உங்கள் கனவு நனவாக.

கனவு என்பது ஒவ்வொரு மனிதனின் தூக்கத்தில் உலா வரும் உள் மன வெளிப்பாடாகும். 

கனவு காணாத மனிதனே இல்லை என்னும் அளவிற்கு மனிதனின் இயல்பான செயலாய் இந்தக் கனவு இருந்து வருகிறது. 

சிலர் கடைசி வரைக்கும் கனவு கண்டே பொழுதைக் கழிப்பார்கள். இது கனவுகளுக்கு மட்டுமே உள்ள உரிய சிறப்புத் தன்மை ஆகும். 

கனவுகள் பற்றி ஒரு போதும் கவலை வேண்டாம். ஐ.ஏ.எஸ் வேலையோ அல்லது சாதாரண அலுவலக வேலையோ, என்னவாக இருந்தாலும் அது நமது கனவு. 

அந்த கனவை அடைய கடுமையாக உழைத்து வாழ்வில் போராடி வெற்றிப் பெறுவது மட்டுமே லட்சியமாகச் சிலர் கொண்டுள்ளனர்.

உயர்ந்த கனவுகளுடன் சாதனைகளை நோக்கி உத்வேகத்துடன் போராட வேண்டும்.

கனவுதான் தன்னம்பிக்கை என்பதால், வெற்றி பெற வேண்டும் என கனவு காணுங்கள். எண்ணம் உயர்வாக இருந்தால் மனம் எழுச்சி பெறும்.. 

கடும் உழைப்பு, அர்ப்பணிப்புடன் கூடிய பணி, சாதிக்க வேண்டும் என்ற உத்வேகம் இருந்தால் சாதனை புரிவது எளிது.

ஆம்.,நண்பர்களே...!

நமது எண்ணங்கள் உயர்வாக இருந்து, செயலும்,அதைத் தொடர்ந்தால் சிகரங்கள் சாத்தியம் ஆகின்றன...

கனவை நனவாக்க விரும்பினால் கடுமையான உழைப்பினை விலையாகத் தர நாம் தயராக இருக்க வேண்டும்.

உடுமலை சு தண்டபாணி

✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.