காலை நேர சிந்தனை

ஒரு கஷ்டம் வரும் போது என்ன செய்வது என்றே தெரியவில்லை என்று பலர் சொல்வதை அடிக்கடி கேட்டு இருக்கிறோம்.

துன்பம் வந்தவுடன் பெரும்பாலும் 

பொதுவாக பலர் செய்வது :

ஜாதகத்தை எடுத்து கொண்டு ஜோஸியரிடம் செல்வோம். சொன்ன பரிகாரத்தை செய்வோம். கஷ்டம் தீரவில்லை என்றால் ஜோஸியரையே மாற்றி விடுவோம்..

இல்லையேல், வாஸ்து பரிகாரம்.வாஸ்து நிபுணர் சொல்வது போல ஒன்று சொந்த வீட்டை விட்டு விட்டு சில காலம் வாடகை வீட்டுக்கு போவோம். அல்லது வாஸ்து படி சரி செய்கிறேன் என்று வீட்டையே தலைகீழாக மாற்றுவோம்.

இன்னும் சிலர் யாரோ இந்த கோயிலுக்கு  சென்று இந்த சாமியை கும்பிட்டால் நல்லது நடக்கும் என்று சொன்னால் கும்பிடும் தெய்வத்தை கூட மாற்றுவோம்.

அடுத்தது கஷ்டம் தீர யாகம், பூஜை, ஷேத்திராடனம்.

ஏதாவது shortcutல், பிரச்னை தீராதா என்ற மன ஓட்டத்திலேயே அலைபாய்வோம்.

எவ்வளவு செய்தும் கஷ்டம் தீரவில்லை, என்ன தெய்வம் இது என்று கடவுளை குறை  கூறிவிட்டு சோர்ந்து உட்காருவோம்.

துன்பத்தில் இருக்கும் போது மனஅலை நீளம் Normalஐ விட அதிகமாக இருக்கும். கவலையால் பதட்டமாக இருக்கும். எந்த முடிவு எடுத்தாலும் தப்பு தப்பாக இருக்கும்.

இப்படி ஒரு முறை செய்து பாருங்கள் : 

இது பல தன்னம்பிக்கை வல்லுனர்கள்

கூறியது. அருட்தந்தை கூட கவலை ஒழித்தலில் கூறியிருப்பார்.

முதலில் நமது பிரச்னை என்ன என்று 

ஒரு பேப்பரில் தெளிவாக எழுதுவோம். பார்ப்பதற்கு எளிமையாக இருக்கும். நமக்குள்ளேயே குழப்பி கொண்டு இராமல், எழுதும் போது பிரச்னைக்கு ஒரு தெளிவான வடிவம் கொடுக்கிறோம். பிரச்னையின் ஆழம் புரியும்.

பிரச்னை தெளிவாக புரிந்த பிறகு, 

solutions தீர்வுகளை, எப்படி 

இருந்தாலும் பரவாயில்லை, ஒன்றன் கீழ் ஒன்றாக எழுதினால், நாம் எத்திசையில் பயணிக்க வேண்டும் என்று புரியும்.

Practical  ஆக எது செய்தால் 

சரியாக வரும் என்று ஓரளவு புரியும்.

யோசிக்க யோசிக்க, இன்னும் பல பரிணாமங்களில், தீர்வுகள் வரும்.

வேறு ஒன்றுமில்லை. மன அலை நீளம் குறைந்து, மனம் அமைதி நிலையில் இருந்தால், நம்மோடு பிரபஞ்சமும் கைகோர்த்து விடும். நம் தகுதிக்கேற்ப தீர்வுகள் சிந்தனை ஆக மலரும்.

✅மன அலை நீளம் குறைய என்ன செய்வது?

தியானம்தான். புற உலக சிந்தனைகளை மறந்து உங்களுக்குள் மூழ்குங்கள்.

தியானம் எல்லாம் எனக்கு தெரியாது என்றால், Just அமைதியாக அமர்ந்து  உங்கள் சுவாசத்தை கவனியுங்கள். பதட்டமான சுவாசத்தின் நீளம் மெல்ல மெல்ல குறைந்து, அமைதி நிலைக்கு வந்து விடுவீர்கள்.

தேவை அமைதியான மனநிலை.

பிரச்னை நம்முடையது நாம்தான் தீர்க்க வேண்டும்.

ஜோஸியம், வாஸ்து, பூஜை, யாகம் எல்லாம்  நம் பலகீனமான மனதை வலுபடுத்தவே.மனம் உறுதியானால், எல்லாம் சரியாகிவிடும் என்ற நம்பிக்கை மலரவே இத்தனை ஆர்ப்பாட்டங்கள். 

இதில் மனம் அமைதியானால் 

சரியான தீர்வு மலரும். அதுவும் நம் சிந்தனையில் மலரும் தீர்வுதான்.

எதைத் தின்றால் பித்தம் தெளியும் 

என்று அலைந்து, மன அலை நீளம் குறையா விட்டால், இந்த முயற்சிகள் 

கூட எல்லாம் extra fittingsதான்.

மன அமைதியோடு பிரச்னையை அலசி ஆராய்ந்தால், நல்ல தீர்வு வரும்.

✅என்ன ஒரு அறிவுபூர்வமான அணுகுமுறை!?

அனைத்தையும் பேப்பரில் எழுதி, புரிந்து கொண்டு வாழ்ந்துவிட முடியும் என்றால், உலகம் இப்போது இருப்பது போன்று இருக்காது!

ஜோதிடம் என்பது, பலகீனமான மனதை பலப் படுத்துவதற்காக மட்டுமல்ல!

ஒவ்வொரு ஆன்மாவின் பயணம், என்ன திசையை நோக்கி, எத்தனை ஏற்ற இறக்கங்களைத் தாண்டி, அதன் பயணத்தை முடிக்க வேண்டும் என்ற,

விதியின் கட்டளையைப் பற்றிய விளக்கம் தான், ஜாதகம்! ஜோதிடம்!

இதில், பிரச்சனைகளுக்கு மட்டும் தீர்வு தேடுவது என்பது, முட்டாள் தனத்தின் உச்சம்!

ஒட்டுமொத்த வாழ்க்கையின் தத்துவத்தை புரிந்து கொள்ள, பிறந்ததிலிருந்தே வளரும் ஒவ்வொரு கட்டத்திலும் நடக்கும் நடைமுறையோடு, ஜாதகத்தை ஒப்பு நோக்கிஆன்மாவின் தத்துவத்தை, ஆன்மாவின் பயணத்தை உணர வேண்டியது, மிக மிக அவசியம்!..*

By. R. S. Manohar

✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.