வெளிநாடுகளிலிருந்து வருகைத் தருவோரை, வீடுகளில் தனிமைப்படுத்த நடவடிக்கை.

வெளிநாடுகளிலிருந்து வருகைத் தருவோரை, வீடுகளில் தனிமைப்படுத்த நடவடிக்கை.

கொவிட் – 19 தடுப்பூசியை பெற்றுக்கொண்டு, நாட்டிற்கு வருகைத் தரும் இலங்கையர்களை, தமது வீடுகளிலேயே தனிமைப்படுத்துவது தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது.

இந்த விடயம் தொடர்பிலான தீர்மானத்தை, சுகாதார சேவை பணிப்பாளர் நாயகம் எதிர்வரும் 15ம் திகதி அறிவிப்பார் என கொவிட்-19 தடுப்புக்கான தேசிய செயற்பாட்டு மையத்தின் பிரதானியும், இராணுவ தளபதியுமான ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவிக்கின்றார்.

கொவிட் – 19 தடுப்பூசியை பெற்றுக்கொண்டு, இலங்கைக்கு வருகைத் தரும் இலங்கையர்களுக்கு, பி.சி.ஆர் பரிசோதனை நடத்தப்பட்டு, அவர்களை தனிமைப்படுத்தாது விடுவிக்க தான் யோசனையொன்றை முன்வைத்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

இந்த விடயம் தொடர்பில் சுகாதார அமைச்சின் தொழில்நுட்ப குழுவுடன் கலந்துரையாடல்களை நடத்தி, விரைவில் தீர்மானமொன்றை சுகாதார சேவை பணிப்பாளர் நாயகம் அறிவிப்பார் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.