முதலாம் திகதி முதல் நாடு முழுவதும் விசேட போக்குவரத்து நடைமுறை.

 முதலாம் திகதி முதல் நாடு முழுவதும் விசேட போக்குவரத்து நடைமுறை.


எதிர்வரும் பண்டிகை காலத்தில் வீதி விபத்துக்களை குறைக்கும் நோக்குடன், ஏப்ரல் மாதம் முதலாம் திகதி முதல் விசேட போக்குவரத்து நடைமுறைகளை முன்னெடுக்க திட்டமிட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

குறிப்பாக தூர இடங்களை நோக்கி பயணிக்கும் பஸ்களில், சிவில் ஆடையில் பொலிஸ் உத்தியோகத்தர்களை கடமைகளில் ஈடுபடுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ் மாஅதிபர் அஜித் ரோஹன தெரிவிக்கின்றார்.

பண்டிகை காலத்தில் விபத்துக்களை குறைப்பதே, தமது நோக்கம் என அவர் கூறுகின்றார்.

நாட்டில் ஏப்ரல் மாதம் 10ம் திகதி முதல் ஏப்ரல் மாதம் 20ம் திகதி வரையான காலப் பகுதியிலேயே அதிகளவிலான வாகன விபத்துக்கள் பதிவாகும் காலம் என அவர் குறிப்பிடுகின்றார்.

இந்த காலப் பகுதியில் கடுமையான போக்குவரத்து நடைமுறைகள் முன்னெடுக்கப்படும் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் மேலும் கூறுகின்றார்.

இதேவேளை, நாட்டின் பல்வேறு பகுதிகளில் 4 முச்சக்கரவண்டி மற்றும் மோட்டார் சைக்கிள் கொள்ளை சம்பவங்கள் பதிவாகியுள்ளன.

திட்டமிட்ட வகையில் முச்சக்கரவண்டி மற்றும் மோட்டார் சைக்கிள் கொள்ளை சம்பவங்களில் சிலர் ஈடுபட்டுள்ளமை குறித்து, தகவல் கிடைத்துள்ளதாகவும், இந்த விடயம் தொடர்பில் அதிக கவனம் செலுத்தப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் மேலும் தெரிவிக்கின்றார்.

✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.