கற்றலுக்கான கற்றல் தொடர்பான தேர்ச்சியின் இன்றைய நிலைப்பாடும் எதிர்நோக்கும் சவால்களும்.

தேர்ச்சி எனும் பாதம் நீண்ட காலமாக யாதேனும் ஒரு செயலை செய்யும் ஆற்றல் எனும் அர்த்தத்தில் தொழிற்பயிற்சி துறையில் பயன்படுத்தப்பட்டது. கடந்த சில தசாப்தங்களாக இப்பதம் பொதுக் கல்வித் துறையில் பரவலாக பயன்படுத்தப்பட்டு வருகின்றது. யாதேனும் ஒரு பின்னணியில் ஒருவர் யாதேனும் ஒன்றை வினைத்திறனாக செய்யும் ஆற்றலே தேர்ச்சி எனப்படுகின்றது.

 தேர்ச்சி என்பது அறிவுக்கு மாத்திரம் வரையறுக்கப்பட்டதல்ல கூடவே அறிவைப் பயன்படுத்தும் ஆற்றலையும் குறிக்கின்றது. அதனடிப்படையில் தேர்ச்சி என்பது ஒரு குறிப்பிட்ட இலக்கை அடைவதற்கான அறிவு, திறன், மனப்பாங்கு ஆகியவற்றை சரியான முறையில் பாவிக்கும் திறமையாகும்.

 அதாவது தேர்ச்சி என்பது ஒரு முழுமையான எண்ணக்கருவாகும் மாணவன் ஒருவன் கற்பதன் மூலம் வளர்த்துக் கொள்ளும் அறிவு உட்பட அறிகைத்திறன்களும், உள இயக்கத் திறன்களை அடிப்படையாகக் கொண்ட திறன்களும், மனப்பாங்கு உட்பட மனவெழுச்சி பண்புகளும் இங்கு உள்ளடக்கப்படுகின்றன. 

1997 ஆம் ஆண்டு தேசிய கல்வி ஆணை குழுவினால் முதன் முதலில் ஐந்து அடிப்படை தேர்ச்சிகள் அறிமுகப்படுத்தப்பட்டு 2003 ஆம் ஆண்டு சில முக்கிய பரிந்துரைகளின் அடிப்படையில் திருத்தம் ஏற்பட்டு ஏழு அடிப்படை தேர்ச்சிகள் அறிமுகம் செய்யப்பட்டது. அவையாவன

தொடர்பாடல் தேர்ச்சிகள்

ஆளுமை விருத்தி தொடர்பான தேர்ச்சிகள்

சூழல் தொடர்பான தேர்ச்சிகள்

வேலை உலகிற்கு தயார் செய்தல் தொடர்பான தேர்ச்சிகள்

சமயமும் ஒழுகலாரும் தொடர்பான தேர்ச்சிகள்

ஓய்வு நேரத்தை பயன்படுத்துதல் தொடர்பான தேர்ச்சிகள்

கற்றலுக்கான கற்றல் தொடர்பான தேர்ச்சிகள்

கற்றலுக்கான கற்றல் தொடர்பான தேர்ச்சி என்பது விரைவாக மாறுகின்ற சிக்கலான ஒருவரில் ஒருவர் தங்கி இருக்கின்ற உலகொன்றில் ஒருவர் சுயாதீனமாக கற்பதற்கான வலிமை அளித்தலும் மாற்றி அமைக்கும் செயல்முறை ஊடாக மாற்றத்திற்கேற்ப இயங்கவும் அதனை முகாமை செய்யவும் வேண்டிய உணர்வையும் வெற்றியையும் பெறச் செய்தல் கற்றலுக்கான கற்றல் எனப்படும்.

 கற்றலுக்கான கற்றல் என்பது முக்கியமான நான்கு செயற்பாடுகளை அடிப்படையாகக் கொண்டிருக்கின்றன. இவற்றின் முக்கியத்துவத்தை வலியுறுத்துவதற்காகவே அவை கல்வியின் நான்கு தூண்கள் என குறிப்பிடப்படுகின்றன அச்செற்பாடுகள் நான்கும்.

