வாகனங்களை இறக்குமதி செய்ய அனுமதி கிடைத்தது - நிதி அமைச்சு.

வாகனங்களை இறக்குமதி செய்ய அனுமதி கிடைத்தது - நிதி அமைச்சு.

வாகன இறக்குமதிக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ள போதிலும் அபிவிருத்தி நடவடிக்கைகளுக்கு தேவையான வாகனங்களை இறக்குமதி செய்வதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக நிதி அமைச்சு தெரிவித்துள்ளது.

கொரோனா வைரஸ் தாக்கம் கட்டுப்படுத்தப்பட்டு வரும் சூழலில் ஏனைய தனிப்பட்ட வாகனங்களுக்கான இறக்குமதிக்கு விதிக்கப்பட்டுள்ள தடையினை தளர்த்துவதற்கு எதிர்வரும் நாட்களில் நடவடிக்கை எடுக்கவுள்ளதாக நிதியமைச்சின் செயலாளர் எஸ்.ஆர் ஆட்டிகல தெரிவித்துள்ளார்.

டொலர் தொடர்பான பிரச்சினையே தற்போது ஏற்பட்டுள்ளது.

இதனால் இறக்குமதியினை கட்டுப்படுத்தி ஏற்றுமதியினை அதிகரிப்பதற்கு இயலுமானவரை நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது.

தடுப்பூசிகள் செலுத்துவதற்கான வசதிகள் போதியளவு கிடைக்கப்பெற்று கொவிட் 19 தொற்று கட்டுப்படுத்தப்பட்டால் வெளிநாட்டு சுற்றுலாப்பிரயாணிகள் நாட்டை வந்தடைவர்.

அதன் பின்னர் அமெரிக்க டொலருக்கான ரூபாவின் பெறுமதி அதிகரிக்கும்.

எனவே, அதுவரையில் அபிவிருத்தி பணிகளுக்கான வாகனங்களை மாத்திரம் இறக்குமதி செய்வதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக நிதியமைச்சின் செயலாளர் எஸ்.ஆர் ஆட்டிகல தெரிவித்துள்ளார்.

✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.