மாணவர்களின் ஆளுமையை வளர்ப்பதில் பாடசாலை மற்றும் ஆசிரியர்களின் வகிபகம்

இலங்கையின் கல்வி வரலாறு ஆனது மிகுந்த தொன்மையினை கொண்ட போதிலும் காலத்திற்கு காலம் கல்வியின் முறைகளும் கலைத்திட்டங்களும் மாற்றம் பெற்ற வண்ணம் உள்ளது .” 1992 “ஆண்டு கல்வியின் இலக்குகளாக திறனாய்வு, மனப்பாங்கு, சுய முகாமைத்துவம், விழுமிய பண்பு நவீன தொழிற்கல்வி நுட்பங்கள் என கொண்டுவரப்பட்டன. இலக்குகள் அடைய வேண்டும் என்றால் சில அடிப்படையான தேர்ச்சிகளை நாம் வளர்த்துக் கொள்ள வேண்டும் அவ்வாறான தேர்ச்சிகளில் ஒன்றாக நாம் ஆளுமையினை குறிப்பிடலாம். இந்த ஆளுமை தேர்ச்சியை பண்படுத்துவதில் பாடசாலை மற்றும் ஆசிரியர்களின் வகிபகங்களை நோக்கும்போது.

முதலில் “ஆளுமை” என்றால் என்ன என்பதனை ஆராயும் பொருட்டு

“ Personality  “என்று ஆங்கிலத்தில் அழைக்கப்படுகின்றது. ஆளுமை என்பது ஒருவனது தனித்தன்மை வாய்ந்த அமைப்பு , குறிப்பிட்ட சூழலில் ஒருவர் எவ்வாறு நடந்து கொள்வது என்பதை முன்கூட்டியே தெரியப்படுத்துவது ஆளுமை என்றவாறு பல அறிஞர்கள் பலவிதமான கருத்துக்களை வெளியிட்டுள்ளனர்.

ஒருவரது ஆளுமை பண்பினை தீர்மானிப்பதில் உடலியல், உளவியல், சமூகவியல் சார்ந்த காரணிகள் செல்வாக்கு . உடலில் சார்ந்ததாக நரம்பு, மண்டலம் நனமிலை சுரப்பிகளும் மற்றும் நுண்ணறிவு, ஊக்கம், மனவளர்ச்சி அக்கறை, பற்று, போன்ற உளவியலாகவும் சமூகவியல் சார்ந்ததாக குடும்பம், சூழல் ,பண்பாடு ,மொழி என்ற ரீதியில் ஆளுமை பண்புகளை தீர்மானிக்கின்றது.

அந்த வகையில் “இன்றைய சிறுவர்கள் நாளைய தலைவர்கள்” என்பதற்கு இணங்க மாணவர்களின் தனித்துவமான ஆளுமையினை அடையாளம் கண்டு அதற்கு ஏற்றது போல அவர்களை வளர்ப்பதில் பாடசாலைகள் முதலிடம் வகிக்கின்றன. அதாவது கல்வி என்பது வெறுமனே அறிவினை மட்டும் போதிப்பதாக அமைந்து விடக்கூடாது. அதாவது அறிவு மட்டும் கல்வியாகாது கற்ற கல்வியின் வாயிலாக தனித்துவமான செயற்பாடுகளினை ஆற்றுதல் வேண்டும்.

அதாவது ஆளுமை திறன்கள் ஆனவை உளரீதியாகவும் உடல்ரீதியாகவும் வெளிப்படுத்தப்படுகின்றன மாணவர்களின் உள்ளத்தினை மலரச் செய்வதாக கல்வி அமைய வேண்டும். கல்வியை போதிக்கின்ற ஆசிரியர்களும் மாணவர்களை கண்காணித்து அதற்கு ஏற்றது போல பயிற்சிகளை வழங்க வேண்டும் அனைவரும் ஒரே மாதிரியான ஆளுமைப் பண்புகள் காணப்படாது ஆனால் அதனை வளர்க்க ஒரே இடமாக பாடசாலை மாணவர்களுக்கு களமமைத்து கொடுக்கிறது.

