அசாத் சாலியை விசாரிக்க 5 பேரை கொண்ட பொலிஸ் குழு நியமனம்.

அசாத் சாலியை விசாரிக்க 5 பேரை கொண்ட பொலிஸ் குழு நியமனம்.

தேசிய ஐக்கிய முன்னணியின் தலைவர் அசாத் சாலி அண்மையில் வெளியிட்ட சர்ச்சைக்குரிய கருத்துக்கு எதிராக பொலிஸ் தலைமையகம் மற்றும் குற்றப் புலனாய்வு பிரிவு ஆகியவற்றில் பல முறைப்பாடுகள் பதிவாகியுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பிரதி பொலிஸ் மாஅதிபர் அஜித் ரோஹன தெரிவிக்கின்றார்.

இந்த முறைப்பாடுகளை விசாரணை செய்வதற்காக, பிரதி பொலிஸ் அத்தியட்சகர் தலைமையில் 5 பேரை கொண்ட குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.

இந்த சம்பவம் குறித்து உடனடி விசாரணைகளை ஆரம்பிக்குமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

அசாத் சாலியின் கருத்தினால் இனங்கள் மற்றும் மதங்களுக்கு இடையில் பிரச்சினை ஏற்படுகின்றதா என்பது குறித்தும் விசாரணை நடத்தப்படவுள்ளதாக அவர் தெரிவித்தார்.

அசாத் சாலியிடம் வாக்குமூலம் பெற்றுக்கொள்ளப்பட்டதன் பின்னர் எதிர்கால நடவடிக்கைகளை எடுக்கவுள்ளதாக பிரதி பொலிஸ் மாஅதிபர் அஜித் ரோஹன குறிப்பிட்டார். 

✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶




No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.