ஆசிரியர்கள் மத்தியில் தொழிற் கலாசாரம்

ஆசிரியர்கள் தனிமனிதனையும் சமூகத்தையும் முழு உலகினையும் உருவாக்குபவர்களாவர் ஆசான்களின்றி கல்விச் செயன்முறை நடைபெறலாம் ஆனால் பூரணமான முழுமையான கல்வியைப் பெற்றுக் கொள்வது என்பது இயலாத காரியமாகும். 

ஒரு சிற்பியானவன் எவ்வாறான நுணுக்கங்களைக் கொண்டு சிலை ஒன்றினை செதுக்குகின்றானோ அது போலவே ஆசிரியரும் சிறந்த எண்ணங்களையும், சிந்தனைகளையும், நுணுக்கங்களையும் கொண்டு ஒரு தனி மனிதனை செதுக்குகின்றார். ஆசிரியர் மத்தியில் தொழிற்கலாசாரத்தை பற்றி பார்க்கின்ற போது,

எண்ணங்கள் சிந்தனைகள் நோக்கங்கள் எவ்வளவு சிறந்தனவாக இருப்பினும், நிர்வாகம் எவ்வளவு ஆற்றல் வாய்ந்ததாக இருப்பினும், கற்பதற்கான வளங்கள் எவ்வளவு ஏராளமானதாகவும் காலத்துக்கு ஏற்றனவாகவும் இருப்பினும் அவற்றால் மாணவர்கள் அடையும் பயன் ஆசிரியர்களை பொறுத்தே ஆகும் மாணவர்களின் அறிவு மட்ட வளர்ச்சி ஆசிரியர்களது அறிவு மட்ட வளர்ச்சி என்பவற்றுக்கு உட்பட்டதாகவே இருக்கும் என்ற கோட்பாடும் காணப்படுகின்றது

கற்பித்தல் என்பது ஒரு உன்னதமான தொழிலாகும். ஆதற்காக ஆசிரியர்கள் பொறுப்புடனும் வகை செல்லத்தக்க வகையிலும் செயற்படுவது அவசியமன ஒன்றாகும். ஒரு ஆசிரியர் தனது பணியில் தரத்தினைப் பேண நடவடிக்கை எடுக்க வேண்டும். இது தொடர்பாக அவர் ஒட்டு மொத்த சமூகத்தினருக்கும் கடமைப்பட்டுள்ளார். அத்தோடு தமது வகிபகத்துக்குரிய சட்ட திட்டங்கள், சுற்று நிருபங்கள் போன்றவற்றை கவனித்து தனது பணிக்கு முதன்மையளித்து அதனை சீராக செய்வதையும் அதற்கு தேவையானவற்றை கட்டியெழுப்புவதும் ஒரு ஆசிரியரின் பொறுப்பாகக் காணப்படுகின்றது.

அவருடன் தொடர்புபட்ட நெருங்கிய தொடர்புகளே பொறுப்புக்களாகும். ஒரு ஆசிரியரானவர் தனது பொறுப்புக்களை அனுபவிக்கும் சந்தர்ப்பங்கள் காணப்படுகின்றன. 

ஒழுக்கம் சார்ந்த பொறுப்பு தொழில் சார்ந்த பொறுப்பு நியமனம் சார்ந்த பொறுப்பு என்பனவாகும். வகுப்பறையில் மாணவர்கள் வெறுமனே கற்பவர்கள் என்ற எண்ணப்பாடின்றி அவர்கள் கற்பதற்கு ஏற்றவகையிலான வசதிகளை உருவாக்கி தொடர்ந்து அவதானிப்பவராகவும் விளங்குதல் ஆசிரியர் மாணவர்களுக்கிடையேயான உறவினை சிறக்கச் செய்யும்.

மாணவர் தமது இளம்பராயத்தில் ஆசிரியரானவர் தமக்கு பிடித்தவராகம், அன்பை பொழிபவராகவும் தம் மீது அக்கறை காட்டுபவராகவும், தம்மை மதிப்பவராகவும் இருக்க வேண்டும் என எதிர்ப்பார்ப்பார்கள் பாடசாலைக்கு வரும் ஒவ்வொரு மாணவர்களும் வெவ்வேறு விதமான குடும்ப சூழல், அழுத்தங்கள், பிண்ணனிகள், சகபாடிகள், வறுமை, மன அழுத்தங்களோடு பாடசாலைக்கு வருகின்றனர்.

