பயணிகள் போக்குவரத்து வானங்களில் 10 ஆசனங்களுக்கு மேல் இருந்தால், இனி கட்டாயம் செய்ய வேண்டியது.

 பயணிகள் போக்குவரத்து வானங்களில் 10 ஆசனங்களுக்கு மேல் இருந்தால், இனி கட்டாயம் செய்ய வேண்டியது.


10 ஆசனங்களை விடவும் அதிக ஆசனங்களில் பயணிகளை அழைத்து செல்லும் வேன், பஸ் உள்ளிட்ட வாகனங்கள் கட்டாயம் பயணிகள் போக்குவரத்து அனுமதிப் பத்திரத்தை பெற்றுக்கொள்ள வேண்டும் என பஸ் போக்குவரத்து சேவை, ரயில் பெட்டிகள் மற்றும் மோட்டார் வாகன இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவிக்கின்றார்.

இதன்படி, பொது போக்குவரத்து பஸ்கள், அலுவலக சேவையில் ஈடுபடும் பஸ்கள் உள்ளிட்ட ஏனைய சேவைகளில் ஈடுபடும் பஸ்கள், பாடசாலை வேன்கள் உள்ளிட்ட அனைத்து பயணிகள் போக்குவரத்து வாகனங்களும் இந்த அனுமதிப் பத்திரத்தை கட்டாயம் பெற்றுக்கொள்ள வேண்டும் என அவர் குறிப்பிடுகின்றார்.

3 வாரங்கள் சாரதிகளுக்கு பயிற்சிகள் வழங்கப்பட்டு, சாரதி பயணிகள் போக்குவரத்திற்கு தகுதியானவர் என பிரதேசத்திற்கு பொறுப்பான அதிகாரி பரிந்துரை செய்ததன் பின்னர், தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவினால் பயணிகள் போக்குவரத்துக்கான அனுமதிப் பத்திரம் வழங்கப்படும் அவர் கூறியுள்ளார்.

✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.