மாணவர் மத்தியில் காணப்படும் ஆளுமை பண்புகளாக இணைப்பாடவிதான செயற்பாடுகளில் ஈடுபடுதல் இசை, நடனம் ,ஓவியம் வரைதல் புத்தாக்கங்களில் ஈடுபடுதல், நேர முகாமைத்துவம், தொடர்பாடல், சிறந்த மொழியாலுமைகள் ,தீர்மானம் எடுக்கும் தன்மை, வெற்றி தோல்வியை மதித்தல் ,சிறந்த பேச்சாற்றல், தலைமைத்துவம், தத்துணிவு,  புத்திசாதூரியமாக நடந்து கொள்ளல், சவால்களை எதிர்கொள்ளும் என ஆளுமைகளை பட்டியல்படுத்தலாம்.

மாணவர்கள் மத்தியில்  ஆளுமை பண்பினை வளர்ப்பது பாடசாலை பல வகையான செயற்பாடுகளை ஆற்றுதல் வேண்டும். அவை உளரீதியான உடல் ரீதியான ஆளுமைகளை வளர்க்கக்கூடிய சந்தர்ப்பங்கள் பாடசாலைகளில் இடம்பெறுகின்றன. கற்றல் தொடர்பான செயல்பாடுகள் போட்டிகள் வகுப்பறை நாளாந்த செயற்பாடுகள் இணைப்பாட விதான செயற்பாடுகள் பாடசாலையின் மறைகளை திட்டங்கள் என்பவற்றின் வாயிலாக ஆளுமைகள் மாணவர் மத்தியில் வளர்க்கப்படுகிறது.

பாடசாலையில் மாணவர்களின் ஆளுமைனை வளர்ப்பதில் குறிப்பாக தலைமைத்துவ பண்புகளினை வளர்ப்பதிலும் பாடசாலையில் நடைபெறுகின்ற பொதுவான போட்டிகள் ,வகுப்புத் தலைவர், மாணவர் தலைவர் ,இந்து மகா மன்றம், மாணவர் பாராளுமன்றம் போன்றவற்றில் மாணவர்கள் ஈடுபடுவதன் வாயிலாக அவர்கள் மத்தியிலே தலைமைத்துவ பண்புகள் வளர்க்கக்கூடியதாக உள்ளது.

விளையாட்டு இணைப்பாடவிதான செயற்பாடுகளிலே பாடசாலையில் நடத்துவதன் வாயிலாக வெற்றி தோல்விகளை மதிக்கப்படல்கள், சகித்துக் கொள்வது, விட்டுக் கொடுப்பு, புரிந்துணர்வு, ஒற்றுமையாக , அது மட்டுமன்றி சாரணிய இயக்கங்களில் மாணவர்களை பாடசாலையில் ஊக்குவிப்பதன் வாயிலாக துணிவாக செயல்படுதல், தைரியமாக முடிவுகளை எடுத்தல் புத்திசாதூரியமாக செயல்படுதல், எண்ணிலடங்காத ஆளுமைகளை வளர்ப்பது பாடசாலை மாணவர்களுக்கு களம் அமைக்கின்றது .மேலும் ஆளுமைகள் மாணவர் மத்தியில் உடல்ரீதியாகவும், உளரீதியாகவும் வளர்க்கப்படுகிறது இதில் ஆசிரியரின் பங்கு மிக உன்னதமானது.

