எலும்புகள் வலுவிழக்க இது தான் காரணமா?

 

இதய நோய், சர்க்கரை நோய் போன்ற பல்வேறு நாள்பட்ட நோய்களை பற்றி நாம் அதிகம் கேள்விபட்டிருக்கிறோம். பெரும்பாலும் வயதாகும்போது, எலும்பு மற்றும் மூட்டு சம்பந்தமான பிரச்சனைகள் ஏற்படலாம்.

ஏதேனும் விபத்தினால் எலும்பு உடையக்கூடும் அல்லது சேதமடையாக்கூடும். அந்த வகையில் பெரும்பாலான மக்களை பாதிக்கும் ஓர் எலும்பு பிரச்சனை ஆஸ்டியோபோரோசிஸ். இது எலும்புகளை வலுவிழக்கச் செய்கிறது.

இதன் விளைவாக அவை உடையக்கூடியதாகவும், எலும்பு முறிவு ஏற்படும் அபாயத்தை அதிகரிக்கிறது. ஆஸ்டியோபோரோசிஸ் மில்லியன் கணக்கான மக்களை பாதிக்கும் ஓர் நிலை.

ஆபத்தான உண்மை என்னவென்றால் பலர் அறியாமல் தங்கள் சொந்த எலும்பு வலுவிழந்து போவதற்கு தாங்களே காரணமாக இருக்கிறார்கள். வயதானவர்களின் மக்கள்தொகை அதிகரித்து வரும் நிலையில் எலும்புகளை பலவீனப்படுத்தும் பழக்கவழக்கங்களைப் புரிந்துகொள்வது மிகவும் முக்கியமானது.

✅போதுமான கால்சியம் உட்கொள்ளல்

கால்சியம் என்பது வலுவான எலும்புகளின் கட்டுமானப் பொருளாகும். போதுமான கால்சியம் கிடைக்காதபோது உடல் அதை எலும்புகளில் இருந்து எடுத்து அவற்றை பலவீனமாக்குகிறது.

போதுமான கால்சியம் உட்கொள்வதன் முக்கியத்துவத்தை நாம் புரிந்துகொள்ள வேண்டும். கால்சியம் நிறைந்த பால் உணவு முக்கிய உணவாக எடுத்துக்கொள்ளப் படுகிறது.

போதிய கால்சியம் இல்லாதது எலும்பின் அடர்த்தியைக் குறைத்து எலும்பு முறிவு அபாயத்தை அதிகரிக்கும். இதனால் எலும்பு விரைவில் உடையலாம். 

✅வைட்டமின் டி பற்றாக்குறை

வைட்டமின் டி உடலில் கால்சியத்தை உறிஞ்சுவதற்கு உதவுகிறது. இது இல்லாமல் எலும்புகள், உட்கொள்ளும் கால்சியத்தை திறம்பட பயன்படுத்த முடியாது.

சூரிய ஒளி அதிகம் உள்ள பகுதிகளில் கூட பரவலான வைட்டமின் டி குறைபாடு காணப்படுகிறதாக கூறப்படுகிறது.

வைட்டமின் டி குறைபாடு கால்சியம் உறிஞ்சுதலை பாதிக்கிறது.

இது பலவீனமான எலும்புகளுக்கு வழிவகுக்கும். போதுமான சூரிய ஒளி மற்றும் வைட்டமின் D இன் உணவு ஆதாரங்கள் இன்றியமையாதவை. 

✅உட்கார்ந்த வாழ்க்கை முறை

உடல் செயல்பாடு இல்லாததால் எலும்பு அடர்த்தி மற்றும் தசை வலிமை குறைந்து, எலும்பு முறிவு ஏற்படும் அபாயம் அதிகரிக்கிறது.

பல ஆய்வுகள் உட்கார்ந்த வாழ்க்கை முறையை குறைந்த எலும்பு அடர்த்தி மற்றும் ஆஸ்டியோபோரோசிஸ் அபாயத்துடன் இணைத்துள்ளன.

மேசை வேலைகள் மற்றும் திரை நேரம் அதிகரிப்பதன் காரணமாக இந்தியாவில் உட்கார்ந்த வாழ்க்கை மிகவும் பொதுவானதாகி வருகிறது.

இது எலும்பு ஆரோக்கியத்தில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தும். 

✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.