உங்கள் வெற்றிக்கு உதவும் ஐவர் யார் தெரியுமா?

வாழ்க்கையில் அனைவருமே வெற்றி பெறத்தான் விரும்புவார்கள். ஆனால் மிகச் சிலர் மட்டுமே தங்கள் முயற்சிகளில் வெற்றி பெறுகிறார்கள். வெற்றிக்கு உதவும் ஐவர் யார் என்று இந்த கட்டுரையில் பார்க்கலாம்.

1. தெளிவான இலக்கு

வாழ்க்கையில் என்ன வேண்டும் என்பதில் மிகத் தெளிவான இலக்கு வேண்டும். அது இருந்தால் மட்டுமே அதை நோக்கி நமது முயற்சியும் செயல்களும் இருக்கும். உங்கள் இலக்கு சிறியதாகவோ பெரியதாகவோ இருக்கலாம்.

2. தன்னம்பிக்கை

‘’என்னால் என்னுடைய இலக்கில் கவனம் வைத்து வெற்றி அடைய முடியும்.  அதற்கு தேவையான எல்லா தகுதிகளும் எனக்கு உள்ளன’’ என்ற அசைக்க முடியாத தன்னம்பிக்கை ஒருவருக்கு கட்டாயம் இருக்க வேண்டும்.

3. தைரியம்

இலக்கும், தன்னம்பிக்கையும் மட்டும் இருந்தால் போதாது. அதை செயல்படுத்துவதற்கு உரிய துணிச்சலும் வேண்டும். சிலர் மனதளவில் இலக்கை நினைத்துக் கொண்டு அதை செய்ய மாட்டார்கள். செய்வதற்கு அச்சப்படுவார்கள். இதை செய்தால் தவறாகி விடுமோ என்ற பயத்தை தூக்கி எறிந்து துணிச்சலுடன் காரியத்தில் இறங்க வேண்டும். 

4. முயற்சி; மேலே குறிப்பிட்ட மூன்றையும் துணையாக கொண்டு முயற்சிகளில் இறங்க வேண்டும். அதாவது செயலில் இறங்க வேண்டும்.

5. மனஉறுதி; நிறைய வெற்றியாளர்கள் சொல்லும் ஒரு கருத்து என்ன தெரியுமா? ‘வாழ்க்கையில் எல்லோருமே வெற்றி பெற முடியும். பெரும்பான்மையானவர்கள் தங்கள் முயற்சியில் பாதி தூரம் அல்லது 75% அடைந்தவுடன் அவநம்பிக்கையுடன் தங்கள் முயற்சியை கைவிட்டு விடுகிறார்கள்’ என்பதுதான். 

என்னால் எடுத்த காரியத்தை இறுதிவரை தைரியமாக தன்னம்பிக்கை யுடன் செய்ய முடியும் என்கிற மன உறுதி இருப்பது அவசியம். தோல்வியை சந்தித்தாலும் அதைக் கடந்து வரவேண்டும். நிச்சயம் ஜெயிக்க முடியும் என்கிற மன உறுதி இருந்தால் மட்டுமே மீண்டும் முயற்சிப்பார்கள்.

இந்த ஐவரும்தான் ஒருவருடைய வாழ்க்கையில் வெற்றிக்கு தேவையானவர்கள். இவர்கள் ஐவரும் அவருக்குள்ளேயே இருக்கிறார்கள் என்பது தான் சிறப்பு.

✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.