வரலாற்றில் இன்று – 16.01.2024

ஜனவரி 16 கிரிகோரியன் ஆண்டின் 16 ஆம் நாளாகும். ஆண்டு முடிவிற்கு மேலும் 349 (நெட்டாண்டுகளில் 350) நாட்கள் உள்ளன.

✅ இன்றைய தின நிகழ்வுகள்

1547 – நான்காம் இவான் ரஷ்யாவின் சார் மன்னனாக முடிசூடினான்.

1556 – இரண்டாம் பிலிப்பு ஸ்பெயின் மன்னன் ஆனான்.

1581 – இங்கிலாந்து நாடாளுமன்றம் ரோமன் கத்தோலிக்க மதத்தை சட்டத்துக்கெதிரானதாக்கியது.

1707 – ஸ்கொட்லாந்து, இங்கிலாந்துடன் இணைந்து ஐக்கிய இராச்சியம் ஆக உருவாவதற்கு ஏதுவாக அமைந்த சட்டமூலத்தை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றியது.

1761 – பிரித்தானியர் பாண்டிச்சேரியை பிரான்சிடம் இருந்து கைப்பற்றினர்.

1777 – வெர்மொண்ட் நியூயோர்க்கில் இருந்து விடுதலையை அறிவித்தது.

1795 – பிரான்ஸ், நெதர்லாந்தின் யூட்ரேக்ட் என்ற இடத்தைக் கைப்பற்றியது.

1864 – டென்மார்க்கின் மன்னன் ஒன்பதாம் கிறிஸ்டியான் ஜெர்மனி மீது போரைத் தொடுத்தான்.

1909 – ஏர்ணெஸ்ட் ஷாக்கிளெட்டனின் குழுவினர் தென் முனையைக் கண்டுபிடித்தனர்.

1945 – ஹிட்லர் தனது சுரங்க மறைவிடத்திற்கு தப்பிச் சென்றார்.

1956 – எகிப்து அதிபர் கமால் அப்துல் நாசர் பாலஸ்தீனத்தைக் கைப்பற்றுவதாக சூளுரைத்தார்.

1979 – ஈரான் மன்னர் முகமது ரேசா பாஹ்லாவி குடும்பத்துடன் நாட்டை விட்டு வெளியேறி எகிப்தில் குடியேறினார்.

1991 – ஐக்கிய அமெரிக்கா ஈராக் மீது போரை அறிவித்தது.

1992 – எல் சல்வடோர் அதிகாரிகள் தீவிரவாதத் தலைவர்களுடன் மெக்சிக்கோ நகரில் அமைதி ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டனர்.

1993 – விடுதலைப் புலிகளின் தளபதி கேணல் கிட்டு உட்பட 10 விடுதலைப் புலிகள் வெளிநாடொன்றில் இருந்து இலங்கை திரும்புகையில் சர்வதேசக் கடற்பரப்பில் இந்தியக் கடற்படையால் சுற்றி வளைக்கப்பட்ட போது கப்பலை வெடிக்க வைத்து இறந்தனர்.

2001 – கொங்கோ தலைவர் லாரன்ட் கபிலா தனது மெய்க்காவலரால் சுட்டுக் கொல்லப்பட்டார்.

2006 – எலென் ஜோன்சன் சேர்லீஃப்ப் லைபீரியாவின் அதிபரானார். இவரே ஆபிரிக்க நாடொன்றின் முதலாவது பெண் அரசுத் தலைவர் ஆவார்.

2003 – கொலம்பியா விண்ணோடம் தனது கடைசிப் பயணத்தை ஆரம்பித்தது. இது 7 விண்வெளி வீரர்களுடன் 16 நாட்களின் பின்னர் பூமி திரும்புகையில் வெடித்துச் சிதறியது.

2008 – 2002 போர்நிறுத்த உடன்படிக்கையில் இருந்து இலங்கை அரசு அதிகாரபூர்வமாக விலகியது.

    2008 – இலங்கைப் போர் நிறுத்தக் கண்காணிப்புக் குழு இலங்கையில் தனது பணிகள் அனைத்தையும் நிறுத்தியது.

✅ இன்றைய தின பிறப்புகள்

1929 – எஸ். ஜே. தம்பையா, மானிடவியல் ஆய்வாளர், பல்சான் பரிசு பெற்றவர் (இ. 2014)

1932 – டயான் ஃபொஸி, கொரில்லாவைப் பற்றி சிறந்த ஆய்வுகள் நடத்திய அமெரிக்கப் பெண் (இ. 1985)

✅ இன்றைய தின இறப்புகள்

1711 – யோசப் வாஸ் அடிகள், கோவாவில் பிறந்து இலங்கை கத்தோலிக்கருக்கு சேவை செய்வதற்கு வந்த குருவானவர் (பி. 1651)

1967 – ராபர்ட் ஜெ. வான் டி கிராப், அமெரிக்க இயற்பியலாளர் (பி. 1901)

1993 – கேணல் கிட்டு (சதாசிவம் கிருஷ்ணகுமார்), விடுதலைப் புலிகளின் மத்தியகுழு உறுப்பினரும், தளபதியும் (பி. 1961)

✅ இன்றைய தின சிறப்பு நாள்

தாய்லாந்து: ஆசிரியர் நாள்

✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.