இத்தகைய அழுத்தங்கள் பற்றி அவர்கள் வெளியில் தெரியப்படுத்துவதில்லை இந்நிலைமையை ஆசிரியரானவர் தாமாக அறிந்து கொள்ளவேண்டியவராக காணப்படுகின்றார். 

ஆசிரியர் இதன் போது அவர்களது தேவைகளை உணர்ந்து, அவர்களது குறைகளை செவிமடுத்து அதற்கேற்றாற் போல் அவர்களுக்கு வசதி செய்து கொடுப்பராக இருக்க வேண்டும்.

மாணவர்கள் எப்போதும் ஆசிரியரிடம் உயர்ந்தளவு எதிர்ப்பார்ப்புக்களுடன் கூடியவர்களாகக் காணப்படுவார்கள். தற்காலத்தில் கல்வியின் தேவை அதிகரித்து காணப்படுவதுடன் போட்டியும் நிலவுகின்றமையே காரணமாகும்.

 ஆகையினால் ஆசிரியரானவர் எப்போதும் கற்பவராக இருத்தல் அவசியமாகிறது. மாணவர்களின் உயர் எதிர்ப்பார்ப்புக்களுடன் கூடியவர்களாக ஆசிரியர்கள் செயற்படும் பொழுது மாணவரின் கல்விப் பெறுபேறுகள் அதிகரிக்கும் வீட்டுச்சூழல் பெற்றோருடைய கல்வியறிவு மாணவர்களின் கற்றலில் செல்வாக்குச் செலுத்துகின்ற போதிலும், பாடசலைகளில் ஆசிரியர்கள் வழங்கும் தூண்டுதல்கள் இவற்றை வெற்றி கொள்ள உதவும். 

வகுப்பறையில் மாணவர்கள் எல்லோரும் வெற்றியடைவீர்கள் என்ற சாதகமான மனப்பான்மையுடனும், நம்பிக்கையோடும் மாணவர்களை செயற்படுத்தும் போது மாணவர்கள் ஆசிரியர்கள் மீது கொண்டுள்ள எதிர்ப்பார்ப்புக்கள் வெற்றித்தரும்,

சுதந்திரமாகக் கற்றல், கூட்டுக்கற்றல், கற்பித்தல் சாதனங்களைப் பயன்படுத்துதல், குறிப்பாக கற்பித்தல் நுட்பங்களை பயன்படுத்துதல், சுயச்சிந்தனையை வளம்படுத்துதல் ஆகியவற்றை வகுப்பறையில் மாணவர்களுக்கு ஒழுங்கமைக்கும் ஒவ்வொரு ஆசிரியரும் வகுப்பறையில் மாணவர்களின் கற்றல் செயற்பாட்டில் ஆர்வத்தினை தூண்டுபவராக செயற்படுவர். 

வகுப்பறை முகாமைத்துவத்தினை உயரிய மட்டத்தில் பேணுபவராகவும் விளங்குவார் இதுவே உண்மையான தொழிற்கலாசாரமாகும்.

தற்காலத்தில் ஆசிரியர் மத்தியில் தொழிற்கலாசாரத்தை பற்றி பார்க்கின்ற போது தற்காலத்தில் மாணவர்களைப் மற்றும் தனது தொழிற்கலாச்சாரத்தை கவனத்திற் கொள்ளாது செயற்படுபடுகின்றமையை அவதானிக்க முடிகிறது. 

அந்த வகையில் பார்க்கின்ற பொழுது ஆசிரியர்கள் தமது தொழிலை வகுப்பறையில் செயல்படுத்துகின்ற பொழுது பல்வேறு குறைபாடுகளை ஏற்படுத்தி வருகின்றனர் தனது தொழில் கலாச்சாரத்தையும் மீறி வருகின்றனர்.

உதாரணமாக, நீண்டகாலச் சேவையும் அனுபவமும் கொண்ட ஆசிரியர்கள் கூட மாணவர்களைப் பார்க்கும் போது அவர்களுடைய புறத்தோற்றத்தினைக் கொண்டு வகைப்படுத்தி வருகின்றனர்.

