சர்க்கரை நோயாளிகள் பேரிச்சம் பழம் சாப்பிடலாமா?

பொதுவாக சர்க்கரை நோயாளிகள் இனிப்பை முற்றிலும் தவிர்க்க வேண்டும். அதேபோன்று கார்போஹைட்ரேட், மாவுப்பொருள்கள் நிறைந்த உணவை அதிகமாக உட்கொள்வதைத் தவிர்க்க வேண்டும் என்பது தான் மிக முக்கியமாகக் கடைபிடிக்க வேண்டிய விஷயமாக இருக்கும்.

அதற்காக டீ, காபி கூட சர்க்கரை சேர்க்காமல் சாப்பிடுவதுண்டு. சர்க்கரை என்பது சர்க்கரை நோயாளிகளைப் பொருத்தவரையில் வெறும் வெள்ளை சர்க்கரை மட்டுமல்ல, வெல்லம், கருப்பட்டி, பனங்கற்கண்டு என்ற எல்லா வகையான சர்க்கரையுமே பிரச்சினை தான்.

அதனாலேயே இனிப்பான பழங்களைக் கூட தவிர்ப்பார்கள். ஆனால் மருத்துவர்களோ பழங்களை சாப்பிடலாம். அதற்கு பயப்படத் தேவையில்லை. மாம்பழம், பலாப்பழம் போன்றவற்றை மட்டும் கொஞ்சம் அளவோடு சாப்பிடுவதற்கு அறிவுறுத்தப்படுவார்கள். ஏன் பழங்களில் உள்ள இனிப்பை நினைத்து பெரிதாக பயப்படுவதில்லை என்றால், பழங்களிலி நார்ச்சத்து மிக மிக அதிகம். அதனால் தான் ஜூஸாக எடுத்துக் கொள்வதை விட பழமாக சாப்பிடுவது நல்லது என்று அறிவுறுத்தப்படுகிறார். குறிப்பாக இரும்புச்சத்தும் நார்ச்சத்தும் கொண்ட உணவுப் பொருள்களை அதிகமாக எடுத்துக் கொள்வதுண்டு.

மிக மிக அதிக அளவில் இரும்புச் சத்து கொண்ட உணவுப்பொருள் என்று சொன்னாலே முதலில் நம்முடைய நினைவுக்கு வருவது முருங்கைக் கீரையை அடுத்ததாக இருப்பது பேரிச்சம் பழம் தான்.

பழங்களிலேயே அதிக சுவையுடையது என்றால் அது பேரிச்சம் பழம் தான். ஆனால் அதை நாம் கொட்டை வகைகளோடு சேர்த்து விட்டோம். ஆனால் பேரிச்சை பழ வகைகளில் ஒன்று தான். தினமும் பேரிச்சம் பழம் சாப்பிடுவது நல்லது என்று மருத்துவர்கள் பரிந்துரைப்பது உண்டு. அதே அவ்வளவு ஊட்டச்சத்துக்களும் பேரிச்சை பழத்தில் இருந்தாலும் சர்க்கரை நோயாளிகளுக்கு சாப்பிடலாமா வேண்டாமா என்ற சந்தேகம் எழுவதுண்டு. அதைப் பற்றி தான் நாம் விவாதிக்கப் போகிறோம்.

✅ஹீமோகுளோபின்

ஹீமோகுளோபின் குறைவாக இருப்பவர்கள், இரும்புச்சத்து குறைபாடு உடையவர்கள் தினமும் பேரிச்சம் பழம் சாப்பிடுவது, பாலில் ஊற வைத்து சாப்பிடுவது நல்லது. அதன்மூலம் நம்முடைய ரத்த சிவப்பணுத் தட்டுக்கள் அதிகரிக்கும்.

✅சர்க்கரை நோயாளிகள் பேரிச்சம் பழம் சாப்பிடலாமா? ஒரு நாளைக்கு எத்தனை சாப்பிடலாம்?

தனக்குப் பிடித்த பேரிச்சம் பழத்தை ஒரு நாளைக்கு ஒன்று என்ற வகையில் அப்படியாகவோ சாப்பிட்டால் பெரிதாக ரத்த சர்க்கரை அளவு அதிகரிக்காது. ஆனால் ரத்த சர்க்கரையால் அதிகமாக அவதிப்படுபவர்களாக இருப்பவரானால் நிச்சயம் இந்த ஒரு பேரிச்சையால் சிறிதளவு ரத்த சர்க்கரையின் அளவில் மாற்றம் இருக்கும். பெரிய மாற்றம் ஏதும் இருக்காது.

✅சர்க்கரை நோயாளிகள் பேரிச்சம் பழம் சாப்பிடலாமா? ஒரு நாளைக்கு எத்தனை சாப்பிடலாம்?

✅2-3 பேரிட்சை

இரண்டு பேரிட்சை கூட எடுத்துக் கொள்ளலாம். பெரிய மாற்றம் ஏற்படாது. ஒருவேளை மூன்று பேரிட்சைக்கும் மேல் எடுத்துக் கொள்கிறீர்கள் என்றால், நிச்சயம் உங்களுடைய ரத்தத்தில் கார்போஹைட்ரேட்டின் அளவை சோதிக்க வேண்டும். அப்படி கார்போ அளவு அதிகமாக இருநுதால் நிச்சயம் கார்புாஹைட்ரேட் நிறைந்தத உணவுகளைக் குறைத்துக் கொள்வது மிக அவசியம்.

✅சர்க்கரை நோயாளிகள் பேரிச்சம் பழம் சாப்பிடலாமா? ஒரு நாளைக்கு எத்தனை சாப்பிடலாம்?

நான்கைந்து பேரிச்சைக்கு மேல் சாப்பிடலாமா என்று கேட்டால் நிச்சயம் கூடாது. ஒரு பௌல் அளவுக்கு உருளைக்கிழங்கு எப்படி சாப்பிடுவது ஆபத்தோ அதே அளவு ஆபத்து உடையது பேரிச்சம் பழமும். 

பொதுவாக இதெல்லாம் உங்களுடைய மருத்துவர்கள் உங்களுக்கு அறிவுறுத்தி இருப்பார்கள். அப்படி அறிவுறுத்தவில்லை என்றால் இதை ஃபாலோ செய்யுங்கள். சர்க்கரையைப் போன்று தான் இதுவும் அளவைக் கூட்டும். அதனால் ஒன்று அல்லது இரண்டு பேரிட்சைப் பழத்தோடு நிறுத்திக் கொள்வது நல்லது.

✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.