குழந்தைகளுக்குப் பயமுறுத்தி உணவை ஊட்டுவதற்காக, வீட்டுக்குள் பாம்பு புகுந்ததற்காக 119 அவசர அழைப்புக்கு Call எடுக்கும் பொதுமக்கள்.

 குழந்தைகளுக்குப் பயமுறுத்தி உணவை ஊட்டுவதற்காக, வீட்டுக்குள் பாம்பு புகுந்ததற்காக 119 அவசர அழைப்புக்கு Call எடுக்கும் பொதுமக்கள்.


 பொலிஸ் அவசர தொலைபேசி இலக்கமான 119க்கு நாளொன்றுக்கு 1,800க்கு மேற்பட்ட அழைப்புகள்

கிடைப்பதாகத் தெரிவித்த பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் பிரதி பொலிஸ்மா அதிபருமான அஜித் ரோஹன, இதில் பல விநோத அழைப்புகளும் வருவதாகத் தெரிவித்தார்.

இதற்கமைய, தமது குழந்தைகளுக்குப் பயமுறுத்தி உணவை ஊட்டுவதற்காக பொலிஸ் அவசர தொலைபேசி இலக்கத்துக்கு அழைப்புகள் வருவதாகவும் தெரிவித்த அவர், வீட்டுக்குள் பாம்பு வந்துவிட்டதாக கூறியும் 119க்கு அழைப்பதாகவும் தெரிவித்தார்.

எனவே, இவ்வாறான அழைப்புகளை முன்னெடுக்காமல். அவசரமான விடயங்களுக்கு மாத்திரம் 119ஐ அழைக்குமாறு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.