தடைகளைத் தகர்த்தெறிந்து முன்னேறுவோம்!

வாழ்க்கை என்பது ஏற்ற இறக்கங்கள் நிறைந்தது. ஒரு இலக்கை நிர்ணயித்துக் கொண்டு அதை அடைய நினைக்கும்போது பல தடைகள் வரலாம். இந்தப் பதிவில் அவற்றை தகர்த்தெறிவதற்கான வழிமுறைகளைப் பார்க்கலாம்.      

 1. திட்டம் தீட்டுங்கள் - வாழ்க்கையில் என்ன வேண்டுமோ அதைப்பற்றி அழகான ஒரு திட்டம் தீட்டுங்கள்.

2. நீங்கள் ஒரு தனி ஆள் இல்லை என்று உணருங்கள்; நீங்கள் வெற்றிப்பாதையை நோக்கி நடக்கும் போது நீங்கள் மட்டும் தனியாக இல்லை. உங்களுக்கு முன்னால் அந்த பாதையில் சென்றவர்கள் ஏராளம் பேர் இருக்கிறார்கள் உணருங்கள்.

3. உதவி கேளுங்கள்; பிறரிடம் உதவி கேட்பதில் தயக்கமோ அவமானமோ தேவையில்லை. நீங்கள் உதவி கேட்பவர்  உங்கள் நண்பராகவோ குருவாகவோ அல்லது ஒரு புதியவராகவோ இருக்கலாம். தயங்காமல் கேளுங்கள்.

4. உதவிகளை ஏற்றுக் கொள்ளுங்கள்; உங்களுக்கு யாராவது உதவ முன் வந்தால் அதை மனமுவந்து ஏற்றுக் கொள்ளுங்கள்.

5. உங்கள் உணர்வுகளைப் புரிந்து கொள்ளுங்கள்; உங்கள் உணர்வுகளுக்கு முகமூடி போட்டுக் கொள்ளாதீர்கள். நீங்கள் மனதில் என்ன நினைக்கிறீர்களோ அதை ஒரு காகிதத்தில் வார்த்தையாக வடியுங்கள். உணர்வுகளை நீங்கள் புறம் தள்ளும்போது அவை எதிர்மறை எண்ணங்களாக மாறும். காகிதத்தில் எழுதும்போது புதுப்புது ஐடியாக்களும் சிக்கலுக்கான  தீர்வுகளும் கிடைக்கும்.

6. பிறருக்கு உதவுங்கள்; பிறருக்கு நீங்கள் என்ன அளிக்கிறீர்களோ அதைத்தான் நீங்கள் பெறுகிறீர்கள். பிறருக்கு உதவுவதன் மூலம் உங்களுக்கு நீங்களே உதவுகிறீர்கள். அது மகிழ்ச்சியாக வைத்திருக்கும்.

7. பெரிதாக எண்ணுங்கள்; இதற்கு முன்பு நீங்கள் அடைந்த தோல்வி உங்களை சிறிதாக சிந்திக்கத் தூண்டும். ஆனால் அதை புறந்தள்ளிவிட்டு வாழ்க்கையில் பெரிய லட்சியங்களையும்,  வேட்கையையும் வளர்த்துக் கொள்ளுங்கள். அதற்கான சவால்களையும் தைரியமாக சந்தியுங்கள். பெரிதாக சிந்தித்தால் தான் நீங்கள் நினைத்ததை விட பெரிய உயரத்தை வாழ்க்கையில் அடைய முடியும்.

8. நேர்மறை எண்ணம்; உங்களுடைய வாழ்வு தற்போது எந்த நிலையில் இருந்தாலும் நேர்மறையான எண்ணம் மிக அவசியம். அதுவே உங்கள் வாழ்க்கையாகவும் மாறும். நேர்மறை மைண்ட் செட் அடைவதற்கு தியானம் நன்றாக கைகொடுக்கும்

9. கைவிடாதீர்கள்; ஒரு சிக்கல் எழும்போது அந்த முயற்சியை கைவிடாதீர்கள். விடாமுயற்சியுடன் வேலையைத் தொடருங்கள்.

10. ஸ்மார்ட் வேலை போதும்; கடின உழைப்பை விட ஸ்மார்ட் வொர்க் சிறந்தது.  வெற்றியை அடைவதற்கான திட்டம் தீட்டி அதற்கான வழிமுறைகளை தெளிவாக சிந்தித்து உங்களுடைய திறமைகளை மனதில் கொண்டு ஸ்மார்ட்டாக செயல்பட்டாலே நீங்கள் வெற்றியடைய முடியும்.

✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.