ரம்புட்டான் நல்லது தான்... ஆனால் மறந்தும் கூட இவர்கள் சாப்பிட வேண்டாம்.

பொதுவாகவே நாம் சாப்பிடும் உணவுகளாக இருந்தாலும் சரி பழமாக இருந்தாலும் சரி அனைவரும் சத்துகள் நிறைந்துள்ள பழத்தை தான் அதிகமாக எடுத்துக்கொள்ள விரும்புவார்கள். அதில் ஒன்று தான் ரம்புட்டான்.

இந்த பழத்தில் பலவகையான ஊட்டசத்துகள் நிறைந்து இருகின்றது. இது பற்றி விரிவாக பார்க்கலாம்.

ரம்புட்டான் பழத்தின் அறிவியல் பெயர் நெபிலியம் லப்பாசியும் (Nephelium lappaceum) ஆகும். இது பெரும்பாலும் தென்கிழக்கு ஆசியாவில் தான் அதிகமாக பயிரிடப்படும். 

✅ரம்புட்டானில் உள்ள சத்துக்கள்

100 கிராம் ரம்புட்டான் பழத்தில் 1.3 முதல் 2 கிராம் வரை நார்ச் சத்து உள்ளது. இது ஆப்பிள், ஆரஞ்சு அல்லது பேரீச்சம்பழங்களில் உள்ள நார்ச் சத்துக்கு சமமாகும்.

100 கிராம் ராம்புட்டான் பழத்தில் 0.5 கிராம் கொழுப்பு இருகின்றது.

100 கிராம் ரம்புட்டான் பழத்தில் ஒரு கிராமுக்கும் குறைந்த அளவில் புரதச் சத்து உள்ளது.

மேலும் இதில் மாங்கனீசு, பாஸ்பரஸ், பொட்டாசியம், மெக்னீசியம், இரும்பு மற்றும் துத்தநாகச் சத்தும் காணப்படுகிறது.

✅ரம்புட்டான் பழத்தின் நன்மைகள்

👉வைட்டமின் சி தேவையை பூர்த்தி செய்கிறது.

👉அனீமியாவை தடுக்கிறது.

👉காய்ச்சலில் இருந்து பாத்துக்காகிறது.

👉விந்தணு எண்ணிக்கை அதிகரிக்கும்.

👉உடல் எடை குறைக்க உதவுகிறது.

👉சிறுநீரக கல் உருவாகாமல் தடுக்கிறது.

👉இதய ஆரோக்கியத்தை பாதுகாக்கிறது.

👉உடனடி ஆற்றலை தருகிறது.

👉நீரிழப்பை தடுக்கிறது.

👉சிறுநீரக ஆரோக்கியத்தில் உதவுகிறது.

✅ரம்புட்டான் பழத்தின் தீமைகள்

👉கர்ப்பிணி பெண்கள் உட்கொள்ளக் கூடாது.

👉பழங்களை சாப்பிடுவதால் வயிற்றில் வெப்பம் உண்டாகும்.  

👉டைப் 2 நீரிழிவு நோயாளிகள் அதிகமாக இந்த பழத்தை சாப்பிடுவதால் சர்க்கரை அளவு அதிகரிக்கும்.

உயர் இரத்த அழுத்தம் பிரச்சினை இருப்பவர்கள் இந்த பழங்களை உணவில் சேர்த்துக்கொள்வதற்கு முன் வைத்தியரிடம் ஆலோசனையை பெற்றுக்கொள்ள வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.  

✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.