தென் ஆபிரிக்காவில் பரவும் கொவிட் வைரஸ், இலங்கையில் பரவினால்? – நடப்பது என்ன?

தென் ஆபிரிக்காவில் பரவும் கொவிட் வைரஸ், இலங்கையில் பரவினால்? – நடப்பது என்ன?

தென் ஆபிரிக்காவில் பரவி வரும் புதிய வீரியம் கொண்ட கொவிட் வைரஸ், நாட்டிற்குள் பரவ ஆரம்பிக்கும் பட்சத்தில், புதிய கொவிட் கொத்தணியொன்று உருவாகும் அபாயம் காணப்படுவதாக இலங்கை மருத்துவ சங்கத்தின் தலைவர் டொக்டர் பத்மா குணரத்ன தெரிவிக்கின்றார்.

கொவிட் தொற்று ஏற்பட்டு குணமடைந்த ஒருவருக்கும் இந்த வைரஸ் தொற்று ஏற்படுவதற்கான சாத்தியம் காணப்படுவதாகவும் அவர் கூறியுள்ளார்.

இந்த வைரஸ் பரவும் பட்சத்தில், அவசர சிகிச்சை பிரிவுகளின் தேவை அதிகரிக்கும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அதேபோன்று, இந்த வைரஸ் பரவுமாக இருந்தால், உயிரிழப்போரின் எண்ணிக்கையும் அதிகரிக்கும் என அவர் அபாயம் வெளியிட்டுள்ளார்.

இந்த வைரஸ் தொற்றை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வருவதற்கு ஒக்ஸ்போர்ட் எஸ்ட்ராசெனிகா தடுப்பூசி போதுமானது கிடையாது என இலங்கை மருத்துவ சங்கத்தின் தலைவர் டொக்டர் பத்மா குணரத்ன தெரிவிக்கின்றார்.

✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.