ஏறாவூர் வீட்டுத்திட்ட திறப்பு விழாவில் கண்கலங்கினார் சஜித் பிரேமதாசா

ஏறாவூர் வீட்டுத்திட்ட திறப்பு விழாவில் கண்கலங்கினார் சஜித் பிரேமதாசா


முன்னாள் அமைச்சர் சுபையிரின் கோரிக்கைக்கிணங்க உறுகாமத்தில் 75வீடுகள், வடிச்சலில் 50வீடுகள்: அமைச்சர் அமைச்சர் சஜித் இணக்கம்
கடந்த யுத்தத்தின் போது பாதிக்கப்பட்ட உறுகாமம் மற்றும் வடிச்சல் பிரதேசங்களிலும் வீடமைப்பு மற்றும் நிரமாணத்துறை அமைச்சின் ஊடாக நடைமுறைப்படுத்தப்படும் செமட்ட செவன தேசிய வீடமைப்பு திட்டத்தின் கீழ் வீடுகளை நிர்மாணிப்பதற்கு அமைச்சர் சஜித் பிரேமதாசா இணக்கம் தெரிவித்துள்ளார்.

மேற்படி திட்டத்தின் மூலம் ஏறாவூர் ஸம் ஸம் மற்றும் ஸக்காத் கிராமங்களில் நிர்மாணிக்கப்பட்ட வீடுகளை கையளிக்கும் நிகழ்வு இன்று (28) இடம்பெற்றது. இதன்போது வீடமைப்பு மற்றும் நிரமாணத்துறை அமைச்சர் சஜித் பிரேமதாசா பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு வீடுகளை கையளித்தார்.

இந்நிகழ்வில் கலந்துகொண்ட கிழக்கு மாகாண முன்னாள் அமைச்சரும், ஏறாவூர் நகர சபை உறுப்பினரும், பிரதேச ஒருங்கிணைப்புக்குழு இணைத்தலைவருமான எம்.எஸ்.சுபையிர் யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட உறுகாமம் மற்றும் வடிச்சல் போன்ற பிரதேசங்களிலும் மேற்படி வீடுகளை அமைத்துத்தருமாறு அமைச்சர் சஜித் பிரேமதாசாவிடம் எழுத்து மூலம் வேண்கோள் விடுத்தார்.

1990 ஆண்டு காலப்பகுதியில் ஏற்பட்ட அசாதாரன சூழ்நிலை காரணமாக மேற்குறித்த பிரதேசங்களில் வாழ்ந்த மக்கள் இடம்பெயர்ந்ததாகவும், தற்போது ஏற்பட்டுள்ள சமாதான சூழ்நிலையில் அந்த மக்கள் மீண்டும் தமது சொந்த இடங்களில் குடிபெயர்ந்து வாழ்வதாகவும் சுபையிர் அமைச்சரிடம் சுட்டிக்காட்டினார்.

தற்போது உறுகாமம், வடிச்சல் பிரதேசங்களில் குடிபெயர்ந்து வரும் மக்கள் அடிப்படை வசதிகளின்றி பல்வேறு அசௌகரியங்களை எதிர்நோக்குவதாகவும், இதுவரை எந்தவிதமான உதவிகளோ, நிவாரணங்களோ அவர்களுக்கு வழங்கப்படவில்லை எனவும், தற்போது ஓலைக் குடிசைகளிலும் தகரக் கொட்டில்களிலும் அந்த மக்கள் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் எனவும் சுபையிர் அமைச்சரிடம் மேலும் சுட்டிக்காட்டினார்.

மேற்படி சம்பவத்தினை கேட்டு கண்கலங்கிய அமைச்சர் சஜித் பிரேமதாசா உறுகாமத்தில் 75வீடுகளையும், வடிச்சல் பிரதேசத்தில் 50வீடுகளையும் நிர்மாணித்து தருவதாக உறுதியளித்தார். இது தொடர்பில் உடணடியாக நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் தனது அமைச்சின் அதிகாரிகளை பணித்தார்.

எதிர்வரும் ஜுலை மாதம் 28ஆம் திகதி உறுகாமம் மற்றம் வடிச்சல் பிரதேச வீட்டுத்திட்டத்திற்கான அடிக்கல் நடப்படும் என்றும் கறித்த நிகழ்வில் தான் கலந்துகொள்வதாகவும் அமைச்சர் சஜித் பிரேமதாசா முன்னாள் அமைச்சர் சுபையிரிடம் உறுதியளித்ததுடன் மிச்நகர் ஸம்ஸம் மற்றும் ஸக்காத் பிரதேசத்தில் வீடுகளை கையளிக்கும் நிகழ்வில் உரையாற்றும் போதும் இது தொடர்பில் குறிப்பிட்டார்.

தனது கோரிக்கையினை உடனடியாக ஏற்று உறுகாமம், வடிச்சல் போன்ற பிரதேச மக்களுக்கு வீடுகளை நிர்மாணித்து கொடுப்பதற்கு நடவடிக்கைகளை மேற்கொண்ட அமைச்சர் சஜித் பிரேமதாசாவுக்கு முன்னாள் அமைச்சர் சுபையிர் இதன்போது நன்றி தெரிவித்தார்.

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.