வெறும் வயிற்றில் கருஞ்சீரக நீரா?

சமையலறையில் உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் சத்துக்களைக் கொண்ட ஏராளமான பொருட்கள் உள்ளன. அதில் ஒன்று தான் கருஞ்சீரகம்.

இந்த கருஞ்சீரக விதைகளானது பழங்காலம் முதலாக நாட்டு மருத்துவத்தில் பல ஆரோக்கிய பிரச்சனைகளுக்கு சிகிச்சை அளிக்க பயன்படுத்தப்பட்டு வருகிறது.

இந்த கருஞ்சீரக விதைகள் ஏராளமான மருத்துவ பண்புகளைக் கொண்டுள்ளன. முக்கியமாக கருஞ்சீரக விதைகளில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் அதிகம் உள்ளன.

இது ப்ரீ ராடிக்கல்களால் உடலில் உள்ள செல்களில் ஏற்படும் சேதத்தைத் தடுத்து நாள்பட்ட நோய்களின் அபாயத்தைத் தடுக்கிறது.

கருஞ்சீரக விதைகளில் அத்தியாவசிய வைட்டமின்கள் மற்றும் கனிமச்சத்துக்கள் அதிகம் உள்ளன.

இந்த கருஞ்சீரக விதைகளை தினசரி உணவில் சிறிது சேர்த்து வந்தால் அது பல நோய்களின் அபாயத்தைத் தடுக்க உதவுகிறது.

இப்படிப்பட்ட கருஞ்சீரக விதைகளை பலவாறு உணவில் சேர்க்கலாம்.

அதுவும் கருஞ்சீரக விதை நீரைக் காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் குடித்து வந்தால் உடலில் பல அற்புதங்கள் நிகழும். 

✅கொலஸ்ட்ரால் குறையும்

உடலில் கொலஸ்ட்ரால் அளவு அதிகமாக இருந்தால் அது இதய நோய்களின் அபாயத்தை அதிகரிக்கும்.

உடலில் உள்ள கெட்ட கொலஸ்ட்ராலை எளிய வழியில் குறைக்க விரும்பினால் காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் கருஞ்சீரக நீரைக் குடியுங்கள்.

ஆய்வு ஒன்றில் சர்க்கரை நோய் உள்ளவர்கள் கருஞ்சீரகத்தை ஒரு வருடம் தொடர்ந்து உட்கொண்டு வந்ததில் உடலில் உள்ள கெட்ட கொலஸ்ட்ரால் அளவு குறைந்து நல்ல கொலஸ்ட்ரால் அளவு அதிகரித்திருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

ஆகவே கெட்ட கொலஸ்ட்ராலைக் குறைக்க சிறந்த வழி கருஞ்சீரக நீரைக் குடிப்பது தான். 

✅புற்றுநோயைத் தடுக்கப்படும்

கருஞ்சீரகத்தில் அதிகளவிலான ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் உள்ளன.

பொதுவாக ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் நிறைந்த உணவுகளை உட்கொள்ளும் போது ப்ரீ ராடிக்கல்களால் ஏற்படும் சேதம் தடுக்கப்பட்டு நாள்பட்ட நோய்களின் அபாயமும் தடுக்கப்படும். முக்கியமாக புற்றுநோயின் ஆபத்து குறையும்.

அதுவும் கருஞ்சீரக நீரை காலையில் வெறும் வயிற்றில் உட்கொள்ளும் போது அது புற்றுநோய் செல்களின் வளர்ச்சியைத் தடுக்கும். 

✅பாக்டீரியாக்கள் அழியும்

கருஞ்சீரக விதைகளில் ஆன்டி-பாக்டிரியல் பண்புகள் உள்ளன.

கருஞ்சீரக நீரை காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் அடிக்கடி குடிக்கும் போது அது உடலைத் தாக்கும் பாக்டீரியாக்களின் வளர்ச்சித் தடுத்து அடிக்கடி நோய்வாய்ப்படுவதைத் தடுக்கும்.

✅இரத்த சர்க்கரை சீராகும்

கருஞ்சீரகம் சர்க்கரை நோயாளிகளுக்கு மிகவும் நல்லது. ஏனெனில் இது இரத்த சர்க்கரை அளவை சீராக பராமரிக்க உதவி புரியும்.

கருஞ்சீரக நீரைக் குடித்து வருவது இரத்த சர்க்கரை அளவை நிலையாக பராமரிக்க உதவுவதோடு உயர் இரத்த அழுத்தத்தால் ஏற்படும் பக்க விளைவுகளைத் தடுப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

எனவே இரத்த சர்க்கரை அதிகமாக இருந்தால் கருஞ்சீரக நீரைக் குடியுங்கள். 

✅உடல் எடை குறையும்

உடல் பருமனால் அவதிப்படுகிறீர்களா? அப்படியானால் கருஞ்சீரக நீரைக் குடியுங்கள்.

ஏனெனில் கருஞ்சீரகம் உடலின் மெட்டபாலிசத்தை மேம்படுத்தி உடலில் உள்ள அதிகப்படியான கொழுப்புக்களைக் கரைத்து உடல் எடையைக் குறைக்க உதவுகிறது.

அதுவும் இந்நீரை காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் குடிக்கும் போது, சிறப்பான பலனை விரைவில் காணலாம்.

✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.