பாடசாலையில் வகுப்பறை கற்றலின் வாயிலாக மாணவர்களை உள ஆளுமைகள் ரீதியாக அளந்து அதற்கு ஏற்றது போல அவர்களின் ஆளுமைகளை வளரச் செய்தல் 5F கற்பித்தல் , நுண்ணறிவு போட்டிகள் வினா கொத்துக்கள், போட்டிகளை நடத்துதல், அவதானித்தல், இதன் வாயிலாக மாணவர்களின் உள ஆளுமை திறன்களை ஆசிரியர்கள் அறிகின்றனர்

பரீட்சைகள் கணித, விஞ்ஞான, நுண்ணறிவு ,பொது அறிவு போட்டிகளிலே மாணவர்கள் மத்தியில் நடத்துவதன் வாயிலாக மீத்திறன் கூடிய மாணவர்களை அடையாளப்படுத்தி அவர்களுக்கு மேலதிக பயிற்சியினை வழங்குவதன் வாயிலாக சமூக விஞ்ஞான கணித ஒலிம்பியார் போட்டிகளில் அவர்களை தேசிய ரீதியாக சாதனையாளர்களாக  அடையச் செய்யலாம்.

பாடசாலைகளில் ஆசிரியர் என்பவர் மாணவர்களுக்கு அன்னைக்கு அடுத்த படிநிலையில் இருப்பவராக ஆசிரியர் காணப்படுகின்றார். மாணவர்களின் மன உடல் வலிமையினை அறிந்து அதற்கு ஏற்றது போல ஊக்குவிப்புகளை, வெகுமதிகள், பரிசீல்கள் ,மற்றும் அறிவுரைகள் ,வழங்குவதன் வாயிலாக மாணவரின் மத்தியில் காணப்படுகின்ற ஒன்றுக்கும் மேற்பட்ட ஆளுமைகளை வெளிக்கொண்டு செய்ய முடியும்.

பாடசாலையில் ஆசிரியர்கள் ஆளுமைகளை வளர்க்கும் செயற்பாட்டில் ஈடுபடுகின்ற போது ஆசிரியர்கள் வெறுமனே கல்வி அறிவினை மட்டும் கொண்டவராக காணப்படக்கூடாது. மேலும் அவர்கள் பரந்து அறிவினை கொண்டவர்களாகவும் தொழில்நுட்பக் கருவிகளினனை பயன்படுத்தும் தன்மை கொண்டவராக காணப்பட வேண்டும்.

கல்வியின் மாற்றமானது அறிவு, திறன், மனப்பாங்கு, என்பவற்றில் மாற்றங்களை கொண்டு வருவதாக அமைய வேண்டும். ஆசிரியர் மாணவர்களின் உள ஆளுமையை கொண்டு வருவது தேடல் ரீதியான கல்வி குழுமுறைக் கல்வி வழங்குவதன் வாயிலாக 

 தனிப்பட்ட ஒன்றுக்கும் மேற்பட்ட ஆளுமைகளினை மாணவர்களின் உடைய தலைமைத்துவ பண்புகள், தனி ஆளுமைப் பண்புகள் ,கூட்டு , முன்வைக்கும் திறன், தீர்வுகளை சரியாக முன்வைத்தல், முன்மாதிரி ,தத்துணிவு என பல ஆளுமை பண்புகள் வளர்க்கப்படுகின்றன.

எனவே நாளைய சமுதாயத்திற்கு தேவையான வினைத்திறனான ஆளுமை மிக்க மாணவர்களை உருவாக்குகின்ற  அதிகளவான பங்களிப்பு ஆசிரியரை சாரும் பாடசாலைகளின் செயல்பாடுகளின் வாயிலாக வினைத்திறன் உள்ளவர்களாக அவர்களை விளைத்திறன் அதிகரிக்க செய்யத்தக்க வகையில் அவர்களின் ஆளுமை விருத்தியில் ஆசிரியருடைய பங்கும் பாடசாலையினுடைய பங்கும் மிகவும் உன்னதமானது என்பதில் எது விதமான ஐயமும்இல்லை.

கங்காதரன் கோபிகா

இரண்டாம் வருட முதலாம் அரையாண்டு

கல்வியல் சிறப்புக்கற்கை.

கல்வி பிள்ளை நலத்துறை.

கிழக்கு பல்கலைக்கழகம்.

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.