இன்று பிற்பகல் ஏற்பட்ட திடீர் தீ விபத்து; 20 வீடுகள் தீக்கிரை.

 இன்று பிற்பகல் ஏற்பட்ட திடீர் தீ விபத்து; 20 வீடுகள் தீக்கிரை.


மஸ்கெலியா – குயின்ஸ்லேன்ட் பிரிவிலுள்ள 20 வீடுகளை கொண்ட குடியிருப்பு தொகுதியொன்றில தீ பரவியுள்ளது.

இந்த தீ விபத்து இன்று பிற்பகல் 2 மணியளவில் ஏற்பட்டுள்ளதாகவும் இதானால் 20 சுமார் 20 வீடுகள் தீக்கிரையாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

தீயை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளில் இராணுவம் மற்றும் பொலிஸார் ஈடுபட்டனர். 

இந்த தீ பரவலினால் உயிர் சேதங்கள் எதுவும் ஏற்படவில்லை என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

எனினும், பாரிய பொருட் சேதம் ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் கூறுகின்றனர்.

பாதிக்கப்பட்ட மக்கள், பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

தீ பரவியமைக்கான காரணம் கண்டறியப்படாத நிலையில், மஸ்கெலிய மற்றும் ஹட்டன் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

இதேவேளை, நுவரெலியா – ராகலை பகுதியில் கடந்த சில தினங்களுக்கு முன்னரும் லயின் குடியிருப்பொன்றில் தீ பரவியிருந்ததுடன், முழு குடியிருப்பும் தீக்கிரையாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.