்கள் கருத்தில்  கொள்ளப்பட வேண்டும்.

 நாடுகளுக்கு இடையிலான சரியான புரிந்துணர்வின்மையே யுத்தங்களையும் ஏற்படுத்துகிறது.

 இதனால் வளர்ந்து வரும் எதிர்கால சந்ததியினர் மத்தியில் ஒரு நாட்டினுடைய அரசியல் ,பொருளாதாரம், சமூக கலாச்சாரம், வெளியுறவு கொள்கைகள் பற்றி  மாணவர்களுக்கு அறிய படுத்துவதற்காக நவீன மாற்றத்துக்கு அமைய நவீன தொலைதொடர்பு சாதனங்களை பயன்படுத்தி, சிறப்பான கற்றலுக்கான  வாய்ப்பைக் கட்டி எழுப்ப வேண்டும்.  

தற்கால மாணவ சமூகத்தில்  தொழில்நுட்ப மாற்றத்தை புரியவைத்து அதன் மூலம் கற்றல் நடவடிக்கைகளையும், அக்கற்றல் நடவடிக்கைகள் மூலம் சர்வதேச புரிந்த உணர்வையும்  ஏற்படுத்த துணை புரிய வேண்டும்.

 ஆனால் தற்கால மாணவர்கள் சர்வதேச  புரிந்துணர்வின் தாற்பரியத்தை அறியாமல்  தொழில்நுட்பக் கல்வியை தேவையற்ற தொழில்நுட்பக் களவுகளுக்கும்  அறிவுத் திருட்டுகளுக்கும் அர்ப்பணிக்கின்றனர். இதனால் தமது பொன்னான நேரத்தையும் இழக்கின்றனர்.

 தேசிய நல்லிணக்கம் ஏற்படுவதற்கு நாட்டின் உள்ளே எவ்வாறு புரிந்துணர்வு ஏற்படுத்தப்படுகிறதோ  அவ்வாறே சர்வதேச ரீதியாகவும் புரிந்துணர்வை ஏற்படுத்தி மாற்றுக் கலாசாரத்தை வினைத்திறனாக பயன்படுத்தலாம். 

உதாரணமாக: நாடுகளின் கல்வி முறைகளை அறிந்து அதைப்போன்ற சிறந்த கல்வி முறைகளை உண்டாக்குதல்.' பின்லாந்து கல்வி முறை', ஜப்பானின் கல்வி முறையானது ஆரம்பப் பிரிவில் இருந்து மாணவர்களின் அறிவுத்திறன் மனப்பாங்கு அறியப்பட்டு அதற்கு ஏற்ற துறையில் கல்வியைத் தொடர செய்தல். இது முற்று முழுதாக ஒரு மாணவனை சமூகத்துக்கு வினைத் திறனாக வழங்கும் செயற்பாடாகும். அதேபோலவே

நா‌ட்டி‌ன் கல்வி முறையில் ஒவ்வொரு பாடசாலைகளிலும் சர்வதேச புரிந்துணர்வுக்கு அடித்தளமாக விழுமியங்க்கல்வி, சமூக கல்வி வழங்க பட வேண்டும். 

பாடசாலைகளில் விஞ்ஞான,தொழில்நுட்ப கல்வியை வழங்குவது  சர்வதேச புரிந்துணர்வை ஏற்படுத்த வழிவகுக்கும். அனேகமான நாடுகளில் சமயம் ஓர் பாடமாக கற்பிக்கப்படாமல் இருந்தாலும் இலங்கையில் கலைத்திட்டத்தில் சமய  விழுமியங்கள்போதிக்கப்படுவது  சிறப்பம்சமாகும். ஆனால் மாணவர்களுக்கு உலகம் தொடர்பான பரந்த அறிவை வழங்க வேண்டும்.  

இலங்கை தற்கால பொருளாதார நெருக்கடியை எடுத்து நோக்கும் போது,  ஏற்றுமதி இறக்குமதி அன்னிய செலாவணி, சுற்றுலாத்துறை வீழ்ச்சி,  பணவீக்கம் ஆகிய பல்வேறு பட்ட பிரச்சினைகளுக்கு சர்வதேச நாணய நிதியத்தின் செயற்பாடுகள் இவ்வாறு செல்வாக்கு செலுத்துகின்றன அது மட்டும் அல்லாது அரசியல் ரீதியாக ஸ்த்திறமின்மை  போன்ற பிரச்சனைகளை மாற்றுவதற்கு நாட்டின் பிரஜை என்ற ரீதியாகவும் கற்ற மாணவர் என்ற ரீதியாகவும் ஒவ்வொருவரும் சிந்தித்து செயல்பட  சர்வதேச ரீதியான கல்வி மாணவருக்கு வழங்கப்பட வேண்டும்.

எனவே சர்வதேசத்தில் இடம்பெறும் ஒவ்வொரு நிகழ்வுகளிலும் நாம் இற்றைப்படுத்தப்பட நவீன தொழில்நுட்ப சாதனங்களை சரியாக கையாள கற்று கொடுக்க வேண்டும். 

நாட்டில் மாணவர்களும், ம‌க்களு‌க்கு‌ம் சர்வதேச புரிந்துணர்வு ஏற்படும் போது நாடு தேவையற்ற விடயங்களில் கவனம் செலுத்தாது அபிவிருத்தி பாதையில் செல்லும். அதனால் கல்வியில் சர்வதேச புரிந்துணர்வை ஏற்படுத்தும் வ‌ண்ண‌ம் ஆசிரியர்கள் நா‌ட்டி‌ன் அரசியல் பொருளாதார சமூக நிலைகளை பற்றி நடைமுறை அறிவை ஊட்ட வே‌ண்டு‌ம்.

வளர்ந்து வரும் இளம் தலைமுறையினருக்கு வளமான வாழ்வு வழங்க எல்லா வகையிலும் உறுதுணையாக இருப்போம். 

"சிறுவர்க்கான பிரதமக் கல்வி, அறிவு ஊட்டுவதன்று. நல்ல வழக்கங்கள் அமைப்பதேயாகும்."

போனால்டு

ரா.ஜெபாஜினி

2ம் வருட சிறப்புக் கற்கை மாணவி 

கல்வி மற்றும் பிள்ளைநலத்துறை

கிழக்குப் பல்கலைக்கழகம்.

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.