 நீண்டகால அவதானமும் அடிப்படைத் தகவல்களும் இன்றி மாணவர்களை வகைப்படுத்துதல் தவறான முடிவுகளுக்கு இட்டுச் செல்லும் என்பதை ஆசிரியர்கள் உணர வேண்டும்.

ஆசிரியர் தொழிலானது ஒரு புனிதமான சேவை என்றும், அறிவு மற்றும் அனுபவங்களின் அடிப்படையில் மேற்கொள்ளப்படுகின்றது. ஆசிரியரானவர் கற்றலுக்கு உதவூம் வகையில் செயற்படுகின்றார். 

மனித சமுதாயத்தில் ஆற்றப்படுகின்ற பயனுள்ள பணிகளுக்கிடையில் எவ்வித ஏற்றத்தாழ்வு களும் இருக்க முடியாது. அவையாவூம் கௌரவத்துக்குரியவையே ஆனால் சகல தொழில்களும் வாண்மை நிறைந்த தொழில்களாகி விடமாட்டாது.

ஒரு வாண்மைத் தொழிலில் ஆசிரியர்கள் சில பண்புகளை கொண்டிருக்க வேண்டும். சமூக பயன்பாடு, சமூக இயக்கத்துக்கு தொழில் மிகவும் அவசியமானது. அத்தொழில் பற்றிய பரந்த அறிவுத்தொகுதி, தொழில் தொடர்பான ஒழுக்கக் கோவை, தொழிலுக்குரிய வாண்மைசார் அமைப்பு, தொழில் புரிவோர் அர்ப்பணிப்பும் பொறுப்பும் கடமையும் வகை கூறலும் கொண்டிருத்தல், தொழில் புரிவோர் தமது தொழில் சார் அறிவை இற்றைப்படுத்திக் கொள்ளல், தொழில் புரிவோர் தமக்குள் தொழில் சார் ஒற்றுமை மற்றும் தோழமை பூண்டிருத்தல் தொழில் தொடர்பான தீர்மானங்களை சுதந்திரமாக மேற்கொள்ளல் போன்றனவாகும்.

ஆசிரியர் பணியினை ஒரு தொழிலாகவும் சேவையாகவும் கைகொள்ள வேண்டுமாயின். கல்வியானது தனியாள் விருத்திக்கும் சமூக விருத்திக்கும் அடிப்படைக் காரணியாக அமைவதால் அது தொடர்பாக தேசிய மட்டத்திலும் சர்வதேச மட்டத்திலும் பல்வேறு நிகழ்ச்சித் திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. 

இங்கு தனியாள் ஒவ்வொருவரும் வாழ்நாள் முழுவதும் கற்பதும் அவ்வாறு கற்ற அறிவினை வாழ்க்கையினதும் சமூகத்தினதும் முன்னேற்றத்திற்கு பயன்படுத்தல் வேண்டும் இச்செயற்பாட்டிற்கு ஆணிவேராகத் திகழ்பவர்கள் ஆசிரியர்களாவர்.

சிக்கலான இப்பணியினை நிறைவு செய்வதற்கு ஆசிரியர்களிடம் வாண்மை தொடர்பான உயர் நிலைத் தேர்ச்சி தேவைப்படுகின்றது எனவே ஆசிரியர்கள் இப்பணியினை செய்பவர்ளக்குரிய தேர்ச்சியைப் பெறும் போது ஆசிரியர்களால் தம்மிடம் கற்க வரும் இளம் தலைமுறை யினரை உரியவாறு தயார் செய்ய முடியும் எதிர் காலத்தில் எழுகின்ற சவால்களை துணிச்சலோடு எதிர் கொள்ளவும் அவர்களின் கற்றலை இலகுக்குள்ளதாக்குவதற்கும் அவர்களின் கற்றலுக்கு அவர்களையே பொறுப்புடையவர்களாக்கும் பணியும் ஆசிரியரின் தொழில் பற்றிலேயே தங்கயுள்ளது.


சாந்தகுமார் மதுஷாலினி 

இரண்டாம் வருட முதலாம் அரையாண்டு கல்வியியல் சிறப்பு கற்கை

மாணவி, கல்வி, பிள்ளை நலத்துறை, கலை கலாசார பீடம்,

கிழக்கு பல்கலைக்கழகம்

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.