அறிவதற்காக கற்றல்

ஆற்றுவதற்காக கற்றல்

வாழ்வதற்காக கற்றல்

சேர்ந்து வாழ்வதற்காக கற்றல்

மாற்றம் ஒன்றே மாறாதது என்பதற்கு இணங்க கற்றலுக்கான கற்றல் தேர்ச்சியில் மாற்றங்கள் ஏற்பட்ட வண்ணமே உள்ளது. அந்த வகையில் கற்றலுக்கான கற்றல் தேர்ச்சியின் இன்றைய நிலைப்பாடு பற்றி நோக்கும் பொழுது இன்றைய காலகட்டத்தில் தொழில்நுட்பத்தின் வளர்ச்சியினால் மாணவர்கள் வீட்டிலிருந்தே கல்வியை கற்கும் அளவிற்கு மாறிவிட்டது. 

இணையவழி கல்வி என பல வழிகளிலும் தேடி இலகுவாக கற்கக்கூடிய வழிமுறைகள் கல்வியில் வளர்ந்து விட்டன. பாடசாலைகளை விடவும் தனியார் கல்வி நிலையங்கள் இன்றைக்கு மாணவர்களை ஈர்க்கின்றன. 

இன்றைய பெற்றோர்கள் மாணவர்களின் கல்விக்காகவே அதிக பணம் செலவழிக்கின்றார்கள் முன்பெல்லாம் ஆசிரியர் பணி அறப்பணி என்று இருந்த காலம் மாறி இன்று ஆசிரியர் தொழில் அதிக இலாபம் ஈட்டக் கூடிய தொழிலாக மாறி வருகின்ற நிலை காணப்படுகின்றது.

கற்றலுக்கான கற்றல் தேர்ச்சியில் மதிப்பெண்களை பெற்றுக் கொள்வதற்காகவே ஆசிரியர்கள் மாணவர்களை ஊக்குவித்து கற்றலை வழங்கினாலும் கூட கற்றலானது அனைத்து மாணவர்களுக்கும் முழுமையாக சென்றடையாத நிலையை காணப்படுகின்றது. 

மேலும் தேடிக் கற்றல் முறை மாணவர்களிடையே காணப்பட வேண்டும் என்பதற்காக கலைத்திட்டத்தில் இம்முறை கொண்டுவரப்பட்டாலும் கூட மாணவர்களிடையே தேடிக் கற்றல் என்பது மிகக் குறைவாகவே உள்ளது. இன்றும் கூட ஆசிரியர்கள் புத்தகக் கல்வியை மட்டுமே வழங்குவதால் மாணவர்களும் புத்தக பூச்சிகளாகவே காணப்படுகின்றார்கள்.

கற்றலுக்கான கற்றல் தேர்ச்சி எதிர்நோக்கும் சவால்களாக பாடசாலையில் வளப் பற்றாக்குறை, மனிதவளபற்றாக்குறை, நிதி வள பற்றாக்குறை இவ்வாறான பல சிக்கல்கள் காணப்படுகின்றன. பாடசாலைகளில் கற்றலுக்கான கற்றல் தேர்ச்சியினை முழுமையாக மாணவர்களிடையே வழங்க முடியாத சிக்கல்கள் காணப்படுகின்றன. 

காரணம் பாடசாலையில் கட்டிட வசதிகள் இன்மை, விஞ்ஞான ஆய்வு கூடங்கள் இன்மை, தொழில்நுட்ப வசதிகள் இன்மை இவ்வாறான பல சவால்கள் காணப்படுகின்றமை கற்றல் தேர்ச்சியை முழுமையாக கொண்டு செல்வதற்கு தடையாக அமைகின்றன.

மேலும் தரம் ஐந்து மாணவர்களிடையே இத்தேர்ச்சி நடைமுறையில் உள்ளதா? என்பது மிகப்பெரும் கேள்விக்குறியாகவே உள்ளது. அடிப்படைக் கற்றல் இலக்குகளில் நிமித்தமே கற்றல் கற்பித்தல் முன்னெடுக்கப்பட வேண்டும் ஆனால் இன்று பரீட்சை எழுதி சித்தி அடைவதை மட்டும் இலக்காகக் கொண்டு மாணவர்களுக்கு கற்றல் வழங்கப்படுகிறது.

