உடலுக்கு வைட்டமின்-ஏ கட்டாயம் தேவை: ஏன் தெரியுமா?

சிறு வயதில் ஏற்படக்கூடிய உடல் பிரச்னைகள் முதல் வயதானவர்களின் உடல் பிரச்னைகள் வரை வைட்டமின்-ஏ ஆதிக்கம் செலுத்துகின்றது. உடலுக்கு ஊட்டமளிக்கும் மிக முக்கியமான வைட்டமின்களில் வைட்டமின்-ஏ அதிகம் பங்காற்றுகின்றது.

✅உடல் பெறும் நன்மைகள் 

கண்களின் ஆரோக்கியத்தில் வைட்டமின்-ஏ முக்கியப் பங்காற்றுகிறது.

வைட்டமின்-ஏ நோயெதிர்ப்பு சக்தி, இனப்பெருக்கம், இதயம், நுரையீரல், சிறுநீரகம் மற்றும் பிற உறுப்புகளின் செயல்பாட்டிற்கு பெரிதும் உதவுகிறது.

சரும ஆரோக்கியம், உடல் வளர்ச்சி மற்றும் உடல் செயல்பாட்டிற்கு மிகவும் இன்றியமையாத வைட்டமினாக இது கருதப்படுகின்றது.

✅வைட்டமின்-ஏ அடங்கியுள்ள உணவுகள்

சிவப்பு, பச்சை, மஞ்சள் மற்றும் ஆரஞ்சு நிறங்களில் காணப்படும் காய்கறிகள் மற்றும் பழங்களில் வைட்டமின்-ஏ சத்து செறிந்து காணப்படுகின்றது. 

முட்டையின் மஞ்சள் கரு, கல்லீரல், பால், சீஸ், மஞ்சள் மற்றும் ஆரஞ்சு நிற பழங்கள், காய்கறிகள் மஞ்சள் மக்காச்சோளம் போன்றவை நிறமி கரோட்டின் கொண்டுள்ளன.

சர்க்கரை வள்ளிக்கிழங்கு, கேரட், ப்ரக்கோலி, கீரைகள், மா, பூசணி, தக்காளி, ஓட்மீல், ஆப்ரிகாட், பட்டாணி, பப்பாளி மற்றும் காலே கீரைகள் போன்றவற்றில் வைட்டமின்-ஏ நிறைந்து காணப்படுகின்றது.

✅வைட்டமின் ஏ நோய்களை உருவாக்கும் ஆண்டிஜென்களுக்கு எதிரான லிம்போசைடிக் அதிகரிப்பதன் மூலம் நோய்த்தொற்றுகளுக்கு எதிராக உடலில் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகின்றது.

✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.