இலங்கையின் கல்வி வளர்ச்சியும் தற்காலப் போக்கும்.

உலகை மாற்றக்கூடிய சக்தி வாய்ந்த ஆயுதம் கல்வி ” என்று முழங்கியவர் நெல்சன் மண்டேலா. அவருடைய வார்த்தை பொய்யாகவில்லை. கல்வியே ஒருவனுடைய உள்ளத்தையும் அறிவினையும் பண்படுத்தும் மாபெரும் சக்தியாகும். 

கல்வி எனும் விடயம் பற்றி பல அறிஞர்கள் பல உள்ளார்ந்த கருத்தை தம் அனுபவங்களில் முன்வைத்துள்ளனர். அவர்களோடு மகாகவி பாரதி அவர்களின் “ ஆயிரம் கோயில்கள் கட்டுவதை விட ஒரு பள்ளிக்கூடம் கட்டுவது சிறந்தது ” எனும் கருத்து மிக முக்கியமானதாகும்.

 இலங்கையின் கல்வி வளர்ச்சியானது ஆரம்பத்தில் எவ்வாறு கொடுக்கப்பட்டது என்று பார்க்கும் போது ஆரம்ப கால மன்னர்கள் தமது புதல்வர்களை குருகுலக் கல்வியிற்கு அனுப்பி கல்வியினைப் புகட்டினார்கள். 

சிறந்த அரசனாக வேண்டுமானால் வில்வித்தை, அறிவுப்பயிற்சி, உளப்பயிற்சி போன்றவற்றில் சிறந்து விளங்க வேண்டும் என்ற நியதியும் காணப்பட்டது.

 ஆரம்ப காலத்தில் குறுகிய நோக்கினைக் கொண்டுகல்வி வழங்கப்பட்டது. ஆனால் காலப்போக்கில் அதிலும் குறிப்பாக அந்நியருடைய ஆக்கிரமிப்பிற்குப் பிற்பட்ட காலத்தில் தான் பரந்த நோக்காக மாற்றம் பெற்றது. இன்றைய காலகட்டத்தில் இலங்கைக் கல்வியானது பல வகையில் நவீன மாற்றங்களுக்கு உட்படுத்தப்பட்டுக் காணப்படுகின்றது.

 மாணவர்களின் கல்வியினை வலுப்படுத்த 5E கல்வி முறை, KASP முறை போன்றன அவர்களுடைய எண்ணங்கள், புதிய ஆற்றல்களைத் தூண்டும் வகையில் அமையப் பெற உருவாக்கப்பட்டவை ஆகும். 1997ஆம் ஆண்டு கல்வித் திருத்தத்தில் தொடர்பாடல் கற்கை கொண்டுவரப்பட்ட போதிலும் அன்று கவன ஈர்ப்பு இருக்கவில்லை.  ஆனால் 2013இல் தொழில்நுட்பக் கற்கைப் பிரிவு மிக முக்கிய பிரிவாகக் கொண்டுவரப்பட்டு இன்று பாரிய வளர்ச்சி கண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

அது மட்டுமன்றி அனைவருக்கும்  கணினி தொடர்பான கல்வி வலுப்படுத்தப்பட்டுள்ள நிலையில் 1983இற்குப் பின்னர் ஆசிய அபிவிருத்தி வங்கியின் உதவியுடன் கணினி வள நிலையங்கள் ஏற்படுத்தப்பட்டும் அதன் அறிவு பெரிதும் இன்மையினால் கவனயீனமாக விடப்பட்டது. இன்று இந்நிலையானது மாறி இணையம் மற்றும் கணினி பற்றிய அறிவு இல்லாதவர்கள் மிக சொற்ப எண்ணிக்கையே என்று கூறும் அளவிற்கு மாறியுள்ளது.

மேலும் இலத்திரனியல் மயமாக்கப்பட்ட கல்வியில் சுவிஸ்லாந்து போன்று அனைத்து கல்வி நடவடிக்கைகளும் இலத்திரனியல் மயமாக்கப்படுகின்ற நிலை இலங்கையில் படிப்படியாக வளர்ச்சியடைந்து வருகின்றது. உதாரணமாக திறந்த பல்கலைக்கழகங்களில் தொலைக்கல்வி காணப்படுகின்றது. அத்துடன் பல்கலைக்கழக நுழைவிற்கான விண்ணப்ப படிவங்கள் அனைத்தும் இலத்திரனியல் மயமாக்கப்பட்டமையும் கல்வி நவீனத்துவத்தைப் புலப்படுத்துகின்றது. 

இவை தவிர Smart classes அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.  மாணவர்களுக்கான Tab கொடுக்கும் திட்டம் சில பிரதேசங்களில் நடந்தேறிய நிலை இலங்கைக் கல்வியின் வளர்ச்சியினை சிறப்பாக எடுத்துக்காட்டுகின்றது.

 எதிர்காலத்தில் இலங்கைக் கல்வி முற்றும் முழுதாக e-education ஆக மாறிவிடும். பழையன கழிதலும் புதியன புகுதலும் இயற்கையே. 

தொழில்நுட்ப ரீதியான நவீன போக்கில் அமெரிக்கா, சுவிட்சர்லாந்து,  சிங்கப்பூர் போன்ற நாடுகள் பல ஆண்டுகள் முன்னிலை வகிக்கின்றன என்பதோடு இலங்கை பல ஆண்டுகள் பின்னிலையில் உள்ளது என்பது கவலைக்கிடமே. ஆனால் எதிர்காலத்தில் துரித வளர்ச்சி ஏற்படுவதற்கான தடங்கல் உருவாகி வருவதை எம்மால் உணர முடிகின்றது.

 சந்திரகுமார் அபிலாஷினி

2ம் வருட 1ம் அரையாண்டு

 கல்வியியல் சிறப்புக் கற்கை மாணவி,

 கல்வி மற்றும் பிள்ளைநலத்துறை,

 கலை கலாசார பீடம்,

 கிழக்கு பல்கலைக்கழகம்.

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.