மனிதவள பற்றாக்குறை காரணமாகவும் கற்றலுக்கான கற்றல் தேர்ச்சியானது மாணவர்களை சென்றடைவதில் தடை ஏற்படுத்துகின்றது. உதாரணமாக ஆசிரியர் பற்றாக்குறை அதாவது சிறப்பு தேர்ச்சி பெற்ற ஆசிரியர்கள் குறைவாக இருக்கின்றமை, இளமானி பட்டப்படிப்பை நிறைவு செய்த ஆசிரியரை கற்பிக்க செய்கின்றமை மற்றும் மாணவர் தொகை அதிகரிப்பு இதனால் எதிர்பார்க்கும் தேர்ச்சியானது அடையாப்படாத நிலை இன்றளவும் நிலவுகின்றது.

பாடசாலைகளில் நிதிவளம் குறைவாக இருப்பதன் காரணமும் கற்றல் தேர்ச்சிக்கு பாரியதொரு சவாலாக காணப்படுகின்றது. கற்றல், கற்பித்தலுக்கான உபகரணங்களையும் முழுமையாக வழங்க முடியாத நிலையும் காணப்படுகின்றது.

 S.L.C எழுத்தறிவு 92வீதம் கல்வியறிவு எனும் போது அடிப்படை கல்வியினை அத்தனை பேர் கற்றுள்ளனர் என்பதனை சுட்டி நிற்கின்றாலும் கூட இலங்கையில் மிகக் குறைவாகவே கல்வி அறிவு வீதம் காணப்படுகின்றது. காரணம் நிதி வளம் குறைவாக இருப்பதனால் ஆகும். 

இன்றைய நிலையிலும் கூட இந்தப் பிரச்சினை நிலவிய வண்ணமே உள்ளது எமது நாட்டை பொறுத்தவரை  பொருளாதார நெருக்கடி தீவிரமாக காணப்படுவதனால் கல்வித் துறைக்கு கூட நிதியை ஒதுக்கீடு செய்து முழுமையான கற்றல் தேர்ச்சியை ஏற்படுத்த முடியாத நிலை நிலவுகின்றது.

அண்மைக்காலத்தில் ஏற்பட்ட கொரோனா தொற்று நோய் தாக்கத்தின் போது மாணவர்களுக்கு நிகழ்நிலை ஊடாக கற்றல் வழங்கப்பட்டது. 

இந்தக் கற்றல் முறை கூட மாணவர்களுக்கு பாரிய சிக்கலை ஏற்படுத்தியது மட்டுமல்ல இந்த தேர்ச்சியும் கூட மாணவர்களிடையே சென்றடையவில்லை என்று கூற முடியும்.

இவ்வாறு கல்வியில் பல சவால்கள் காணப்பட்டாலும் அவற்றை தீர்த்துக் கொண்டு மாறுகின்ற நவீன உலகிற்கிற்கேற்ப அத்தியாவசியமான தேர்ச்சிகள் அனைத்தும் மாணவர்களுக்கு முழுமையாக சென்றடையும் வண்ணம் கற்றல் இடம்பெற வேண்டும். கல்வியானது பிறப்பிலிருந்து இறப்பு வரை தொடர்ச்சியாக நடைபெறுகின்ற ஒன்றாகும். 

‘கல்வியின் வேர்கள் கசப்பாகத்தான் இருக்கும் ஆனால் அது தரும் பழம் இனிப்பு நிறைந்தது' எனும் அரிஸ்டோட்டிலின் கருத்துக்கு அமைய கல்வியின் அத்தியாவசியமான தேர்ச்சிகள் அனைத்தும் மாணவர்களுக்கு சென்றடையும் வண்ணம் கல்வி கற்பிக்கப்பட்டால் எதிர்காலத்தில் சிறந்த பிரஜைகளை உருவாக்க முடியும்.

ஜீவநாயகம் டிலானி

இரண்டாம் வருட சிறப்பு கற்கை மாணவி

கல்வி மற்றும் பிள்ளை நலத்துறை

கிழக்குப் பல்கலைக்கழகம்

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.