எங்கள் நிறுவனத்தின் பெயரை உங்கள் குழந்தைக்கு பெயரை வைத்தால் 18 வருடம் wifi இலவசம்!




ஒலுவில் எம்.ஜே.எம் பாரிஸ்
இலவச வைபை பெற நீங்கள் செய்ய வேண்டியது என்ன
தெரியுமா? உங்கள் குழந்தைக்கு எங்கள் நிறுவனத்தின் பெயரை வைத்தால் போதும் என சுவிட்சர்லாந்தின் Twifi நிறுவனம் விளம்பரம் செய்தது.

சுவிட்சர்லாந்தை சேர்ந்த T wifi என்ற நிறுவனம் தங்கள் நிறுவனத்தின் பெயரை மக்களிடம் கொண்டு செல்ல வித்தியாசமான முறைவில் விளம்பரம் செய்தது.


அந்நிறுவனம் சமீபத்தில் பேஸ்புக்கில் ஒரு விளம்பரம் வெளியிட்டது. அதில், உங்கள் குழந்தைகளுக்கு எங்கள் நிறுவனத்தின் பெயரை வைத்தால் 18 வருடம் வரை வைபை இலவசம் என அறிவித்தது.


மேலும், உங்கள் குழந்தையின் பிறப்பு சான்றிதழை பதிவேற்றவும். உரிய சரிபார்ப்பிற்குப் பிறகு டுவிபி நிறுவனம் உங்களுக்கு 18 வருட இலவச வைபை சேவையை வழங்கும் என்றது. இந்த விளம்பரம் மக்களிடையே மிகுந்த வரவேற்பைப் பெற்றது.


இந்த விளம்பரத்தைப் பார்த்த ஒரு தம்பதியினர் தங்களது பெண் குழந்தைக்கு டுவிபியா ( Twifia ) என பெயரிட்டனர். இதன்மூலம் அந்த பெண் குழந்தைக்கு 18 வருடம் வரை வைபை இலவசமாக கிடைக்கவுள்ளது என அவர்கள் மகிழ்ச்சியுடன் தெரிவித்தனர்.


இதேபோல், மேலும் சில பெற்றோர்கள் தங்களது குழந்தைகளுக்கு அந் நிறுவனத்தின் பெயர் இருக்கும்படி பெயர்கள் வைத்து வருகின்றனர்.


இதுகுறித்து பெற்றோர் கூறுகையில், வைபைக்காக செலவு செய்யும் பணம் தங்கள் குழந்தைகளின் சேமிப்புக் கணக்கில் உள்ளது. அந்த பணத்தைக் கொண்டு அவர்கள் ஒரு காரை வாங்கலாம் அல்லது வேறு எதற்காகவாவது பயன்படும் என நம்புவதாக தெரிவிக்கின்றனர்.

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.