சிறுநீரக கல் பிரச்சனை இருக்கா உங்களுக்கு?

சிறுநீரகத்தில் கல் போன்ற பிரச்சனை இருப்பவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள சில உணவுகளை எடுத்துக் கொள்ளாமல் நிச்சயம் இருக்க வேண்டும்.

சிறுநீரகத்தில் பிரச்சினை

தற்போதைய காலகட்டத்தில் சிறுநீரக பிரச்சனை என்பது சிறியவர் முதல் பெரியவர் வரை பலருக்கும் இருந்து வருகின்றது.

இந்த சிறுநீரக பிரச்சனைகளை எதிர் கொண்டவர்கள் அடிக்கடி மருத்துவர்களை சந்திப்பதோடு, அதற்கான சிகிச்சைக்காக பணத்தை அதிகமாக செலவும்  செய்கின்றனர்.

நமது உடலில் தாது சத்துக்கள் அதிகமாக சேரும் போது அவை சிறுநீரகத்தில் படிந்து பிறகு கற்களாக மாறிவிடுகின்றது. பொதுவாக சிறுநீரகத்தில் கல் பிரச்சினை ஏற்பட்டவர்களுக்கு வாழைத்தண்டு சிறந்த மருந்தாக இருக்கிறது.  

✅தவிர்க்க வேண்டிய உணவுகள்

சிறுநீரக கல் பிரச்சனை உள்ளவர்கள் திராட்சை, பாதாம், முந்திரி, பிஸ்தா, வேர்க்கடலை போன்ற உணவுகளை தவிர்க்க வேண்டும். அதைப்போல இனிப்பு பண்டங்கள், சர்க்கரைவள்ளி கிழங்குகளை எடுத்துக் கொள்வதை நிறுத்திக் கொள்ள வேண்டும்.

மேலும் அதிக புரதம் கொண்ட உணவுகளை கட்டாயம் எடுத்துக் கொள்ள கூடாது. அவற்றில் குறிப்பாக ஆட்டு இறைச்சி, முட்டை, மாட்டு இறைச்சி, மீன் இவற்றினை எடுத்துக் கொள்ள கூடாது.

வைட்டமின் சி சத்து அதிகம் கொண்ட தக்காளி, ஆரஞ்சு, எலுமிச்சை ஆகியவற்றை எடுத்துக் கொண்டால் சிறுநீரக கல் பிரச்சனை அதிகமாகும்.

சிறுநீரக பிரச்சனை இருப்பவர்கள் கற்கள் தானாக சிறுநீர் வழியாக வெளியேற வேண்டுமென்றால் அதிகமாக தண்ணீர் உட்கொள்ள வேண்டும். 

✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.