185 தொலைபேசி அழைப்புக்களை ஏற்காத கல்வி அமைச்சின் அதிகாரிகள் – 186வது அழைப்பிற்கு பதிலளித்துள்ளனர்.

185 தொலைபேசி அழைப்புக்களை ஏற்காத கல்வி அமைச்சின் அதிகாரிகள் – 186வது அழைப்பிற்கு பதிலளித்துள்ளனர்.

மாணவியொருவர் அவசர தேவையொன்றுக்கான பதிலை பெற்றுக்கொள்வதற்காக பத்தரமுல்லை கல்வி அமைச்சுக்கு 185 தடவைகள் தொலைபேசி அழைப்புக்களை மேற்கொண்ட நிலையில், 186வது தொலைபேசி அழைப்பின் போதே, பதில் கிடைத்துள்ளதாக செய்தியொன்று வெளியாகியுள்ளது.

அநுராதபுரம் பகுதியைச் சேர்ந்த மாணவியொருவர் நேற்றைய தினம் இவ்வாறு தொலைபேசி அழைப்பை மேற்கொண்டுள்ளார்.

நேற்று காலை முதல் மாலை வரை மேற்கொண்ட முயற்சியின் ஊடாகவே, 186வது தொலைபேசி அழைப்புக்கு கல்வி அமைச்சின் அதிகாரிகள் பதிலளித்துள்ளனர்.

கல்வி அமைச்சின் உரிய பிரிவினரை தொடர்புக்கொள்வதற்கு 9 மணி முதல் முயற்சிகளை மேற்கொண்ட போதிலும், 185 அழைப்புக்களுக்கு எந்தவொரு நபரும் ஏற்கவில்லை என கூறப்படுகின்றது.

குறித்த மாணவி, மூன்று தொலைபேசிகளின் ஊடாக, கல்வி அமைச்சை தொடர்புக் கொள்ள முயற்சித்துள்ளதாக அறிய முடிகின்றது.

எனினும், 186வது அழைப்பை ஏற்க பெண் அதிகாரியொருவர், குறித்த மாணவிக்கு பதிலளித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.