கொவிஷீல்ட் தடுப்பூசியின் 2 ஆவது சொட்டு அடுத்த மாதம்
கொவிஷீல்ட் தடுப்பூசியின் 2 ஆவது சொட்டு அடுத்த மாதம்
நாட்டு மக்களுக்கு கொவிஷீல்ட் தடுப்பூசியின் இரண்டாவது சொட்டை அடுத்த மாதம் 19 ஆம் திகதி பின்னர் வழங்குவதற்கு எதிர்பார்த்திருப்பதாக தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.
அந்த பிரிவின் பிரதானி விசேட வைத்தியர் சுதத் சமரவீர கொழும்பில் இன்று (29) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதுதொடர்பாக தெரிவிக்கையில், சீனா பாமின் தடுப்பூசியின் முதல் சொட்டு மருந்துகள் எதிர்வரும் 31 ஆம் திகதி நாட்டை வந்தடையும் என்று எதிர்ப்பார்ப்பதாக கூறினார்.
ஏப்ரல் 19 ஆம் திகதி வழங்குவதற்கு எதிர்பார்த்துள்ள 2 ஆவது கொவிட் தடுப்பூசி மருந்து நாட்டில் உண்டு. உலக சுகாதார அமைப்பு 12 வாரங்களின் பின்னர் இந்த 2 ஆவது சொட்டை வழங்குவது பொருத்தமானது என சிபாரிசு செய்துள்ளது. 12 வாரங்களின் பின்னர் 2 ஆவது தடுப்பூசியை பெற்றுக்கொள்ள முடியாமல் போகும் பட்சத்தில் முடிந்த வரையில் விரைவாக அதனை பெற்றுக்கொள்வதன் மூலம் நோயேதிர்ப்பு சக்தியை மீண்டும் பெற்றுக்கொள்ள முடியும் என்றும் அவர் தெரிவித்தார்.
சீனா பாமிடம் இருந்து 6 இலட்சம் தடுப்பூசிகள் இலங்கைக்கு நன்கொடையாக வழங்கப்பட்டுள்ளது. தகுதியானவர்களை அடையாளம் கண்டு நாம் இதனை வழங்குவதற்கு திட்டமிட்டுள்ளோம் என்று அவர் மேலும் தெரிவித்தார்.
கொவிட் தடுப்பூசியின் முழுப் பயன் பெற - இரண்டாவது டோஸ் அவசியம்.
கொவிட் வைரஸூக்கு எதிரான எதிர்ப்பு சக்தி முழுமையாக கிடைப்பதற்கு தடுப்பூசியின் இரண்டாம் டோஸை பெற்றுக் கொள்ள வேண்டியது அவசியம் என ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழக பேராசிரியர் சந்திம ஜீவந்தர தெரிவித்துள்ளார்.
முதல் டோஸாக அஸ்ட்ரா ஸெனெக்கா பெற்றுக் கொண்டவர்கள், இரண்டாவது டோஸாக அதே தடுப்பூசியை பெற்றுக் கொள்ள வேண்டியது அவசியம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இரண்டு தடுப்பூசி வகைகளில் இரண்டு டோஸ்களை ஏற்றிக் கொள்வது தொடர்பில் தொடர்ந்தும் உலகளவில் சோதனைகள் இடம்பெற்று வருகின்றன.
இதனிடையே, நாட்டில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கையில் சற்று குறைவு ஏற்பட்டிருப்பதாக இராணுவ தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா குறிப்பிட்டுள்ளார்.
✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶
✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶
No comments
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்
இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.