பேலியகொட மீன் சந்தையில் கொரோனா பரவல் ஏற்பட்டமைக்கான காரணம் வெளியானது...

பேலியகொட மீன் சந்தையில் கொரோனா பரவல் ஏற்பட்டமைக்கான காரணம் வெளியானது..

மினுவாங்கொட தொழிற்சாலையின் கொரோனா பரவலின் உப பரவலான பேலியகொட மீன் சந்தையில் கொரோனா பரவல் பணத்தாள் மூலம் ஏற்பட்டுள்ளதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

அதன்படி மீன் சந்தைக்கு இடையில் வைரஸ் பரவ பணத்தாள் தான் முக்கிய காரணம் என விசாரணைகள் மூலம் கண்டறியப்பட்டுள்ளது.

பேலியகொட உப பரவலில் நான்கு நாட்களுக்குள் 5513 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

மேலும் ,சுகாதார பிரிவு மற்றும் பாதுகாப்பு பிரிவு இணைந்து மேற்கொண்ட விசாரணையில் பேலியகொட மீன் சந்தையில் B.1.42 என்ற ஆபத்தான கொரோனா பணத்தாள் ஊடாக பரவியுள்ளது.

பணத்தாள் மற்றும் மீன் சந்தையில் விற்பனை செய்யும் மீன் விற்பனையாளர்களின் எச்சில் ஊடாக இந்த கொரோனா பரவல் ஏற்பட்டுள்ளதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

மினுவாங்கொட கொரோனா பரவல் கடந்த மாதம் 3ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்ட நிலையில் அதனை தொடர்ந்து உப பரவலாக பேலியகொட கொரோனா பரவல் ஒக்டோபர் மாதம் 21ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.