7 கோடி ரூபாய்க்கும் அதிகமான கஞ்சா சிக்கியது.. இரண்டு பேர் கைது.

 7 கோடி ரூபாய்க்கும் அதிகமான கஞ்சா சிக்கியது.. இரண்டு பேர் கைது.


7 கோடியே 19 இலட்சம் ரூபா பெறுமதியான கேரள கஞ்சா

 பொதிகளுடன் இரண்டு சந்தேக நபர்களை கடற்படையினர் கைது செய்துள்ளனர்.

யாழ்-வெற்றிலைக்கேணி பகுதியில் முன்னெடுக்கப்பட்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் போதே குறித்த நபர்கள் கைது செய்யப்பட்டனர்.

இதன்போது, சந்தேக நபர்களிடமிருந்து 239 கிலோ 850 கிராம் கேரள கஞ்சா போதைப்பொருள் கடற்படையினரால் மீட்கப்பட்டுள்ளது.

குறித்த கஞ்சா தொகையை கொண்டு செல்வதற்கு பயன்படுத்தப்பட்ட டிப்பர் வாகனம் ஒன்றையும் கடற்படையினர் கைப்பற்றியுள்ளனர்.

சம்பவத்தில் 31 மற்றும் 34 வயதுடைய வெற்றிலைக்கேணி மற்றும் ஆழியவளை பிரதேசங்களைச் சேர்ந்த இருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டனர்.

சந்தேக நபர்கள் மற்றும் கைப்பற்றப்பட்ட பொருட்களை பளை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதோடு, சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை பளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.