சில பாடசாலைகளுக்கு விடுமுறை அறிவிப்பு.

தென் மாகாணத்திலுள்ள சில பாடசாலைகளுக்கு இன்று (23) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளதாக தென் மாகாண கல்வி பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

இதன்படி, தெனியாய, அக்குரஸ்ஸை, முலட்டியான, வலஸ்முல்ல ஆகிய பகுதிகளிலுள்ள பாடசாலைகளுக்கே விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.

தென் மாகாணத்தில் நிலவும் சீரற்ற வானிலையை அடுத்தே இந்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளது.

இதேவேளை, தென் மாகாணத்தின் பல பகுதிகள் வெள்ள நீரில் மூழ்கியுள்ளன.

நில்வலா ஆற்றின் நீர்மட்டம் உயர்வடைந்துள்ள நிலையில், தாழ் நிலப் பகுதிகளில் மேலும் வெள்ள பெருக்கு அதிகரிக்கும் சாத்தியம் காணப்படுவதாக இடர் முகாமைத்துவ மத்திய நிலையம் அறிவித்துள்ளது.

குறித்த பகுதிகளில் தாழ் நிலப் பிரதேசங்களில் வாழும் மக்களை பாதுகாப்பான இடங்களை நோக்கி செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளன.

✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.