சிறுநீர் கூறும் முக்கிய அறிகுறிகள்.

உடலிலிருந்து வெளியேறும் கழிவுகள் கூட, உங்கள் உடலில் என்ன பிரச்சினை உள்ளது என்பதைக் கூறக்கூடும். ஆனால், இந்த அவசர உலகில், இயற்கை உபாதைகளை வெளியேற்றும்போது, அவற்றை திரும்பிப் பார்க்கக் கூட பலருக்கு நேரம் இருப்பதில்லை.

ஆனால், சிறுநீர் என்ன நிறத்தில் உள்ளது என்பது முதல் அது தெளிவாக உள்ளதா, கலங்கலாக உள்ளதா என்பது வரை, அனைத்தும் கவனிக்கப்பட வேண்டிய அடிப்படை ஆரோக்கியக் குறைபாடுகளின் அறிகுறிகளாக அமையலாம்.

சராசரியாக, ஒரு நபர் ஒரு நாளைக்கு ஆறு முதல் ஏழு முறை சிறுநீர் கழிக்கிறார், ஆனாலும், தன் சிறுநீர் எப்படி உள்ளது என்பதை கவனிப்பவர்கள் குறைவே. சிறுநீரில் இந்த மாற்றங்களில் ஏதேனும் ஒன்றை நீங்கள் கவனித்தால், உங்கள் மருத்துவரிடம் ஆலோசனை பெறுவது நல்லது.

சிறுநீர் பொதுவாக மஞ்சள் நிறத்தில் இருந்து ஆம்பர் நிறத்தில் இருக்க வேண்டும். சிறுநீர் கழிக்கும் வெவ்வேறு நிறங்கள், வெவ்வேறு விஷயங்களைக் குறிக்கும். மேலும், சிறுநீர் கழிக்கும் போது ஏற்படும் வலி, சிறுநீர் பாதையில் தொற்று ஏற்பட்டுள்ளதன் அறிகுறியாகவும் இருக்கலாம் அல்லது மோசமான சூழ்நிலையில் சிறுநீரக நோயாகவும் குறிக்கலாம்.

📌உங்கள் உடல்நலம் பற்றி உங்கள் சிறுநீர் என்ன சொல்கிறது?

✅தெளிவான சிறுநீர்

சிறுநீர் முற்றிலும் தெளிவாக இருந்தால், அது நீங்கள் மிக அதிக அளவு தண்ணீர் குடித்திருப்பதற்கான அறிகுறியாக இருக்கலாம். நீங்கள் மிக அதிக அளவில் தண்ணீர் குடித்தால், அதிகப்படியான நீரை வெளியேற்றுவது சிறுநீரகங்களுக்கு கடினமான வேலையாகிவிடக்கூடும், மேலும் இரத்தத்தில் உள்ள சோடியம் நீர்த்துப்போகும். அரிதாக உயிருக்கு ஆபத்தான சந்தர்ப்பங்களில் இது hyponatremia என்னும் பிரச்சினையாக மாறலாம். 

✅ஆரஞ்சு நிற சிறுநீர்

உங்கள் சிறுநீர் ஆரஞ்சு நிறத்தில் இருந்தால், நீங்கள் போதுமான அளவு தண்ணீர் குடிக்கவில்லை என்று பொருள். இதனால், நீரிழப்பு ஏற்படலாம். அதே நேரத்தில், நீங்கள் வெளிர் நிறத்தில் மலம் கழிக்கிறீர்கள் என்றால், இது உங்கள் பித்த நாளத்தில் உள்ள பிரச்சனை காரணமாகவும் இருக்கலாம் என்பதை கவனத்தில் கொள்வது நல்லது.

சிவப்பு அல்லது இளஞ்சிவப்பு சிறுநீர்

சிறுநீர் சிவப்பு அல்லது இளஞ்சிவப்பு நிறத்தில் இருந்தால், அது நீங்கள் சாப்பிட்ட ஏதோ உணவிலுள்ள ஒரு நிறமியிலிருந்து அது வந்திருக்கலாம். இருப்பினும், இது புரோஸ்டேட், சிறுநீரக கற்கள் அல்லது சிறுநீர்ப்பையில் உள்ள கட்டிகளின் அறிகுறியாகவும் இருக்கலாம் என்பதையும் கவனத்தில் கொள்ளவேண்டும். 

✅பழுப்பு சிறுநீர்

சிறுநீர் பழுப்பு நிறத்தில் இருந்தால், அது நீரிழப்பு, உங்கள் உணவுப்பழக்கம், மருந்துகளின் பக்க விளைவு அல்லது ஒருவேளை, கல்லீரல் நோயின் அறிகுறியாக இருக்கலாம்.

✅கலங்கலான சிறுநீர்

சிறுநீர் தெளிவாக இல்லாமல், கலங்கலாக இருந்தால், இது நீரிழப்பு அல்லது சிறுநீர் பாதை நோய்த்தொற்று (UTI), நாள்பட்ட நோய் அல்லது சிறுநீரக நிலைமைகளையும் குறிக்கலாம். உங்கள் சிறுநீர் கலங்கலாகவும் நுரையுடனும் இருந்தால், உங்களால் முடிந்தவரை விரைவில் மருத்துவ உதவியை நாட வேண்டும்.

✅சிறுநீர் கழிக்கும்போது வலி

சிறுநீர் கழிக்கும் போது எரிச்சல் உணர்வு ஏற்பட்டாலோ, அல்லது வலியை உணர்ந்தாலோ அது உங்களுக்கு சிறுநீர்ப் பாதையில் தொற்று இருப்பதற்கான அறிகுறியாக இருக்கலாம். 

பெண்கள் இந்த அறிகுறிகளை அனுபவிக்கும் போது அது பொதுவாக ஒரு சிறுநீர்ப் பாதை தொற்றாக இருக்கக்கூடும். ஆனால் ஆண்களுக்கோ, அது பெரும்பாலும் சிறுநீர்ப்பை மற்றும் புரோஸ்டேட் பிரச்சனைகளால் ஏற்படலாம்.

கர்ப்பிணிகளுக்கு இந்த அறிகுறிகள் ஏற்பட்டால், அவர்கள் உடனடியாக மருத்துவ உதவியை நாட வேண்டும்.

✅சிறுநீரக நோயின் அறிகுறிகள்

👉குறைவான சிறுநீர் வெளியேறுதல்

👉அடிக்கடி சிறுநீர் கழிக்க வேண்டும் போன்ற உணர்வு

👉சிறுநீரில் இரத்தம் வெளியேறுதல்

👉நுரையுடன் சிறுநீர் வெளியேறுதல்

உங்களுக்கு சிறுநீரகப் பிரச்சினை இருக்குமானால், இந்த அறிகுறிகள் மட்டுமின்றி, தூக்கமின்மை, சோர்வாக உணர்தல், கவனம் செலுத்துவதில் சிக்கல்கள், கைகால்களில் வீக்கம், முகத்தில் வீக்கம் மற்றும் தசைப்பிடிப்பு முதலான அறிகுறிகளும் ஏற்படக்கூடும் என்பதையும் கவனத்தில் கொள்ளவும்.

✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.